இந்த கார் மட்டும் இல்லைனா மக்கள் நிஸான் நிறுவனத்தையே மறந்திருப்பாங்க! நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஒற்றை மாடல்

இந்த கார் மாடல் மட்டும் இல்லைனா மக்கள் நிஸான் நிறுவனத்தையே மறந்திருப்பாங்கபோல என கூறும் அளவிற்கு விற்பனையில் அந்த நிறுவனத்தின் ஒற்றை கார் மாடல் மட்டும் சக்கைபோடு போட்டு இருக்கின்றது. மேக்னைட் கார் மாடலே அது ஆகும். இது நிறுவனத்தின் மலிவு விலை சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.

இந்த காரை நிஸான் நிறுவனம் 2020 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்குக் களமிறக்கியது. இப்போதும் அந்த காருக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது. இதன் விளைவாக கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் 24 சதவீதம் விற்பனை வளர்ச்சியை நிஸான் பெற்றிருக்கின்றது.

Nissan magnite front design

ஒட்டுமொத்தமாக 2,617 யூனிட்டு நிஸான் புதிய கார்களே சென்ற மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன. இது முந்தைய 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் 507 யூனிட்டுகள் அதிகம் ஆகும். 2,110 யூனிட்டுகள் மட்டுமே கடந்த ஆண்டின் இதே மாதத்தில் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காருக்கு இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகள் சிலவற்றிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் மேக்னைட் கார் மாடலை மட்டும் நிறுவனம் 632 யூனிட்டுகள் வரை கடந்த ஏப்ரலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Nissan magnite interior design

இன்றைய நிலவரப்படி இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தைகய மலிவு விலையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்ற காரணத்தினாலேயே நாட்டில் நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் வகையில் அது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் நிறுவனத்தை ட்ரைபர், டஸ்டர் ஆகிய கார் மாடல்கள் தாங்கி பிடித்து வந்தநிலையில் தற்போது இந்த பாரத்தை மேக்னைட் சுமக்கத் தொடங்கி இருக்கின்றது. நிறுவனம் புதிய மாசு உமிழ்வு விதிகள் காரணமாக இப்போது மேக்னைட் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Nissan magnite side design

அதன் புகழ்பெற்ற மலிவு விலை ட்ரைபர் உள்ளிட்ட கார் மாடல்களை புதிய மாசு உமிழ்வு பிஎஸ்-6 கட்டம் இரண்டின் காரணமாக விற்பனையில் இருந்து அகற்றி இருக்கின்றது. இது தற்காலிக வெளியேற்றம் என்று கூறப்படுகின்றது. ஆகையால், வெகு விரைவில் புதிய அப்டேட்டுகளுடன் அந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர, நிஸான் நிறுவனம் விரைவில் அதன் உலக புகழ்பெற்ற எக்ஸ்-ட்ரையல் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கார் மீண்டும் இந்திய சந்தையில் கால் தடம் பதிக்க இருப்பது வாகன ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

புதிய தலைமுறை எக்ஸ்-டிரையல் ஏற்கனவே உலக சந்தையில் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இந்தியாவிலும் அந்த காரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் நிஸான் களமிறங்கி இருக்கின்றது. அதுதவிர, காஸ்காய் மற்றும் ஜூக் ஆகிய இரு எஸ்யூவி கார் மாடல்களையும் நிறுவனம் இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், இந்த கார் மாடல்கள் எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. அதேவேளையில், எக்ஸ்-டிரையலை இந்த ஆண்டிற்கு நிஸான் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், மற்றுமொரு புகழ்பெற்ற கார் மாடலான டஸ்டரையும் அது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் இப்போதும் நிஸான் மேக்னைட் காருக்கு டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. லட்சத்திற்கும் அதிகமானோர் காரை புக் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், இன்னும் ஒரு சில மாதங்களுக்கு மேக்னைட் காரின் விற்பனை புகழும்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 2, 2023, 9:11 [IST]
English summary
Nissan registers wholesales of 3249 units in 2023 april
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X