மலிவு விலையில் கிடைத்த மேக்னைட் ரெட் எடிசன் இனி கிடைக்காது.. லட்சங்களை கூடுதலாக கொடுத்தாலும் வாங்க முடியாது

இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த சிறப்பு பதிப்பு வாகன மாடல்களில் நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் (Nissan Magnite Red Edition) காரும் ஒன்று ஆகும். இந்த வெர்ஷனை இந்தியாவில் இருந்து நிறுவனம் அகற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, விற்பனையில் இருந்து வெளியேற்ற இருக்கின்றது.

இந்த தகவல் நிஸான் மேக்னைட் பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. வெளியேற்றத்தை உறுதிப்படுத்தும் விதமாக மேக்னைட் எடிசன் பற்றிய அனைத்து விபரங்களும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றது. ஆகையால், ஒரு யூனிட்டைகூட புக் செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கின்றது.

ரெட் எடிசன்

நிறுவனத்தின் இந்த செயல் அடுத்து வரும் மாதங்களில் ரெட் எடிசனை புக் செய்யலாம் நினைத்துக் கொண்டிருந்தவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இது நிறுவனத்தின் திடீர் அறிவிப்பு ஆகும். முதன் முதலில் இந்த காரை 2022 ஜூலையிலேயே நிஸான் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

மேக்னைட் பக்கம் வாடிக்கையாளர்களை கூடுதலாக ஈர்க்க வேண்டும் என்கிற காரணத்திற்காக ரெட் எடிசன் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. வழக்கமான நிஸான் மேக்னைட் கார் மாடலைக் காட்டிலும் சற்று சிறப்பு அலங்காரங்களை அதிகளவில் கொண்டதாக மேக்னைட்டின் ரெட் எடிசன் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

ரெட் எடிசன்

காரின் வெளிப்புறம் மற்றும் உட்பக்கத்தின் சில பகுதிகளில் சிவப்பு நிற அக்செண்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இது காருக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கக் கூடிய ஓர் அம்சமாக இருந்தது. ஆகையால், கணிசமான அளவில் வாடிக்கையாளர்கள் இந்த வெர்ஷனுக்கு கிடைத்து வந்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை.

ஆமாங்க, பெரிய அளவில் இந்த சிறப்பு வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் காரணத்தினாலேயே தற்போது நிறுவனம் முன் அறிவிப்பு இன்றி மேக்னைட் ரெட் எடிசனை வெளியேற்றிருப்பதாக கூறப்படுகின்றது. உயர்நிலை தேர்வான மேக்னைட் எக்ஸ்வி (XV) வேரியண்டிலேயே இந்த ரெட் எடிசனை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரெட் எடிசன்

எக்ஸ்வி ரெட் (XVRed), எக்ஸ்வி டர்போ ரெட் (XVTurboRed) மற்றும் எக்ஸ்வி டர்போ சிவிடி ரெட் (XVTurboCVT Red) ஆகிய தேர்வுகளிலேயே ரெட் எடிசன் விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த தேர்வுகள் அனைத்தும் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. அதேவேளையில், இந்த காலியான இடங்களை புதிய வேரியண்டுகளால் நிஸான் நிறுவனம் நிரப்பி இருக்கின்றது. அதாவது, புதிய மூன்று தேர்வுகளை நிஸான் மேக்னைட் காரில் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது.

புதிய வேரியண்டுகளின் விபரம்

  • எக்ஸ்வி பிரீமியம் (ஓ) - XV Premium (O)
  • எக்ஸ்வி பிரீமியம் (ஓ) டூயல் டோன் - XV Premium (O) dual-tone
  • எக்ஸ்வி பிரீமியம் (ஓ) டர்போ சிவிடி - XV Premium (O) Turbo CVT
ரெட் எடிசன்

இந்த மூன்று வேரியண்டுகளிலும் நிஸான் நிறுவனம் பிரீமியம் அம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது. ஆகையால், இவற்றின் விலையும் சற்று காஸ்ட்லியாக உள்ளன. ரூ. 20 ஆயிரம் ஸ்டாண்டர்டு வேரியண்டுகளைக் காட்டிலும் அதிகமாகவே இவற்றிற்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நிஸான் மேக்னைட் இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

1.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆகியவையே அவை ஆகும். இரு எஞ்ஜின்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி தேர்வுகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி நிஸான் மேக்னைட் ரூ. 5.97 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 28, 2023, 8:29 [IST]
English summary
Nissan removed magnite red edition from official site
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X