டொயோட்டா ஃபார்ச்சூனரின் கோட்டையை தரைமட்டமாக்க வரும் புது கார்! ஒட்டுமொத்தமா எல்லாரும் இந்த பக்கம் சாய போறாங்க!

நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) காரை காட்சிக்கு வைத்திருந்தது. இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காருக்கு நேரடி போட்டியாக நிஸான் எக்ஸ்-ட்ரெயில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டின் மைய பகுதியில், நிஸான் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெனால்ட்-நிஸான் நிறுவனங்களின் சிஎம்எஃப்-சி பிளாட்பார்ம் அடிப்படையில் எக்ஸ்-ட்ரெயில் கார் உருவாக்கப்பட்டுள்ளது. சிபியூ (CBU - Completely Built-Up) வழியில், இந்த கார் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் கோட்டையை தரைமட்டமாக்க வரும் புது கார்! ஒட்டுமொத்தமா எல்லாரும் இந்த பக்கம் சாய போறாங்க!

ஹைப்ரிட் கார்!

இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதுதான் இந்திய சந்தைக்கான நிஸான் நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் காராக இருக்கும். சர்வதேச சந்தைகளுக்கான நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில், மைல்டு ஹைப்ரிட் வெர்ஷனானது, 2 வீல் டிரைவ் ஆப்ஷனுடன் வருகிறது.

இது அதிகபட்சமாக 163 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 9.6 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இது பெற்றுள்ளது. மறுபக்கம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வெர்ஷனானது, 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில், 2 வீல் டிரைவ் மாடல் அதிகபட்சமாக 204 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் கோட்டையை தரைமட்டமாக்க வரும் புது கார்! ஒட்டுமொத்தமா எல்லாரும் இந்த பக்கம் சாய போறாங்க!

மறுபக்கம் ஆல் வீல் டிரைவ் மாடல் அதிகபட்சமாக 213 பிஎஸ் பவரையும், 525 என்எம் டார்க் திறனையும் வழங்கும். நிஸான் எக்ஸ்-ட்ரெயின் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வெர்ஷன் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 8 வினாடிகளிலும் (2 வீல் டிரைவ்), 7 வினாடிகளிலும் (ஆல் வீல் டிரைவ்) எட்டி விடும். நிஸான் எக்ஸ்-ட்ரெயின் காரின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 4680 மிமீ, 2065 மிமீ மற்றும் 1725 மிமீ ஆகும்.

அதே நேரத்தில் இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2750 மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 205 மிமீ ஆகவும் உள்ளது. சர்வதேச சந்தைகளில் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் வசதிகளுக்கு மட்டும் பஞ்சமிருக்குமா என்ன? இந்திய சந்தைக்கான நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்ளோ வசதிகளா!

இதன்படி அடாஸ் (ADAS - Advanced Driver Assistance System), 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியுடன் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, 10.8 இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெயில்கேட் என நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால்!

எனவே இந்திய சந்தையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு, நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் வடிவில் மிகவும் கடுமையான சவால் காத்து கொண்டுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மட்டுமல்லாது, எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) போன்ற இந்த செக்மெண்ட்டை சேர்ந்த மற்ற கார்களுக்கும், நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் விற்பனையில் மிகவும் கடுமையான சவாலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 5, 2023, 23:55 [IST]
English summary
Nissan x trail toyota fortuner rival india launch details
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+