14 வருட பழைய காரில் போனது அவங்களா?.. ஒட்டுமொத்த இந்தியாவும் ஆச்சரியப்படுது... இப்பவும் புதுசுபோல மின்னுது!

14 வருட பழைய காரில் இந்தியாவின் முக்கிய நபர் ஒருவர் வலம் வந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. யார் அந்த நபர்? அவர் பயன்படுத்தியது என்ன கார்? என்பது உள்ளிட்ட சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியும் ஒருவர் ஆவார். இவரது வீட்டில் இல்லாத கார்களே இல்லை என மிக உறுதியாக கூறிவிட முடியும். ஏனெனில் அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் மிகப் பெரிய கார் காதலர்களாக இருக்கின்றனர். இதன் விளைவாக இந்தியாவில் வேறு யாரிடமும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் கார்கள் அவர்கள் வீட்டில் இருக்கின்றது.

Nita ambani 14 year old mercedes car

உலகின் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ், ஃபெர்ராரி, பென்ட்லீ, பென்ஸ் கார்களும் அவர்களிடம் பயன்பாட்டில் இருக்கின்றன். மேலும், அந்த கார்களை நிறுத்துவதற்கு என்றே முகேஷ் அம்பானியின் வீட்டில் தனி தளமே அமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கார் நிறுத்தும் இடம் ஜியோ கராஜ் என அழைக்கப்படுகின்றது.

இதில், எண்ணற்ற அரிய வகை கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா முகேஷ் அம்பானி, ரொம்ப ரொம்ப பழைய கருப்பு நிற கார் ஒன்றில் வலம் வந்திருக்கின்றார். அவரின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Nita ambani old mercedes

பல புத்தம் புதிய ஆடம்பர கார்கள் அவர்களின் வீட்டில் இருக்கும் நிலையில் நீதா அம்பானி, பழைய காரை பயன்படுத்தி இருக்கின்றார். இதுவே பலரின் ஆச்சரியத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. அவர், பயன்படுத்தியது 14 ஆண்டுகள் பழைய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் சொகுசு காராகும்.

இது ஓர் ஆறாம் தலைமுறை எஸ்-கிளாஸ் 600 மாடல் ஆகும். இந்த காரிலேயே அவர் சமீபத்தில் வலம் வந்திருக்கின்றார். இதுபற்றிய வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. வன்கேட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு, வீடு திரும்பும்போதே 14 ஆண்டுகள் பழைமையான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரில் நீதா அம்பானி பயணித்திருக்கின்றார்.

முகேஷ் அம்பானியின் ஜியோ கராஜில் இருக்கும் மிகவும் பழைமையான சொகுசு வாகனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரை தவிர, நீதா அம்பானியின் கான்வாயில் இன்னும் பல சொகுசு கார்கள் இடம் பெற்றிருந்தன. சில்வர் நிற 5ஆம் தலைமுறை எஸ்-கிளாஸ் மற்றும் வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் உள்ளிட்ட சொகுசு கார் மாடல்களும் இடம் பெற்றிருந்தன.

இதுதவிர, நீதா அம்பானியின் பாதுகாப்பிற்காக உடன் வந்த பாதுகாப்பு வீரர்கள் மிகவும் விலையுயர்ந்த லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரில் வந்ததையும் நம்மால் காண முடிகின்றது. இந்த கார்களுடன் சேர்த்து எம்ஜி குளோஸ்டர், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா உள்ளிட்ட கார்களும் நீதா அம்பானியின் கான்வாயில் இடம் பெற்றிருந்தன.

இந்த கான்வாயில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த கார்களின் மதிப்பு ரூ. 8 - ரூ. 9 கோடி இருக்கும். அந்த அளவிற்கு விலை உயர்ந்த கார்களே நீதா அம்பானியின் கான்வாயில் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இவை அனைத்தைக் காட்டிலும் நீதா அம்பானி பயன்படுத்திய 14 ஆண்டுகள் பழைய பென்ஸ் கார் சற்று ஸ்பெஷலான ஒன்றாக காட்சியளிக்கின்றது.

இது ஓர் 2009 மாடல் ஆகும். அந்த காரில் 5.5 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி12 பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 510 பிஎஸ் மற்றும் 830 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது 14 ஆண்டுகள் பழைய காராக இருந்தாலும், இப்போதும் பார்க்க புத்தம் புதிதுபோல் காட்சியளிக்கின்றது. அந்த அளவிற்கு அக்காரை முகேஷ் அம்பானி பராமரித்து வருகின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லத்தில் பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இசட் பிளஸ் பாதுகாப்பு அம்பானியின் குடும்பத்தினர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Tuesday, May 9, 2023, 12:07 [IST]
English summary
Nita ambani travels 14 year old mercedes s class
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+