இந்தியாவில் லாரிகளுக்கு ஏசி கட்டாயம்! லாரி டிரைவர் எல்லாம் இவருக்கு கோவில் கட்டி கும்புட போறாங்க!

இந்தியாவில் செயல்படும் சரக்கு லாரிகளுக்கு ஏசியை கட்டாயமாக வேண்டும் என்ற சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன்படி என்2 மற்றும் என்3 ரக லாரிகளுக்கு ஏசி கட்டாயமாக்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சரக்கு போக்குவரத்து என்பது மிக முக்கியமான ஒன்று மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை பெற வேண்டும் என்றால் ஒரு சரக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர வேண்டும். சரக்குகளை நகர்த்தும் பணியில் மிக முக்கியமான பங்கை வகிப்பது லாரிகள் தான். இந்தியாவில் பெரும்பாலான உள்நாட்டு சரக்கு போக்குவரத்து எல்லாம் லாரிகளில் தான் நடக்கிறது.

nitin gadkari approves ac truck draft notification

இந்தியாவைப் பொறுத்தவரை கார்கள் மற்றும் பஸ்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சாதனங்களுக்கு அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சட்டங்கள் இருக்கிறது. ஆனால் லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களுக்கு பாதுகாப்பு மற்றும் அதை ஓட்டும் நபர்களுக்கான வசதிகள் குறித்த எந்தவித சட்டங்களும் இதுவரை பெரிய அளவில் இல்லை.

பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் இந்தியாவில் மாறி மாறி இருக்கும் பருவநிலையையும் பொருட்படுத்தாமல் கடும் வெயில் மற்றும் கடும் குளீர் ஆகியவற்றில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இப்படியாக செயல்படும் லாரிகளுக்கு டிரைவர் மற்றும் கிளீனர் இருக்கும் பகுதியில் ஏசியை பொருத்ததுவதை கட்டாயமாக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னரே தெரிவித்திருந்தார்.

nitin gadkari approves ac truck draft notification

தற்போது அதற்கான சட்ட வரைவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் சமீபத்தில் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியாவில் இயங்கும் என் 2 மற்றும் என் 3 ரக லாரிகளில் கேபினில் ஏசி கட்டாயமாக்கப்பட வேண்டும் என இந்த சட்ட வரைவு கூறுகிறது. இது புதிதாக லாரிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அதை செய்ய வேண்டும் ஏசி இல்லாத லாரிகளை விற்பனைக்கு கொண்டு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. அதற்குள் இதற்கான ஏற்பாடுகளை லாரி தயாரிப்பாளர்கள் செய்து கொள்ள வேண்டும். அதற்காக தற்போது அவர்கள் தயாரித்து வரும் டிசைனில் தேவையான மற்றங்களை செய்து கொள்ள வேண்டும். இதற்காக தான் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் 15 நாளில் வரும் என தெரிகிறது.

nitin gadkari approves ac truck draft notification

இந்தியாவில் பொதுவாக சரக்கு லாரிகள் மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது. என்1, என்2 மற்றும் என்3 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதில் என் 1 ரக லாரிகள் அதிகபட்சமாக 3.5 டன் எடை கொண்ட சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

என்2 ரக லாரிகளை பொறுத்தவரை 3.5 டன் முதல் 12 டன் வரையிலான எடை கொண்ட சரக்குகளை எடுத்து செல்லும் லாரிகளாக இருக்கும். என் 3 ரக லாரிகளை பொருத்தவரை 12 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட சரக்குகளை எடுத்து செல்லும் லாரிகளாக இருக்கும்.

இதில் என்2 மற்றும் என்3 ரக லாரிகளுக்கு மட்டுமே ஏசி கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது மொத்தமாக சரக்குகளை எடுத்து நீண்ட தூரம் பயணிக்கும் படி தான் இந்த லாரிகள் எல்லாம் இயக்கப்படுகிறது இந்த லாரிகளில் தான் ஏசியை கட்டாயம் பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடவுள்ளது.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் விளக்கம் அளித்த மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது:"இந்தியாவில் சாலை பாதுகாப்புக்கு டிரக் டிரவர்கள் மிக முக்கிய பங்கை வைக்கின்றனர். சாலையில் அவர்கள் தான் அதிகம் பயணிக்கின்றனர். இந்த முடிவு டிரக் டிரைவர்களுக்கு வசதியான வேலை சூழல்களை வழங்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை டிரக் டிரைவர்களுக்காக இந்திய அரசு கொண்டுவரும் ஒரு மைல் கல் முடிவாகவே பார்க்க வேண்டும். இந்த சட்ட வரைவு மத்திய அரசு டிரைவர்களுக்கான பிரச்சனைகளை தீர்க்கும் வகையில், அதே நேரம் அவர்களுக்கான திறனை அதிகரிக்கும் வகையிலும் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கிறது." என்று கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிரக் டிரைவர்கள் கடுமையான பருவநிலை பிரச்சனை காரணமாக கடும் வெயில் மற்றும் கடும் குளிர் என இரண்டிலும் மாறி மாறி பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. நீண்ட நாட்களாக இது கண்டு கொள்ளப்படாத பிரச்சனையாக இருந்த நிலையில் தற்போது இந்த லாரிகளில் ஏசி பொருத்தும் சட்டம் இந்த பிரச்சனைகளுக்கு நிச்சயம் ஒரு தீர்வளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 7, 2023, 9:53 [IST]
English summary
Nitin gadkari mandates ac installation in truck cabins approves draft notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X