அடுத்த 5 வருசத்துல இந்தியா தான் நம்பர் 1 இடத்துல இருக்கும்! மத்திய அமைச்சர் சொன்ன புதிய ஜோசியம்!

இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆட்டோமொபைலுக்கான உலகின் மிகப்பெரிய சந்தையாக மாறும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அரசால் தான் இது சாத்தியமாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் குஜராத்தில் ஒரு பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி குறித்துப் பேசினார் அதில் அவர் இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஆட்டோவில் சந்தையாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.

nitin gadkari on automobile industry

அவர் பேசியதாவது :"தற்போது இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை ஆண்டுக்கு 7.5 லட்சம் கோடி வர்த்தகத்தைச் செய்து வருகிறது. இந்தத் துறை இந்தியாவில் 4.5 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது. இந்தியாவிற்கு ஜிஎஸ்டி வரிக் கட்டும் மிகப்பெரிய துறையாக இந்த ஆட்டோமொபைல் துறை இருக்கிறது.

முன்னர் இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இருந்தது. அமெரிக்கா சீனா ஜப்பானுக்குப் பிறகு நான்காவது இடத்திலிருந்து. தற்போது இந்தியா ஜப்பானில் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இதற்கு இந்தியாவில் ஆட்டோமொபைல் பயன்பாட்டாளர்கள் அதிகரித்தது தான் முக்கியமான காரணம்.

nitin gadkari on automobile industry

அமெரிக்கா சீனாவிற்குப் பிறகு தற்போது இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஆட்டம் பேசியதாக இருக்கிறது. ஆனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடும் உலகிலேயே அதிகமாக ஆட்டோமொபைல் விற்பனையாகும் நாடாக இந்தியா மாறிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தற்போது ஏழு புள்ளி ஐந்து லட்சம் கோடியாக இருக்கும் இந்திய ஆட்டோமொபைல் துறையின் மதிப்பு இன்னும் ஐந்து ஆண்டுகளில் 15 லட்சம் கோடியாக மாறும் பிரதமர் மோடி தலைமையிலான அரசால் மட்டுமே இது சாத்தியமாக இருக்கிறது. இந்தியா உலகின் சூப்பர் எக்னாமிக் பவர் கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறப்போகிறது.

nitin gadkari on automobile industry

சூப்பர் எக்னாமிக் பவர் கொண்ட நாடாக இந்தியா மாற வேண்டும் என்றால் அதற்குத் தொழில்நுட்ப வளர்ச்சி மிக முக்கியமானதாகும். இந்தியாவில் மிகப்பெரிய இன்ஜினியரிங் மேன்பவர் இருக்கிறது. அது மட்டும் இல்ல மிகப்பெரிய மூலப் பொருட்களின் கூடாரமாக இந்தியா இருக்கிறது. இதனால் மிகப்பெரிய தொழில்வாய்ப்பு உருவாக்கப்போகிறது.

இந்தியா தற்போது ஆண்டுக்கு 16 லட்சம் கோடி அளவிலான பெட்ரோல் டீசலுக்காக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. அதே நேரம் இந்தியாவில் பசுமையான ஹைட்ரஜன் அமோனியா எரிபொருள் மூலம் வாகனங்களை இயக்கம் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருகிறோம். எலெக்ட்ரிக், ஹைட்ரஜன், ஹைபிரிட் உள்ளிட்ட வாகனங்களின் தயாரிப்பும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

தற்போது பெட்ரோல் டீசலுக்காக கச்சா எண்ணிய இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியா விரைவில் எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும் என்பதில் எந்தவித அச்சமும் தேவையில்லை"எனப் பேசினார். இதன் மூலம் இந்தியாவில் ஆட்டோமொபைல்துறைக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பது தெளிவாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. மத்திய அமைச்சர் சொன்னது போல விரைவில் நம்பர் 1 இடத்திற்கு வருவதில் எந்த விதமான மாற்று கருத்தும் இருக்க முடியாது. இந்தியா வேகமாக வளர்ந்துவருகிறது. என்பதற்கு இது நிச்சயமான அறிகுறி!

More from DriveSpark

Article Published On: Saturday, June 3, 2023, 18:30 [IST]
English summary
Nitin gadkari predicted indian automobile industry to be number 1 in five years
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X