வாங்கினது என்னமோ ஒத்த காருதான்.. ஆனா ஒட்டுமொத்த திரை உலகையும் திரும்பி பார்க்க வச்சுட்டாரு நிவின் பாலி..

மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நிவின் பாலி. நேரம், 1983, பிரேமம் மற்றும் மூத்தோன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரைப் படங்களில் அவர் நடித்திருக்கின்றார். இந்த படங்களே நிவின் பாலிக்கு சினிமா இன்டஸ்ட்ரியில் மிகப் பெரிய நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தவை ஆகும்.

குறிப்பாக, 1983 திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது கேரளாவில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவருக்கு தமிழிலும் ரசிக பட்டாளம் உண்டு. மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளிவந்த பிரேமம் படமே இவருக்கு தமிழில் ரசிகர்கள் பட்டாளம் தோன்ற காரணமாக அமைந்தது.

Nivin Pauly BMW 740i

இந்த அளவிற்கு முன்னணி நடிகராக விளங்கிக் கொண்டிருக்கும் நிவின் பாலியே தற்போது மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் சொகுசு வசதிகள் நிறைந்த 740ஐ (740i) காரையே அவர் வாங்கி இருக்கின்றார்.

இது ஓர் செடான் (Sedan) ரக லக்சூரி கார் ஆகும். இந்த காரை மலையாளம் மற்றும் தமிழ் என இரு திரையுலகிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் பிரபல நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான ஃபகத் ஃபாஸிலும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மிக சமீபத்திலேயே 740ஐ சொகுசு காரை அவர் வாங்கினர். இவர்களைத் தொடர்ந்தே தற்போது நிவின் பாலியும் 7 சீரிஸ் சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். இன்னும் பல இந்திய நடிகர்கள் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த சொகுசு கார் இந்தியாவில் ரூ. 1.70 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

அது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலை உயர்ந்த காரே மலையாள திரை உலகினன் ஃபேவரிட்டான சொகுசு காராக தற்போது மாறி இருக்கின்றது. இந்த காரில் ஆடம்பர வசதிகளை மிக தாராளமாக பிஎம்டபிள்யூ நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது.

இதன் காரணத்தினாலேயே நடிகர்களிடத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள் சிலரின் பிரியமான காராகவும் அது காட்சியளிக்கின்றது. இந்த காரில் 280 kW பவரை வெளியேற்றக் கூடிய பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜினால் வெறும் 5.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இதுதவிர நவீன கால தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் 740ஐ செடான் சொகுசு காரில் பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட 14.9 அங்குல வளைவான திரை ஒன்று வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், பின் பக்க பயணிகள் பயணத்தின்போது பொழுதைபோக்கும் விதமாக 31.3 இன்ச் 8கே ரெசல்யூசன் (8k Resolution) வசதிக் கொண்ட தியேட்டர் ரக திரை (TV)-யும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த டிவி உடன் அமேசான் ஃபையர் வசதி கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன் பனோரமா ஸ்கை ரூஃப் (லைட் வசதி உடன்), ஸ்போர்ட்ஸ் வகை இருக்கைள், ரியர் டோர்களில் தொடு திரை, போவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் டைமண்ட் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் சாவி, ரிமோட் சாஃப்ட்வேர் அப்கிரேட் என பலதரப்பட்ட அம்சங்கள் இந்த காரில் அள்ளி அள்ளிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதன் காரணத்தினாலேயே நடிகர்களும், தொழிலதிபர்களும் இந்த ஆடம்பர காரை கோடிக் கணக்கான ரூபாயைக் கொட்டிக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் ஆரம்பித்திருக்கின்றது. குறிப்பாக, கடந்த சில வருடங்களாக சொகுசு கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு இரட்டிப்பாகி இருப்பதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகின்றது. வரும் நாட்களிலும் அவற்றிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Article Published On: Saturday, August 5, 2023, 15:08 [IST]
English summary
Nivin pauly buys bmw 740i luxury sedan car here is more details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+