கார் மீது ஆசிட் ஊற்றி நாசம் செய்த ஊழியர்! எதற்குச் செய்தார் எனத் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்!

வேலை விட்டுத் துரத்திய கோபத்தில் ஊழியர் அப்பார்மெண்டில் இருந்த கார்கள் மீது ஆசிட் ஊற்றி நாசம் செய்த சம்பவம் சமீபத்தில் நொய்டாவில் நிகழ்ந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களையும் இந்த வீடியோவையும் காணலாம் வாருங்கள்.

நம்மில் பலர் காரை நம் பிள்ளைகள் போல பாதுகாப்போம். காரில் சிறு கீறல் விழுந்தால் கூட நம்மால் தாங்க முடியாது. காரை பாதுகாப்பதில் அதிகமாகக் கவனம் செலுத்துவோம், சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் அப்பார்மென்ட் வாழ்க்கை என வாழ்க்கை மாறிவிட்டது. அதனால் அப்பார்மெண்டிற்கு கீழே காருக்கான பார்க்கிங் வழங்கப்பட்டிருக்கும்.

கார் மீது ஆசிட் ஊற்றி நாசம் செய்த ஊழியர்! எதற்குச் செய்தார் எனத் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்!

இப்படியாகச் சமீபத்தில் ஒரு அப்பார்மெண்ட் பார்க்கிங்கில் நின்ற கார்களை ஒருவர் ஆசிட் ஊற்றி கழுவி நாசம் செய்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் ஒருவர் கார்கள் மீது வேண்டுமென்றே ஆசிட்டை ஊற்றிய காட்சிகள் பதிவாகியுள்ளது.

நொய்டாவில் உள்ள செக்டார் 75 பகுதியில் உள்ள ஒரு அப்பார்மெண்டில் கார் கிளினராக இருந்தவர் ராம்ராஜ். அந்த அப்பார்ட்மென்டில் இருந்த சிலருக்கு இவரின் வேலை பிடிக்காததால் இவர் மீது புகார் செய்துள்ளனர். இதனால் சொசைட்டி இவர் மீது நடவடிக்கை எடுத்து இவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதனால் ராம்ராஜ் கோபமடைந்துள்ளனர்.

25 வயதான ராம்ராஜ் தனக்கு வேலை போனதால் ஆத்திரமடைந்து வெளியிலிருந்து ஆசிட் பாட்டிலை வாங்கி வந்து அதை பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த கார் மீது ஊற்றியுள்ளார். இதனால் கார்கள் எல்லாம் சேதமடைந்துள்ளது. இதைக் கண்ட கார் உரிமையாளர்கள் முதலில் இதை யார் செய்தது எனத் தெரியாமல் திணறியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்துப் பார்த்த போது இந்த நாச வேலையை கார் பார்க்கிங்கில் கிளீனராக வேலை செய்த ராம் ராஜ் தான் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பார்ட்மென்ட் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தி ராம்ராஜ் கைது செய்தனர்.

தற்போது ராம்ராஜ் மீது ஐபிசி பிரிவு 427ன் படி வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொதுவாக காரின் பாடிகள் பிளாஸ்டிக் ஃபைபர் மெட்டிரியல் கொண்டு தான் உருவாக்கப்படும். இதனால் இது ஆசிட் பட்டால் அதில் பொசுங்கி நாசமாகிவிடும்.

இதனால் நீங்களும் உங்கள் மீது ஆசிட் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.காரை வாஷ் செய்யும் போதும் ஷாம்பு அல்லது அதற்கான பிரத்தியேக வாஷர் லிக்யூட்களை கொண்டு கழுவுங்கள். வேறு கெமிக்கல் அல்லது சோப்புகள் கலந்தால் அந்த கெமிக்கல் காரின் பாடியையும் அதில் உள்ள பளபளப்பையும் பாதிக்கும். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, March 17, 2023, 21:00 [IST]
English summary
Noida man vandalizing cars in parking CCTV video gone viral
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+