ஓலா ஓனர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்! இலவசமாக ஃபோர்க் மாற்றித் தரப்போவதாக அறிவிப்பு!
ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியே செய்து வருகிறது. தற்போது அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனம் இது தான். இந்நிறுவனத்தின் ஒரு சில ஸ்கூட்டர்களின் முன்பக்க ஃபோர்க் பகுதி உடைவதாகச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களுடன் பதிவுகள் வெளியானது. இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டருக்கான புதிய முன்பக்க ஃபோர்கை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனேவ விற்பனை செய்த ஸ்கூட்டர்களிலும் இந்த ஃபோர்க்கை மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி பழைய ஃபோர்க்கை கழட்டிவிட்டு மாற்றியமைக்கப்பட்ட புதிய "அப்கிரேட்டட் ஃபோர்க்கை " பொருத்துகிறது.

இந்த புதிய வடிவிலான ஃபோர்க் நீடித்த உழைப்பு மற்றும் உறுதித் தன்மை நிறைந்ததாக இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஃபோர்க் மாற்றத்தை இலவசமாகச் செய்து கொள்ளலாம் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக ஸ்லாட் புக்கிங் செய்வது அவசியம். அதற்கான புக்கிங் மார்ச் 22ம் தேதி துவங்குகிறது. அதில் ஸ்லாட்டை புக் செய்துவிட்டு புக் செய்த ஸ்லாட்டில் உங்கள் வாகனத்தில் உள்ள முன்பக்க ஃபோர்க்கை மாற்றிக்கொள்ளலாம்.
சமூகவலைதங்களில் பலர் குழிகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விடம் போது அதில் முன்பக்க ஃபோர்க் உடைந்து விழுந்ததைப் புகைப்படம் எடுத்துப் பதிவிட்டிருந்தனர். இந்த இதனால் காயமும் அடைந்திருந்தனர். ஓலா ஸ்கூட்டரில் கேப்ரியல் நிறுவனத்தின் டிசைனில் உருவாக்கப்பட்ட முப்பக்க சிங்கிள் சைடட் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏஸ்1 ஏர் ஸ்கூட்டரை பொருத்தவரை டெலஸ்கோபிக் ஃபோர்க்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சிங்கிள் சைடட் ஃபோர்க்கை மட்டுமே ஓலா நிறுவனம் மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த மாற்ற புதிய ஸ்கூட்டர்களில் மட்டுமல்லாமல் ஏற்கனவே விற்பனையான ஸ்கூட்டர்களிலும் மாற்றப்படவுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெற முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஓலா ஸ்கூட்டரை விற்க இந்த மாத இறுதிக்குள் 500 ஷோரூம்களை இந்தியாவில் திறக்க முடிவு செய்துள்ளது. முதலில் இந்நிறுவனம் நேரடியாக ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் முயற்சியையே செய்தது. ஆனால் தற்போது அனுபவ மையங்களை உருவாக்கி அதன் மூலமும் விற்பனையைச் செய்து வருகிறது.
ஓலாவை பொருத்தவரை டோர் ஸ்டெப் சர்வீஸை வழங்குகிறது. ஓலா ஸ்கூட்டரை வாங்கியவர்கள் தங்கள் ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டால் ஓலாவை அழைத்து தங்கள் வீட்டில் வைத்தே சர்வீஸை செய்ய முடியும். தற்போது இந்த சேவையை வழங்கி வருகிறது. மேலும் ஆன்லைன் முறையில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
ஓலா நிறுவனத்தின் 80 சதவீதமான வாடிக்கையாளர்கள் அந்நிறுவனம் நிறுவியுள்ள ஷோரூம்களின் 20 கி.மீ சுற்றளவிலேயே அமைந்துள்ளனர். இதனால் அங்கேயே சர்வீஸஅ சென்டர்களையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு டெஸ்ட் ரைடு, ஸ்கூட்டர் குறித்த தகவல்கள், ஸ்கூட்டரை வாங்குவதற்கான உதவி, ஃபைனான்ஸிங் ஆப்ஷன், ஆகியன வழங்கப்படுகிறது.
தற்போது சர்வீஸ் சென்டர்களும் திறக்கப்படவுள்ளன. மேலும் ஓலா நிறுவனம் இந்த ஷோரூம்களை விற்பனைக்கு பிறகான சேவைகளை வழங்கும் நிலையங்களாகவும் செயல்படவுள்ளன. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








