ஓலா கார் இப்படி தான் இருக்கும்! லீக்கான காப்புரிமை புகைப்படம்! எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வரும் 2024 ஆம் ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த காரின் காப்புரிமைக்கான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது. இந்த கார் பார்க்க டெஸ்லா காரை போலவே இருக்கிறது என விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் மிகப்பெரிய புரட்சியை இந்தியாவில் செய்து வருகிறது. கிட்டத்தட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கு நிகராக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையைப் போல நிறுவனம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் காரையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யப் போவதாக முன்னரே அறிவித்திருந்தது.

ola electric car patent image

2024 ஆம் ஆண்டு ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஓலா காரின் காப்புரிமைக்கான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த கார் தற்போது வரை கான்செப்ட் அளவில் தான் இருக்கிறது.

தற்போது லீக்கான இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது ஓலா நிறுவனத்தின் இந்த கார், இந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட இந்த காரின் டீசரில் உள்ள சில அம்சங்களையும் பெற்றிருப்பது தெரிகிறது. ஆனால் இந்த கார் தயாரிப்பு நிலையை எட்டும் போது இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் காரை முதலில் பார்த்தவுடனே நமக்குத் தெரிவது இந்த கார் மினிமலான டிசைன் மொழியைக் கொண்டது என்பதுதான். இந்த கார் பார்க்க டெஸ்லா மாடல் எஸ் மற்றும் மாடல் 3 காரை போன்று வடிவமைப்பில் உள்ளது. செடான் சில்லவுட்டில் பின்பக்கம் ரூப் லைனில் கூப்பே வடிவிலான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

இந்த காரின் பாடி பேனலில் லைன்கள் ஸ்மூத்தாக வழங்கப்பட்டுள்ளது. இது ஏரோ டைனமிக்ஸை மனதில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் வீல்கள் அவுட்டர் எட்ஜ்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீல் பேஸை பெரிதாக்க ஓலா முடிவு செய்துள்ளது. இந்த பெரிதான வில் பேசில் பெரிய பேட்டரியை பொருத்தி விடலாம் என்பதற்காக இந்த வடிவமைப்பைக் கொடுத்துள்ளது.

வழக்கமான இவி டிசைன் போல இந்த காரிலும் முன்பக்க கிரில் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஸ்மூத்தான பம்பர் முன்பக்கத்தில் டாமினேட் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் சைடு பகுதிகளில் ஏர் இன் டேக்கருக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஹெட் லைட்டுகள் சிலிக்கான நேரான கோடுகள் போல வழங்கப்பட்டுள்ளது. இது எல்இடி லைட் பாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டைப் பொருத்தவரை முன்பக்க ஃபென்டர் பகுதியில் ஏர் இன்டேக் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதுபோக கதவுகளில் ஃப்ளாஷ் டோர் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. காரில் சைடு மிர்ருக்கு பதிலாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் டூயல் போனில் ஏரோ டைனமிக் அம்சங்களின் படி வடிவமைக்கப்பட்ட காராக இருக்கிறது.

காப்புரிமை புகைப்படத்தின் அடிப்படையில் இதன் டூயல் டோன் அம்சம் ரூஃபில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான டீசரில் ப்ளூ கிளாஸ் ரூம் போன்ற கார் இருப்பதாகக் காண்பிக்கப்பட்டது. ஆனால் பேட்டன்ட் இமேஜில் முழுமையாக மூடப்பட்ட காராக தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த ஓலா எலெக்ட்ரிக் காரின் உட்புறத்தைப் பொருத்தவரை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்ட டீசரில் பல தகவல்கள் இருக்கிறது. முக்கியமாக இதில் ஆக்டோகோனல் 2 ஸ்போக்ஸ் ஸ்டேரிங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக ப்ரீ ஸ்டாண்டிங் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் மையப்பகுதியில் அகல வாக்கிலான டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காரின் உட்புறத்திலும் மினிமலான டிசைன் மொழியே பின்பற்றப்பட்டுள்ளது. இந்தக் காரின் டிசைனை பொருத்தவரை பெரும்பாலும் பிசிக்கல் கண்ட்ரோல் இல்லாத காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓலா எலெக்ட்ரிக் கார் கொடுத்த தொழிற்நுட்ப அம்சங்கள் குறித்து பெரிய அளவில் இதுவரை தகவல்கள் இல்லை.

இருந்தாலும் இந்த காரில் 70-80 கிலோ வாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்படும் என்றும், இது 500கி.மீ வரை ரேஞ்சை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது போக இந்த காரில் கீ-லெஸ் என்ட்ரி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கான விலை பொருத்தவரை இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை, இந்த கார் ரூ 25 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலாவின் இந்த எலெக்ட்ரிக் காரின் வருகை இந்தியாவிற்கு மிக முக்கியமானது. சர்வதேச அளவில் மட்டும் சிறப்பான, தரமான கார்களை தயாரிக்க முடியும் என்று இருந்த எண்ணத்தை இந்த ஓலா எலெக்ட்ரிக் கார் தவிடு பொடியாக்கும். இந்தியாவிலேயே இது போன்ற கார்கள் சாத்தியம் தான் என்பதை ஓலா நிறுவனம் நிரூபிக்க இது சிறப்பான நேரமாக இருக்கிறது. அதே நேரம் இந்தியாவிலும் இந்த கார்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 16, 2023, 12:07 [IST]
English summary
Ola electric car got testla like design patent image leaked
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+