இந்த ஒரு ஆப்ஷனுக்காக தான் இவ்வளவு நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்! ஓலா கொடுத்த செம அப்டேட்!
ஓலா கேப்ஸ் நிறுவனம் தற்போது டிரைவரால் கேன்சல் செய்ய முடியாத சர்வீஸை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ ட்வீட் செய்துள்ளார். பெங்களூருவில் அதிகமாக கேப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த சர்வீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது பெரு நகரங்களில் ஆப் மூலம் பயன்படுத்தப்படும் கேப்களின் எண்ணிக்கை அதிகமாகவிட்டது. மக்கள் தங்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டு கேபை புக் செய்தால் கேப் வீட்டிற்கே வந்து உங்களை பிக்கப் செய்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குக் கூட்டிச் சென்று விடும். இந்த வசதியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இது எல்லாம் கேட்க நன்றாக தான் இருக்கும். தினமும் கேப் புக் செய்து பயணிப்பவர்களிடம் கேட்டால் தான் அது குறித்த உண்மையான பிரச்சனையே தெரியும். கேப் புக் செய்த பின்பு பல டிரைவர்கள் போன் செய்து எந்த வகையான பணம் கொடுத்து புக் செய்துள்ளனர் எனக் கேட்டு ஆன்லைன் பேமெண்ட் என்றால் கேன்சல் செய்வது, அல்லது ஆப்பில் காட்டப்படும் பணத்தை விட அதிகமாக வசூலிப்பது எனக் காரணங்களுக்காக கேன்சல் செய்யப்படும்.
சில டிரைவர்கள் பிக்கப் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டு இந்த விஷயங்களை எல்லாம் பேசி பின்னர் கேன்சல் செய்வார்கள். இப்படிச் செய்தால் கேப் புக் செய்ய அதிக நேரம் எடுக்கும். இதனால் அடிக்கடி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்குத் தீர்வு சொல்லும் வகையில் ஓலா நிறுவனம் பிரிமியம் பிளஸ் என்ற புதிய வகை புக்கிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆப்ஷனை தேர்வு செய்து புக்கிங் செய்தால் ஒரு முறை கேப் டிரைவர் உங்கள் டிரிப்பை ஏற்றுக்கொண்டு விட்டால் அவரால் உங்கள் டிரிப்பை கேன்சல் செய்ய முடியாது. நீங்கள் கேன்சல் செய்யவில்லை என்றால் அவருக்கு வேறு புக்கிங் வராது. இதனால் நிச்சயம் அந்த கார் உங்களுக்காக வரும். இதனால் டிரைவர்கள் கேன்சல் செய்யும் பிரச்சனை இருக்காது.
இந்த ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது குறித்து ஓலா நிறுவனத்தின் சிஇஓ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரும் இந்த சேவையைப் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஆப்ஷன் அனைவரும் தற்போது வழங்கப்படவில்லை. பெங்களூருவில் அதிகமாக ஓலா புக்கிங் செய்யும் மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆப்ஷன் மூலம் புக் செய்தால் அதில் சிறந்த டிரைவர்கள், டாப் கார்கள் மட்டுமே புக் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். இதில் கேன்சலேஷன் என்பதே இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட் வைரலாக பரவி வருகிறது. பலர் டிரைவர்கள் கேன்சல் செய்வதால் அவதிப்பட்டதற்கு இது தீர்வாக அமைந்துள்ளது. ஆனால் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் அதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து ஆன்லைன் கேப் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் நீண்ட நாட்களாக இப்படியான ஒரு சேவையை தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். டிரைவர்கள் கேன்சல் செய்வதால் தொல்லையைச் சந்திக்கும் பலருக்கு இந்த சேவை வரப்பிரசாதம் தான். தற்போது பெங்களூருவில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆப்ஷன் விரைவில் அனைத்து ஊர்களிலும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









