2024ல் வருது ஓலா எலெக்ட்ரிக் கார்! விலையைக் கேட்டா இப்பவே வாங்க ரெடியாகிடுவீங்க!

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வரும் முயற்சியில் இருப்பது நமக்குத் தெரியும். இந்த கார்கள் 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்குத் தயாராகிவிடும் என ஓலா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்

ஆன்லைன் மூலம் கேப் அக்ரீகேட்டர் சர்வீஸில் தனது பிஸ்னஸை துவங்கிய ஓலா நிறுவனம் அடுத்ததாக எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தனது காலடித் தடத்தைப் பதித்தது. இந்நிறுவனம் இங்கு ஒரு பெரும் புரட்சியே செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிறுவனம் வரும் வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் மந்தமான வரவேற்பு தான் இருந்தது. ஆனால் இன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை பெட்ரோல் ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கிறது.

2024ல் வருது ஓலா எலெக்ட்ரிக் கார்! விலையைக் கேட்டா இப்பவே வாங்க ரெடியாகிடுவீங்க!

முதலில் பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு சிறிதாகத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் முன்னரே ஓலா எலெக்ட்ரிக் கார் என்ற ஒரு விஷயத்தை வடிவமைக்கத் துவங்கிவிட்டது. ஓலா நிறுவனம் ரகசியமாக இதற்கான பணிகளை எல்லாம் துரிதமாகச் செய்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஓலா நிறுவனத்தின் தலைமை ஃபைனான்ஸியல் அதிகாரியாக ஜிஆர் அருண் குமார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தர். அப்பொழுது அவர் ஓலா நிறுவனம் 2024ம் ஆண்டு இரண்டாம் பாதியில் ஓலா நிறுவனம் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்திவிடும் என ஆச்சரியமான தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.

நாம் எல்லோரும் ஓலா நிறுவனம் கார் தயாரிப்பில் தற்போது ஆரம்பக் கட்டத்தில் தான் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் ஓலா நிறுவனம் வேகமாக
அதற்கான பணிகளைச் செய்து கொண்டிருப்பது தற்போது இவர் கூறிய பதிலிலிருந்து தெரிய வருகிறது. இதனால் விரைவில் ஓலா கார் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் அவர் கூறுகையில் "ஓலா நிறுவனம் தற்போது டிசைன் மற்றும் டூவீலர்களில் ஒரே தொழிற்நுட்பத்தை பகிர்வது உள்ளிட்ட அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப மேம்பாடுகளைச் செய்து வருகிறது. சாஃப்ட்வேர்,பாதுகாப்பு சிஸ்டம்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், செல்கள், டிரைவ் டிரைன் ஆகிய விஷயங்களை பொதுவாக மாற்ற முயன்று வருகிறது. இதில் கிட்டத்தட்ட 30-40 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன" எனக் கூறியுள்ளார்.

ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவேஷ் அகர்வால் தனது நிறுவனத்தின் முதல் காரை 50 ஆயிரம் டாலருக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர முயன்ற வருவதாகக் கூறியிருந்தார். இதற்காக லித்தியம் அயான் செல்கள் மற்றும் பேட்டரிகளை சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியிருந்தார். இது குறித்து அருண் குமாரும் சில தகவல்களைக் கூறியுள்ளார்.

ஓலா நிறுவனம் 100 ஜிகாவாட் ஹவர் பேட்டரி செல்களை தயாரிக்கும் அளவிற்குக் கொள்ளளவு கொண்டதாக பேட்டரி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதில் 10 ஜிகாவாட் ஹவர் பேட்டரி கொள்ளளவை அடுத்த 18-24 மாதங்களுக்கும் எட்டி பிடித்து விடும். 20 ஜிகாவாட் பேட்டரி ஹவரை 36 மாதங்களில் எட்டி பிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். எனக் கூறினார்.

மேலும் ஓலா நிறுவனம் தயாரிக்கும் லித்தியம் அயான் பேட்டரிகள் ஓலா நிறுவனத்தின் வாகனங்களுக்கு மட்டும் விற்பனை செய்யும் திட்டமில்லை மாறாக மற்ற நிறுவனங்களின் வாகனங்கள், சார்ஜிங் கிரிட்கள், உள்ளிட்ட எந்த பயன்பாட்டிற்கு வேண்டுமானாலும் பேட்டரியை விற்பனை செய்ய ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எங்குத் தேவை இருக்கிறேதா அதற்குத் தகுந்தார் போல பேட்டரியை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அருண் கூறினார்.

அருண் சொன்னது படி ஓலா தனது எலெக்ட்ரிக் காரை 50 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற மதிப்பிற்கும் குறைவான விலையில் காரை அறிமுகப்படுத்திவிட்டால் இந்த கார் சர்வதேச அளவில் டெஸ்லா கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும். அதே நேரம் ஹூண்டாய் நிறுவனமும் சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வருவதால் அந்நிறுவனத்திற்கும் போட்டியாக இருக்கும்.

இந்தியாவில் டாடா குழுமத்திற்கும் பேட்டியாக ஓலா நிறுவனம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்துவிட்டால் ஆர்பிஎஸ்ஏ அட்வைசர்ஸ் நிறுவனம் கணித்த படி ஓலா நிறுவனத்தின் ஓட்டு மொத்த மதிப்பு 2030ம் ஆண்டு 150 பில்லியன் அமெரிக்க டாலராக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 9, 2023, 9:20 [IST]
English summary
Ola plans to launch its first ev car in 2024
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+