2015இல் வாங்கிய காரை இப்போது கூட இப்படி மாற்றலாமா!! செய்துக் காட்டிய மெக்கானிக்குகள் - ஓனர் செம்ம ஹாப்பி!

2022இல் தயாரிக்கப்பட்ட கார்களே தோற்றுப் போகும் அளவிற்கு 2015இல் தயாரிக்கப்பட்ட மாருதி சுஸுகி ஆல்டோ 800 கார் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் ஆல்டோ 800 காரை பற்றிய பல்வேறு விஷயங்கள் நமக்கு தெரிய வந்துள்ளன. வாருங்கள் செய்திக்குள் போவோம்.

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகுகின்றன என்பது நமக்கு தெரிந்த விஷயமே. இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து கடந்த காலங்களில் பல ஐகானிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக, ஆல்டோ 800 மாடலை தயக்கமின்றி கூறலாம்.

2015 maruti alto 800 transformed

இன்னும் சொல்லப் போனால் மாருதி சுஸுகி தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு ஆல்டோ 800 காரின் பங்கு முக்கியமானது. வாழ்க்கையில் ஒரு காரையாவது சொந்தமாக, புதியதாக வாங்கிவிட வேண்டும் என இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு ஏற்ற விலையில், 4-5 பேர் வரையில் தனி குடும்பமாக வாழ்பவர்களுக்கு ஏற்ற காராக ஆல்டோ 800 விளங்கியது. அதுமட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் இயக்குவதற்கும் ஏற்ற காராக இருந்ததால், பலரும் இந்த காரை போட்டி போட்டு வாங்கினர்.

தற்சமயம் ஆல்டோ 800 கார் விற்பனையில் இல்லை என்றாலும், இப்போதும் சிலர் தங்களது பழைய ஆல்டோ 800 காரை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளனர். அத்தகையவர்களுள் சிலர் தங்களது ஆல்டோ 800 காரை தற்போதைய மாடர்ன் கார்களின் தோற்றத்திற்கு இணையாக பெறும் முயற்சியாக கஸ்டமைஸ் செய்தும் கொண்டுள்ளனர். அவ்வாறு, 2015இல் தயாரிக்கப்பட்ட ஆல்டோ 800 கார் ஒன்று தற்கால மாடர்ன் கார்களின் தோற்றத்திற்கு இணையாக மெருக்கேற்றப்பட்டு உள்ளது.

2015 maruti alto 800 transformed

இந்த படத்தில் நீங்கள் காண்பது, கஸ்டமைஸ் செய்யப்பட்ட 2015 ஆல்டோ 800 கார் ஆகும். 2015இல் வாங்கப்பட்ட இந்த ஆல்டோ 800 காரின் வெளிப்பக்கத்தில் சில பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, காரின் முன்பக்கத்தில் மிக முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2015இல் மாருதி சுஸுகி தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட முன் & பின்பக்க பம்பர்கள் அகற்றப்பட்டு அவற்றிற்கு பதிலாக புதிய பம்பர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் பின்பக்க பம்பர் மெக்கானிக்கிடம் வருவதற்கு முன் மிகவும் சேதமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

பம்பர் மட்டுமின்றி, காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட்கள், கிரில், பொனெட் மற்றும் ஃபெண்டர்களும் புதியவைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இவற்றுடன் சில புதிய ஆக்ஸஸரீகளும் தனியாக வாங்கப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, காருக்கு அடர் பழுப்பு நிறத்தில் புதிய பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரவுன் நிறத்தை 2017இல் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா சூப்பர்ப் காரில் மட்டுமே பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

2015 maruti alto 800 transformed

மெக்கானிக் கடைக்கு வரும்போது இந்த 2015 ஆல்டோ 800 கார் பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. பெயிண்ட் அடிப்பதற்கு முன்பாக, காரில் இருந்த கீறல்கள், டொக்குகள் மற்றும் துருப்பிடித்த பகுதிகளை கண்டறிந்து சரி செய்துள்ளனர். பெயிண்ட் அடித்த பின்பு ஸ்மூத்தான ஃபினிஷிங்கிற்காக ஈரமான மணலை கொண்டு சில வேலைகள் நடந்துள்ளன. இதன் மூலமாகவே இந்த ஆல்டோ 800 கார் புதிய கார் போல் பளபளப்பாக காட்சி தருகிறது.

ஏற்கனவே கூறியதுபோல், அதிகம் விற்பனையான மாருதி சுஸுகி காரான ஆல்டோ 800 முதன்முதலாக 2000ஆம் ஆண்டின் துவக்கங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 1990ஆம் காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த மாருதி சுஸுகி 800 காரின் அடுத்த தலைமுறை வெர்சனாக ஆல்டோ 800 கொண்டுவரப்பட்டது. இந்த காரின் வெற்றிக்கு, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் எங்கு வேண்டுமாயின் கிடைக்கும் உதிரி பாகங்களையும் காரணமாக சொல்லலாம்.

2015 maruti alto 800 transformed

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 2015இல் உற்பத்தி செய்யப்பட்ட காரை தற்போதைய மாடர்ன் கார்களுக்கு இணையாக மெருக்கேற்றுவது ஒன்றும் அவ்வளவு பெரிய காரியம் அல்ல. ஏனெனில், சிலர் இதனை காட்டிலும் பழைய, 1990ஆம் காலக்கட்டங்களில் வாங்கிய கார்களை கூட மாடர்ன் தோற்றத்திற்கு மாற்றியுள்ளனர். இருப்பினும், இந்த வேலையை செய்த மெக்கானிக்குகளின் தொழில் நேர்த்தியை பாராட்டியே ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 22, 2023, 15:18 [IST]
English summary
Old maruti suzuki alto 800 car transformed into brand new version
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X