இந்த கார் மட்டும் வந்திச்சுனா இந்தியாவில் ரெனால்ட்டின் ரேஞ்சே மாறிடும்!! ஐரோப்பா மக்களுக்கு இணையா மாறிடலாம்!
இந்தியாவில் அதிக பேர் வாங்கிய மிகவும் சில ரெனால்ட் கார்களுள் ஒன்று டஸ்டர் ஆகும். காம்பெக்ட் எஸ்யூவி காரான இதன் விற்பனையை இந்தியாவில் சமீபத்தில்தான் ரெனால்ட் நிறுவனம் நிறுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் ஐரோப்பாவில் புதிய டஸ்டர் கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் நமக்கு கிடைக்க பெற்றுள்ள விபரங்களின்படி, புதிய டஸ்டருக்கும், பழைய டஸ்டருக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி பார்க்கலாம்.
தோற்றம்: இந்தியாவில் முன்பு விற்பனையில் இருந்த டஸ்டர் காருடன் ஒப்பிடுகையில் புதிய டஸ்டரின் வெளிப்பக்க தோற்றம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய க்ரில் பகுதி, Y-வடிவ டிஆர்எல்-களுடன் மெல்லியதான ஹெட்லைட்கள் மற்றும் பெரிய அளவிலான ஏர் டேம் என ஏகப்பட்ட புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இதில், அளவில் பெரிய ஏர் டேம் சும்மா அழகுக்காக தான் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப தடிமனான ஸ்கிட் பிளேட் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. காரின் சைடு பகுதியை பார்க்கும்போது, முன்பை விட காரின் தோற்றம் கூர்மையானதாகவும், அளவில் பெரியதாகவும் கொண்டுவரப்பட்டு உள்ளதை அறிய முடிகிறது. கதவு கைப்பிடிகள் கைக்கு சவுகரியமான முறையில் பறித்து இழுக்கக்கூடியதாக வழங்கப்பட்டு உள்ளன. காரின் முன்பக்கத்தை போல, பின் பகுதியும் முற்றிலுமாக புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
டேஸ்போர்டு: புதிய டஸ்டர் கார் Y வடிவத்தில் முற்றிலும் புதிய டேஸ்போர்டு டிசைனை கொண்டுள்ளது. 10.1 இன்ச்சில் நன்கு பெரியதாக வழங்கப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் டேஸ்போர்டின் மத்தியில் வழங்கப்படும் ஏசி உள்ளிட்டவை ஓட்டுனர் இருக்கையின் பக்கம் திருப்பப்பட்டுள்ளன. டேஸ்போர்டின் டிசைனை போல், அதற்கு கீழே வழங்கப்படும் சென்ட்ரல் கன்சோல் பகுதியும் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளது.

இருக்கைகள்: பழைய டஸ்டரை போல புதிய டஸ்டரும் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரியை பெற்றுள்ளது. ஆனால் இருக்கைகளுக்கு மேல் வழங்கப்படும் ஹெட்ரெஸ்ட்டின் டிசைன் புதியது. அதேபோல், இருக்கைகளை புதிய டஸ்டர் புதிய நிறங்களில் பெற்றுள்ளது. பின் இருக்கை வரிசையில், மத்தியில் வழங்கப்படும் ஹெட்ரெஸ்ட்டை தேவைக்கு ஏற்ப புதிய மாடலில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும்.
என்ஜின்: கடைசியாக விற்பனையில் இருந்த சமயத்தில் டஸ்டரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களை ரெனால்ட் வழங்கி வந்தது. பிஎஸ்6 அமலுக்கு வரும் வரையில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனையும் டஸ்டரில் ரெனால்ட் நிறுவனம் வழங்கியது.

ஐரோப்பாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ள புதிய டஸ்டரில் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் ஸ்டார்ங்-ஹைப்ரீட் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், பெட்ரோல்-எல்பிஜி கலவையிலும் ஒரு என்ஜின் ஆப்ஷனை வழங்க ரெனால்ட் முடிவெடுத்துள்ளது. ஆனால், இதில் எந்தெந்த என்ஜின் ஆப்ஷன்களில் இந்தியாவில் புதிய டஸ்டர் கார் அறிமுகம் செய்யப்படும் என்பது தெரியவில்லை.
எக்ஸ்-ஷோரூம் விலை & இந்திய அறிமுக தேதி: இந்திய மார்க்கெட்டில் புதிய ரெனால்ட் டஸ்டர் கார் 2025ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய டஸ்டரின் ஆரம்ப விலையினை ரூ.10 இலட்சம் என்ற அளவில் ரெனால்ட் நிர்ணயிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாங்கள் கூறியவை எல்லாம் கொஞ்சமே. புதிய டஸ்டரையும், பழைய டஸ்டரையும் இன்னும் ஆழமாக ஒப்பீடு செய்தால், சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா என பிரபலமான கார்களுக்கு போட்டியாக விளங்குவதால், புதிய டஸ்டரை சிறப்பானதாகவே அறிமுகப்படுத்த ரெனால்ட் முயற்சிக்கும்.


Click it and Unblock the Notifications









