புதிய ஸ்விஃப்ட்க்கும், பழைய ஸ்விஃப்ட்க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன? புதுசுக்காக வெயிட் பண்ணலாமா?

கார் காதலர்கள் பலர் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் புதிய ஸ்விஃப்ட் காரை, சுஸுகி நிறுவனம் சமீபத்தில் வெளியீடு செய்தது. 2023 டோக்யோ மோட்டார் ஷோ வாயிலாகவே நிறுவனம், இது நாள் வரை மறைத்து மறைத்து காத்து வந்த புதிய ஸ்விஃப்ட்-ஐ வெளியீடு செய்தது.

இந்த காரின் வருகை அடுத்த ஆண்டில் அரங்கேறிவிடும் என கூறப்பட்டுகின்றது. இந்தியாவிலும் இந்த கார் வருகின்ற 2024ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் கார் மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சி மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் தாங்கிய காராக புதிய ஸ்விஃப்ட் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

Old swift vs new swift comparison

இதுதவிர, மிக அதிக மைலேஜை தரும் வாகனமாகவும் புதிய ஸ்விஃப்ட் உருவாக்கப்பட்டு இருக்கின்றதாகக் கூறப்படுகின்றது. இதுபோன்று வெறு என்னென்ன புதிய வசதிகள் மற்றும் மாற்றங்களை எல்லாம் அந்த கார் பெற்றிருக்கின்றது? விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஸ்விஃப்டின் கூடுதல் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டிசைன்: புதுசோ, பழசோ ரெண்டு ஸ்விஃப்டுமே பார்த்தால் அது ஸ்விஃப்ட் கார்தான் என்பது தெளிவாக தெரிந்துவிடும். ஏனெனில் தோற்றத்தில் சுஸுகி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதேவேளையில், அலங்கார விஷயத்தில் ஏகப்பட்ட மாற்றத்தை அது செய்திருக்கின்றது. முகப்பு பகுதி புதிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

Swift rear profile

கூடுதல் வளைவான முனைகள் கொண்ட புதிய கிரில், ஷார்ப்பான முகப்பு மின் விளக்குகள், கருப்பு நிற பம்பரில் சில்வர் நிற பேனல் மற்றும் அதிகம் வளைவான பான்னெட், எல் வடிவ பகல் நேர லைட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்களே புதிய ஸ்விஃப்டின் முகப்பு பகுதிக்கு மிகுந்த அழகை சேர்க்கும் வகையில் இருக்கின்றன.

இதேபோல், பக்கவாட்டு பகுதியில், அதாவது காரின் கதவுகளுக்கு கட்டுமஸ்தான தோற்றம் மற்றும் புதிய கவர்ச்சிகரமான அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் புதிய ஸ்விஃப்டிற்கு கூடுதல் ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரில் பின் பக்க கதவுகளுக்கான ஹேண்டில்கள் பிள்ளரிலேயே வழங்கப்பட்டு இருக்கும்.

ஆனால், புதிய ஸ்விஃப்டில் கன்வென்ஷனல் டோர் ஹோண்டில்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல் பன்முக மாற்றங்களை பின் பக்கத்திலும் சுஸுகி செய்திருக்கின்றது. சி வடிவ எல்இடி லைட், கருப்பு நிற இன்செர்ட்டுகள் உள்ளிட்டவற்றை காரின் பின் பக்கத்திற்கு அழகு சேர்க்கும் சுஸுகி வழங்கி இருக்கின்றது.

இன்டீரியர்: வெளிப்புறத்தைப் போலவே இந்த காரின் உட்புறத்தில் பன்முக மாற்றங்களை சுஸுகி செய்திருக்கின்றது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், சமீபத்திய வெளியீடுகளான பலினோ, ஃப்ரான்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டார ஆகிய கார் மாடல்களின் இன்டீரியரை ஒத்துப் போகும் வகையிலேயே புதிய ஸ்விஃப்ட் காரின் இன்டீரியரையும் சுஸுகி உருவாக்கி இருக்கின்றது.

பெரிய ஃப்ளோட்டிங் ரக திரை, மிக சிறந்த கூலிங் வசதிக் கொண்ட ஏசி சிஸ்டம், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவற்றை புதிய ஸ்விஃப்டில் நம்மால் பார்க்க முடிகின்றது. பழைய ஸ்விஃப்டில் டேஷ்போர்டின் மையப் பகுதியிலேயே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும்.

அதற்கு மேலேயே ஏசி வெண்ட், அதற்கான கன்ட்ரோல்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் விதமாக கருப்பு மற்றும் ஒயிட் தீம் காரின் உள் பகுதிக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், புதிய ஸ்விஃப்டில் பயணிக்கும்போது அந்த ரைடு மிகவும் சுவாரஷ்யமானதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.

சிறப்பம்சங்கள்: புதிய ஸ்விஃப்டில் 9 அங்குல தொடு திரை வசதிக் கொண்ட ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, எம்ஐடி திரை, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், சாவியில்லாமல் காரை இயக்கும் வசதி, புஷ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் உள்ளிட்ட அம்சங்கள் பல புதிய ஸ்விஃப்டில் வழங்கப்பட்டு உள்ளன.

இதுதவிர, கூடுதலாக அடாஸ் தொழில்நுட்பமும் புதிய ஸ்விஃப்டில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக அவசர கால தானியங்கி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எஞ்ஜின் மற்றும் மைலேஜ் திறன்: புதிய ஸ்விஃப்ட் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இந்த சூப்பரான மைலேஜ் திறனுக்காக இந்த ஹேட்ச்பேக் காரில் ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதனை சுஸுகி நிறுவனம் இன்னும் இறுதி செய்யவில்லை.

அதிகாரப்பூர்வ வெளியீட்டின்போதே இது பற்றிய தகவல் தெரிய வரும். இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரில் நம்மால் 20 கிமீட்டருக்கும் குறைவான மைலேஜையே பெற முடியும். 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் மோட்டாரே அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 89 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஸ்விஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு வர இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. அதேவேளையில், இதற்காக காத்திருப்பது ஒர்த்தானதாகவே இருக்கும். ஏனெனில், லுக்கிலும், மைலேஜ் தருவதிலும் மற்றும் தொழில்நுட்பங்கள் விஷயத்திலும் புதிய ஸ்விஃப் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையிலேயே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 19:06 [IST]
English summary
Old swift vs new swift comparison details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+