டொயோட்டா குவாலிஸ் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு? பட்டி, டிங்கரிங் பார்த்து இப்போதும் ஷோரூம் கண்டிஷனில்!!

பழைய டொயோட்டா குவாலிஸ் (Toyota Qualis) கார் ஒன்று ஷோரூம் கண்டிஷனுக்கு ரீ-ஸ்டோர் செய்யப்பட்டு உள்ளது. கேரளாவை சேர்ந்த இந்த குவாலிஸ் கார் எவ்வாறு இப்படியொரு தோற்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது என்பது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

நீடித்து உழைக்கக்கூடிய கார்களை உருவாக்குவதினாலேயே இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் டொயோட்டா பிரபலமானதாக விளங்குகிறது. இந்திய சந்தையில் 2000ஆம் ஆண்டில் நுழைந்த டொயோட்டா முதலாவதாக அறிமுகப்படுத்திய கார் குவாலிஸ் எம்பிவி ஆகும். 2004ஆம் ஆண்டு வரையில் 4 வருட காலத்திற்கு இந்த டொயோட்டா எம்பிவி கார் இந்தியாவில் விற்பனையில் இருந்தது.

old toyota qualis car restored

அதன்பின், குவாலிஸுக்கு மாற்றாக இன்னோவாவை இந்தியாவில் டொயோட்டா விற்பனைக்கு கொண்டுவந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் விற்பனையில் இருந்ததால், இன்றைய காலத்தில், சாலையில் குவாலிஸ் கார்களை காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. ஏதேனும் ஒரு குவாலிஸ் கார் எதர்ச்சையாக கண்ணில் பட்டாலும், அதன் தோற்றம் மிகவும் பழமையானதாகவே இருக்கும்.

ஏனெனில், அந்த அளவிற்கு குவாலிஸ் காரை பராமரிப்பதற்கான பாகங்கள் சந்தையில் கிடைப்பதும் அரிதாகி வருகிறது. இருப்பினும், கேரளாவில் டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று பட்டி, டிங்கரிங் பார்த்து ரீ-ஸ்டோர் செய்யப்பட்டுள்ளது. இதனால், முதல்முறையாக ஷோரூமில் இருந்து வாங்கிய போது கொண்டிருந்த தோற்றத்தை இந்த குறிப்பிட்ட குவாலிஸ் கார் மீண்டும் பெற்றுள்ளது.

old toyota qualis car restored

இந்த ரீ-ஸ்டோர்டு குவாலிஸ் கார் தொடர்பான வீடியோ பிவிடி ஆட்டோ கான்செப்ட் என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவின் துவக்கத்தில், ரீ-ஸ்டோர் செய்வதற்கு முன்பு இந்த குவாலிஸ் கார் எவ்வாறு இருந்தது என்பதை காணலாம். அந்த சமயத்தில், காரில் டொக்குகளும், சில துருப்பிடித்த பகுதிகளும் இருந்தன. மற்றப்படி, காரின் உடல் கட்டமைப்பானது பெரியதாக குறை சொல்லும் அளவிற்கு இல்லை.

ஆனால், மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டுவந்து சற்று உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்ததில், காருக்கு உள்ளே தரைப்பாய்க்கு அடியில் நிறைய பகுதிகளில் துருப்பிடித்து இருந்ததை மெக்கானிக்குகள் கண்டறிந்தனர். இதன் காரணமாக, சில பகுதிகளில் ஓட்டைகள் கூட ஏற்பட்டு இருந்துள்ளன. அதுமட்டுமின்றி, கேபின் மேட்-க்கு அடியில் வழங்கப்படும் வயர்களில் சில, கிழிந்து செம்பு கம்பிகள் வெளியே தெரிவதையும் மெக்கானிக்குகள் கண்டறிந்தனர்.

old toyota qualis car restored

இவை மட்டுமின்றி, காரில் வேறு என்னென்ன சேதாரங்கள் உள்ளன என்பதை கண்டறிய இருக்கைகள் மற்றும் உட்பக்க பேனல்கள் காரில் இருந்து கழற்றி பார்க்கப்பட்டன. இந்த சோதனையில் காரின் மேற்கூரையிலும் சில இடங்களில் துருப்பிடித்து இருப்பதை கண்டறிந்தனர். இந்த துருப்பிடித்த பகுதிகள் அனைத்தும், தட்டி சரிப்பார்க்கப்பட்ட பின் அந்த இடங்களில் ஏற்பட்டிருந்த துளைகள் அடைக்கப்பட்டன.

சில பகுதிகளில், பேனல்கள் வெட்டி எடுக்கப்பட்டு அந்த இடத்தில் வேறொரு துண்டுகள் வெல்டிங் மூலம் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த பட்டி, டிங்கரிங் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த பின், காரின் பழைய பெயிண்ட் சுரண்டி எடுக்கப்பட்டு, பின் அதே நிறத்தில் புதிய பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், க்ரோம் க்ரில், புதிய ஹெட்லேம்ப்கள், ஃபெண்டர்களில் குவாலிஸ் முத்திரை உள்ளிட்டவை மீண்டும் பொருத்தப்பட்டன.

old toyota qualis car restored

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு கார்கள் பட்டி, டிங்கரிங் பார்க்கப்படுவது சாதாரண ஒன்றுதான். ஆனால், இந்த டொயோட்டா குவாலிஸ் காரை பற்றி குறிப்பிட்டு பார்ப்பதற்கு காரணம், இந்தியாவில் அரிதாக தென்படும் கார்களுள் ஒன்று குவாலிஸ் ஆகும். ஏனெனில், மொத்தமாகவே வெறும் 4 வருடங்கள் மட்டுமே இந்த கார் விற்பனையில் இருந்தது. இந்த 4 வருடத்திலும் பெரிய அளவில் விற்பனை இல்லாத காரணத்தினாலே அதற்கு பதிலாக டொயோட்டா இன்னோவா கொண்டுவரப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 2, 2023, 15:04 [IST]
English summary
Old toyota qualis car restored in kerala check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X