27 கிமீ மைலேஜ் தரும் ஹூண்டாய் காருக்கு இப்படி ஒரு நிலைமையா!! என்னங்க தீபாவளி வர நேரத்துல இப்படி பண்ணீட்டாங்க!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களில் எக்ஸ்டர் (Exter) காரும் ஒன்றாகும். இது ஓர் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக காராகும். அதாவது, குட்டியான எஸ்யூவி கார் இது ஆகும். டாடா மோட்டார்ஸின் மலிவு விலை கார் மாடலான பஞ்ச் (Tata Punch) காருக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே இந்த கார் மாடல் ஆகும்.
விற்பனையில் இந்த கார் தற்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. மலிவு விலை காரணத்தினாலும், அதிக சிறப்பம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலுமே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹூண்டாய் ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்தை செய்திருக்கின்றது.

அது எக்ஸ்டர் கார் மாடலின் விலையை உயர்த்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. ரூ. 16 ஆயிரம் வரை அக்காரின் விலையில் உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. ஹூண்டாயின் இந்த செயல் இந்தியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்தியாவில் விரைவில் ஆயுதப் பூஜை மற்றும் தீபாவளி என பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளன.
இந்த நாட்களில் வாகனங்களின் சேல்ஸ் விகிதமும் சற்று அதிகமாக இருக்கும். அதாவது, இந்தியர்கள் இந்த பண்டிகை நாட்களையே புதிய வாகனங்களை வாங்க சிறந்த நாட்களாகக் கருதுகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே எக்ஸ்டரின் விலையை ஹூண்டாய் தற்போது உயர்த்தி இருக்கின்றது. ஆகையால், இந்த காரை இந்த விழா நாட்களில் வங்கலாம் என்கிற பிளானில் இருந்தவர்களுக்கு விலை உயர்வு தகவல் பேரிடியாக அமைந்திருக்கின்றது.

ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ், இஎக்ஸ் (ஓ), எஸ், எஸ் (ஓ), எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் (ஓ), எஸ்எக்ஸ் (ஓ) கன்னெக்ட் மற்றும் எஸ் சின்ஜி மற்றும் எஸ்எக்ஸ் சிஎன்ஜி தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஆரம்ப நிலை மாடலான இஎக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஏஎம்டி கன்னெக்ட் தேர்வுகளின் விலை மட்டும் ஏற்றப்படவில்லை.
மற்ற அனைத்து வேரியண்டுகளின் விலையும் உயர்த்தப்பட்டுவிட்டன. இஎக்ஸ் (ஓ), எஸ், எஸ் (ஓ), எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) மற்றும் எஸ் ஏஎம்டி ஆகிய வேரியண்டுகளின் விலையில் ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. எஸ்எக்ஸ் டிடி, எஸ்எக்ஸ் (ஓ) கன்னெக்ட் மற்றும் எஸ்எக்ஸ் ஏஎம்டி டிடி தேர்வுகளின் விலையில் ரூ. 11 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
இவற்றிற்கு அடுத்தபடியாக எஸ்எக்ஸ் ஏஎம்டி தேர்வின் விலையில் ரூ.12 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, எக்ஸ்எக்ஸ் (ஓ) கன்னெக்ட் டிடி தேர்வின் விலையில் ரூ.16 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவே அதிகபட்ச விலை உயர்வாகும். இதுமட்டுமில்லைங்க, எஸ்எக்ஸ் (ஓ) ஏஎம்டி கன்னெக்ட் டிடி தேர்வினஅ விலையில் ரூ. 5 ஆயிரமும், எஸ்எக்ஸ் (ஓ) ஏஎம்டி மற்றும் இரண்டு சிஎன்ஜி தேர்வுகளின் விலையிலும் ரூ. 9 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
இந்த திடீர் விலை உயர்விற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அதேவேளையில், ஆரம்ப நிலை வேரியண்டின் விலை உயர்த்தப்படாத காரணத்தினால் இந்த காரின் ஆரம்ப விலையிலும் மாற்றம் ஏற்படவில்லை. ஹூண்டாய் எக்ஸ்டர் ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹூண்டாய் எக்ஸ்டரில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், க்ரூஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், உயர் வகை பாதுகாப்பை வழங்கும் விதமாக 6 ஏர் பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு இருக்கை மவுண்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (இஎஸ்சி), இரண்டு டேஷ் கேமிராக்கள் மற்றும் ரியர் வியூ கேமிரா என ஏகப்பட்ட சேஃப்டி அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்ற இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஹூண்டாய் எக்ஸ்டர் டாடா பஞ்ச் காருக்கு மட்டுமல்ல ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், சிட்ரோன் சி3 மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் உள்ளிட்டவற்றிற்கும் போட்டியாக இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
ஹூண்டாய் எக்ஸ் காரின் பெட்ரோல் மோட்டார் 19.2 கிமீ முதல் 19.4 கிமீ வரையில் மைலேஜை வழங்கும். அதேவேளையில், இதன் சிஎன்ஜி மோட்டார் ஒரு கிலோவிற்கே 27.1 கிமீ வரையில் மைலேஜ் தரும். இத்தகைய அதிக மைலேஜை வழங்கும் கார் மாடலின் விலையையேச உயர்த்தி ஹூண்டாய் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் எக்ஸ்டர் மாறி இருக்கின்றது. இந்த காரின் விலையை உயர்த்தி இருப்பது இந்தியர்களுக்கு ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த விலை உயர்வு எக்ஸ்டர் காரின் விற்பனையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









