மஹிந்திரா எலெக்ட்ரிக் காரை குப்பை தொட்டியாக மாற்றிய உரிமையாளர்! என்ன காரணம் தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை அதன் உரிமையாளர் குப்பைத் தொட்டியாக மாற்றிய சம்பவம் சமீபத்தில் காசியாபாத் பகுதியில் நடந்துள்ளது. இவர் ஏன் இப்படி தனது காரை குப்பைத் தொட்டியாக மாற்றினார்? இதற்கான காரணம் என்ன? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நொய்டாவின் பெருநகரப் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 400 ரக எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். அந்த எலக்ட்ரிக் காரை அவர் தினந்தோறும் தனது அன்றாட பணிகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பல்வேறு சிக்கல்கள் வந்துள்ளது.

mahindra xuv 400

காரை விற்பனை செய்யும் போது அந்நிறுவனத்தின் ஊழியர்கள் காரின் திறன் குறித்து சொன்ன விஷயங்கள் பாதி தனக்கு உண்மையில் இந்த காரை பயன்படுத்தும் போது நடக்கவில்லை என அவருக்கு தோன்றியுள்ளது. இதுகுறித்து அவர் மஹிந்திரா நிறுவனத்திடம் பல்வேறு முறை முறையிட்டும் எந்த விதமான முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் அவர் தனது காரை குப்பை தொட்டியாக மாற்றி புதிய போராட்டம் ஒன்றே செய்துள்ளார்.

காசியாபாத்தில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் ஷோரூம் முன்பு தனது எக்ஸ்யூவி 400 காரை நிறுத்திய அவர் அந்த காரை மறைக்கும்படி ஒரு பேனர் ஒன்றை கட்டியுள்ளார். அந்த பேனரில் தனக்கு நேர்ந்த நஷ்டம் குறித்தும் இதனால் இந்த காரை வாங்க நினைப்பவர்கள் இதை வாங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும் இந்த பேனரை அவர் பொருத்தியுள்ளார்.

இந்த பேனரில் இவர் குறிப்பிட்டுள்ளதாவது : "மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரை வாங்குவது உங்கள் வீட்டை நீங்களே தீ வைத்துக் கொள்வதற்கு சமமாக உள்ளது. இந்த காரை சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் 10 கிலோவாட் மின்சக்தி வேண்டும். இல்லை என்றால் வெளியில்தான் சார்ஜ் செய்ய வேண்டும்.நீங்கள் வெளியில் சார்ஜ் செய்து கொள்கிறீர்கள் என்றால் ஒரு முறை சார் செய்ய ரூபாய் ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன் மூலம் இந்த கார் 150 கிலோ மீட்டர் தான் ரேஞ்ச் கிடைக்கும். இந்நிறுவனம் சொல்வது போல 350 கிலோமீட்டர் ரேஞ்ச் எல்லாம் கிடைப்பதே கிடையாது. இந்த கார் குப்பைகளை கொட்டதான் பயன்படும். இதனால் மகேந்திரா காரை வாங்கும் முன்பு யோசியுங்கள்" என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பலர் இந்த எஸ்யூவி 400 கார் குறித்து மோசமான விமர்சனங்களை செய்து வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். சிலர் இந்த காரை கையாள தெரியாத நபர்கள் இப்படியான மோசமான விளைவை செய்து வருகிறார்கள் சரியாக கையாண்டால் இந்த கார் சிறப்பாக இருக்கும் எனவும் விமர்சனம் செய்கிறார்கள்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரை பொறுத்தவரை தற்போது மார்க்கெட்டில் ரூபாய் 15. 99 லட்சம் முதல் ரூபாய் 19.39 என்ற இலட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை 34.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 350 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்ட மோட்டாரை பொருத்தவரை 147.51பிஎச்பி பவரையும் 310என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரில் ஐந்து பேர் பயணிக்க கூடிய சீட்டிங் வசதி இருக்கிறது. இந்த கார் முழுமையாக சார்ஜ் ஏற 50 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை பிக்கப் செய்ய 8.3 நொடிகள் வரை எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4,200 மில்லி மீட்டர் நீளமும் 1821 மில்லி மீட்டர் அகலமும் 1634 மில்லி மீட்டர் உயரமும் கொண்ட காராக இருக்கிறது. இந்த கார் 2600 மில்லி மீட்டர் வீல் பேஸை கொண்டுள்ளது. இந்த கார் விற்பனைக்கு வரும்போது மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்தது இருந்தாலும் இந்த கார் மீது அவ்வப்போது சில குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 400 கார் மீது குற்றச்சாட்டு வருவது இது ஒன்றும் முதல் முறை அல்ல இதற்கு முன்னர் சென்னையிலேயே ஒருவர் இந்த காரை வாங்கிவிட்டு நடுரோட்டில் போராட்டம் எல்லாம் நடத்தியுள்ளார். இந்நிலையில் இரண்டாவது முறையாக இப்படியான ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. மகேந்திரா நிறுவனம் இந்த பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்தி வாடிக்கையாளர்கள் இப்படியான அதிருப்தி மனநிலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 21, 2023, 13:03 [IST]
English summary
Owner transforms mahindra xuv400 ev into garbage bin know why
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+