விண்டேஜ் வாகன லவ்வரா நீங்க? அதுக்கு பின்னால எவ்ளோ ஆபத்துகள் மறைஞ்சிருக்கு தெரியுமா? நிறையபேரு புலம்புறாங்க!

விண்டேஜ் வாகனங்களை விரும்பாதவர்களே இருக்க முடியாது. நம்மில் பலருக்கு அவையே மிகவும் பிடித்தமான வாகனங்களாக இருக்கின்றன. ஆனால், அதை அவ்வளவு எளிதில் வாங்கிக் கொள்ள முடியாது. இப்போதும் அவற்றின் விலை மிக அதிகமாக காணப்படுகின்றது. அதன் விலைக்கு ஓர் புதிய வாகனத்தையே வாங்கி விட முடியும்.

ஆகையால், விண்டேஜ் வாகனங்கள்மீது பிரியம் கொண்டவர்கள் தங்களின் ஆசையை கிளாசிக் தோற்றம் கொண்ட நவீன கால வாகனங்கள் வாயிலாக தீர்த்துக் கொள்கின்றனர். மேலும், இந்த நிலையே விண்டேஜ் லுக்கில் உள்ள மாடர்ன் ரக வாகனங்களுக்கு நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

Classic car pic 1

அதேவேளையில், விண்டேஜ் வாகனங்களை வைத்திருக்கும் அனைவரும் அந்த வாகனத்தை வைத்திருப்பதில் பெருமை கொள்வார்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம். மிக முக்கியமாக விண்டேஜ் வாகனங்களைக் கொண்டு லாங் ரைடு எல்லாம் செய்ய முடியாது. இதுபோன்று இன்னும் பல சிக்கல்கள் விண்டேஜ் வாகனங்கள் விஷயத்தில் காணப்படுகின்றது.

சுமார் 8க்கும் மேற்பட்ட காரணங்களைகூறி விண்டேஜ் வாகன பிரியர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். அவை என்ன என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, விண்டேஜ் வாகனங்களை கையில் வைத்திருப்பதால் என்னென்ன மாதிரியான கஷ்டமான அனுபவங்களை எல்லாம் நாம் சந்திக்க நேரிடும் என்பதையே பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Classic car pic 2

மெயின்டெனன்ஸ் செய்வது கஷ்டம்: விண்டேஜ் வாகனங்களை பராமரிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். குறிப்பாக, அடிக்கடி காரை விண்டேஜ் வாகன மெக்கானிக்குகளிடம் கொடுத்து அடிக்கடி ஓர் குட்டி சர்வீஸைச் செய்துவிட வேண்டும். இவ்வாறு செய்யும்பட்சத்தில் மட்டுமே காரை எப்போதும் ஓட்டிக் கொள்ள முடியும். இதை தவறினால் விண்டேஜ் கார் எப்போது காலை வாரிவிடும் என்பதே தெரியாது. நீண்ட நாட்களுக்கு பராமரிக்கப்படாமல் அப்படியே விடும்பட்சத்தில் அந்த கார் துருவிற்குகூட இரையாக நேரிடும்.

இன்சூரன்ஸ் தொகை மிக அதிகம்: விலை உயர்ந்த ஆடம்பர வாகனங்களுக்கு நிர்ணயிப்பதைப் போலவே மிக அதிக பிரீமியம் தொகையே விண்டேஜ் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ்க்கு வசூலிக்கப்படுகின்றது. சேதங்களின்போது மிக பெரிய செலவை ஏற்படுத்தும் என்பதனாலேயே அதிக பிரீமியம் தொகை அதற்கு வசூல் செய்யப்படுகின்றது.

Classic car pic 3

பெட்ரோலை உறிஞ்சாது, குடிக்கும்: எந்தவொரு கிளாசிக் வாகனங்களிலும் மைலேஜை எதிர்பார்க்க முடியது. நீண்ட நாட்களாக முறையான பராமரிப்பில் இருக்கும் ஒரு சில வாகனங்கள் மட்டுமே மைலேஜை ஓரளவிற்கு நல்ல நிலையில் வழங்கும். மற்றபடி, அதிக தேய்மானம் மற்றும் வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் மிகவும் மோசமான மைலேஜையே கிளாசிக் வாகனங்கள் வழங்கும். இதனால் உங்கள் பாக்கெட்டில் உள்ள பணம்தான் விரைவில் காலியாகும்.

பாகங்கள் கிடைப்பதில் சிக்கல்: பழைய வாகனங்களுக்கு சந்தையில் உதிரி பாகங்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. போதிய அளவு வாகனங்கள் சந்தையில் பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் அதற்கான பாகங்களை தயாரிக்க நிறுவனங்கள் விரும்புவதில்லை. இதன் விளைவு பாகங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு அதிகம் நிலவும். அப்படியே கிடைத்தாலும் மிக உயரிய விலையிலேயே அவை கிடைக்கும்.

Classic car pic 3

மதிப்பு குறையும்: இப்போதைய நிலவரப்படி ஒரு சில விண்டேஜ் வாகனங்களுக்கு நல்ல மதிப்பு நிலவுகின்றது. ஆனால், இது நிரந்தரமானது அல்லது. திடீரென அதன் மதிப்பு பலமடங்கு குறைய நேரிடும். குறிப்பாக, தரமற்றதாக மாறுதல், பலரின் கைகளுக்கு மாறுவது மற்றும் முறையற்ற பராமரிப்பு இல்லாதது போன்றவற்றினால் விண்டேஜ் வாகனங்களின் மதிப்பு குறைய நேரிடும்.

சிறப்பம்சங்களின் குறைபாடு: நவீன கால கார்களுக்கு இந்தியர்கள் உடனடியாக மாறுவதற்கு இருக்கும் காரணங்களில் மிக முக்கியமானது அவற்றில் அதிக தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என்பதே ஆகும். ஆனால், இந்த அம்சங்களை விண்டேஜ் வாகனங்களில் பார்க்க முடியாது. ஏசி, பவர் பிரேக், பவர் விண்டோ மற்றும் பவர் ஸ்டியரிங்கூட விண்டேஜ் வாகனங்களில் இடம் பெற்றிருக்காது.

beautyful classic cars

பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு: சிறப்பம்சங்கள் விஷயத்தில் இருப்பதை போலவே பாதுகாப்பு அம்சங்களிலும் விண்டேஜ் வாகனங்கள் மிகுந்த குறைபாடுக் கொண்டவையாகக் காட்சிளிக்கின்றன. நவீன கால கார்களில் சீட் பெல்ட், ஏர் பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களை பழைய கால கார்களில் பார்க்கவே முடியாது. ஆகையால், அவற்றில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது.

குறைவான ஸ்டோரேஜ்: பெரும்பாலான பழங்கால கார்களில் ஸ்டோரேஜ் வசதி பெரியளவில் இருக்காது. இன்றைய நவீன கால கார்களில் பின் பக்கத்தில் இருக்கும் இருக்கைகளை மடித்து வைத்துக் கொண்டு கூடுதல் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். ஆனால், இந்த வசதியை பழங்கால கார்களில் பெறுவது இயாலதது. இருக்கைகளை மடித்து வைத்துக் கொள்வது இயலாத ஒன்று. ஆகையால், குறைவான பொருட்களையே விண்டேஜ் கார்களில் ஏற்றிச் செல்ல முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விண்டேஜ் வாகனங்களுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளன. குறிப்பாக, அரிய வகை வாகனங்களுக்காக பணத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய நபர்கள் இந்த உலகில் ஏராளமாக இருக்கின்றனர். இந்த மாதிரியான நபர்களால் மட்டுமே விண்டேஜ் வாகனங்களை எந்த புலம்பலும் இன்றி பயன்படுத்த முடியும். நீங்கள் ஓர் நடுத்தர வாசி என்றால், உங்களுக்கு விண்டேஜ் வாகனம் வாங்கும் நினைப்பு மனதில் இருக்கும் அதை மண்ணில் போட்டு புதைப்பதே நல்லது.

More from DriveSpark

Article Published On: Friday, May 19, 2023, 11:58 [IST]
English summary
Owning classic cars really tough here is top reasons
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X