இந்தியாகிட்டயே வாலாட்டுன பாகிஸ்தான் நிலைமையை பாத்தீங்களா? ரத்த கண்ணீர் வராதது தான் பாக்கி!

கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானில் கார் விற்பனை இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அந்நாடு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் தற்போது கார் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது பொருளாதார சிக்கலில் இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள பல நிறுவனங்கள் அதன் செயல்பாடுகளை மூடத் துவங்கி விட்டன. பல நாடுகள் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்துவிட்ட நிலையில் தற்போது அந்நாட்டில் உள்நாட்டு உற்பத்தி என்பது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள கார் தயாரிப்பு ஆலைகள் கூட தங்கள் தயாரிப்புகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டன.

pakistan car sales

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாத விற்பனை விபரம் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் ஒரே மாதத்தில் பாகிஸ்தானில் 26 சதவீதம் அளவிற்கு கார்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இந்த புள்ளி விபரத்தை பாகிஸ்தான் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானில் மொத்தமாகவே 6200 கார்கள் தான் விற்பனையாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் மொத்தம் 8400 கார்கள் விற்பனையாக இருந்த நிலையில் தற்போது 2200 கார்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது. இந்த பாகிஸ்தான் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் இல்லாமல் மற்றவர்கள் அளித்துள்ள புள்ளிவிபரத்தை பார்த்தாலும் அதிகபட்சமாகவே 7000 கார்கள் தான் விற்பனையாகி இருப்பதாக தரவுகள் நமக்கு கிடைத்துள்ளது. அதே விபரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 9500 கார்கள் விற்பனையானதாக தரவுகள் உள்ளன.

pakistan car sales

இதுவே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மொத்தம் 15,000 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. தற்போது அதை விட பாதி குறைந்து மிகக் குறைவான அளவிலேயே வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. பாகிஸ்தானில் ஆட்டோமொபைல் மார்க்கெட் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது இதன் மூலம் தெரிகிறது. இதற்கு முக்கியமான காரணம் அந்நாட்டின் பண மதிப்பு என்பது மிக வேகமாக குறைந்து வருவதால் அந்நாட்டில் உள்நாட்டு உற்பத்தி என்பது செய்ய முடியாத நிலை இருக்கிறது.

இதுபோக அந்நாடு ஆட்டோ மொபைல்கள் மீதான அதிகமான வரியை சுமத்துவது மற்றும் ஆட்டோமொபைல் கடன் வசதிக்கு அதிகமான வட்டி விகிதம் விதிப்பதும் ஆட்டோமொபைல் விற்பனைக்கான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பாகிஸ்தான் நாட்டு மக்கள் ஒரு சிறிய காரை வாங்கினாலே அவர்கள் பெரும் பணக்காரர்களாக தான் இருக்கக் கூடும் என்ற நிலை வந்து விட்டது.

pakistan car sales

பாகிஸ்தானில் இந்த நிதியாண்டு துவக்கத்தில் இருந்தே ஆட்டோமொபைல் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்து வருகிறது. முதல் நான்கு மாதங்களில் 27,163 வாகனங்கள் தான் விற்பனையாக இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 48,573 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது அதை ஒப்பிடும்போது 44% விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பாகிஸ்தானில் தற்போது அட்லஸ் ஹோண்டா, பாக் சுஸூகி, டொயோட்டா, ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் தான் அதிகமான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் எல்லாம் பாகிஸ்தானிலேயே ஆலையை அமைத்து தனது உற்பத்தியை செய்து பாகிஸ்தானில் விற்பனையை வருகிறது.

இதுபோக இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கமர்ஷியல் வாகனங்களும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி வருகின்றன. இந்த விற்பனையும் ஒவ்வொரு மாதமும் சரிந்து கொண்டே வருகிறது. குறிப்பாக டூவீலர் விற்பனை முதல் நான்கு மாத விற்பனையில் 10 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பொருளாதார பிரச்சினை ஏற்பட்ட பின்பு பல நிறுவனங்கள் அந்நாட்டில் கார்களை தயாரிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கி உள்ளது. கார்களை தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் டிமான்டுக்கு ஏற்ப சப்ளை இல்லை அதனால் கார்களின் விலையும் அதிகமாகி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாகிஸ்தான் மக்கள் மத்தியில் கார்களுக்கான தேவை இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் கார்களின் விலை அதிகரிப்பு மற்றும் சப்ளை இல்லாத காரணத்தால் கார்களின் விற்பனை மிக மோசமான அளவு சரிவை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் பணத்தின் மதிப்பு எப்பொழுது அதிகரிக்கிறதோ அப்பொழுதுதான் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்

More from DriveSpark

Article Published On: Tuesday, November 14, 2023, 19:20 [IST]
English summary
Pakistan car sales october 6200 units sold
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X