பெட்ரோல், டீசல் வாகனங்களைத் தயாரிக்க திடீர் தடை! பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2035ம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல், மற்றும் டீசல் வாகனங்களுக்கான தடையைக் கொண்டுவரும் மசோதா சட்டமாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே பெட்ரோல், டீசல் வாகனங்களை மாசுக் கட்டுப்பாட்டிற்காகத் தடை விதித்து உத்தரவிட்டு மிகப்பெரிய புரட்சியைச் செய்துள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

உலகம் முழுவதும் காற்று மாசு மிக முக்கியமான ஒரு பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் உலகம் வெப்ப மயமாகி சூழ்நிலைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் துருவங்களில் பனிப்பாறைகள் உருகி வருகிறது. இதனால் காற்றுமாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகிறது. உலகில் ஏற்படும் ஒட்டு மொத்த காற்று மாசுவில் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுவால் தான் ஏற்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களைத் தயாரிக்க திடீர் தடை! பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல்/ டீசல் வாகனங்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத வாகனங்களைப் பயன்படுத்த பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றனர். அதில் பலர் தேர்வு செய்யும் ஆப்ஷன் எலெக்ட்ரிக் கார்கள் தான். இது போக ஹைட்ரஜன் பவர்டு ஃப்யூயல் செல்கள் மூலம் இயங்கும் வாகனங்கள் கூட இருக்கின்றன. ஆனால் ஹைட்ரஜனிற்கான செலவு அதிகம் என்பதால் எலெக்ட்ரிக் கார்களில் அரசுகள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

காற்று மாசுவை கட்டுப்படுத்த கார்பன் நியூட்டிராலிட்டி கொள்கையை அரசுகள் வகுத்து வருகின்றன. அதன்படி ஐரோப்பிய அரசு 2050ம் ஆண்டிற்குள் அந்நாட்டை கார்பன் நியூட்ரல் நாடாக மாற்ற முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கான தடையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இவ்வளவு சீக்கிரமாக அறிவிப்பதற்குக் காரணம் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இதன் மூலம் போதுமான நேரம் கிடைக்கும். 2035ம் ஆண்டிற்குள் அந்நிறுவனங்கள் எல்லாம் படிப்படியாக தங்கள் பெட்ரோல்/ டீசல் வாகன தயாரிப்புகளை நிறுத்திவிட்டு மாற்றுச் சக்தி வாகனங்களைக் களத்தில் இறக்கும் என்பதால் இதைச் செய்துள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் சீன நிறுவனங்கள் 80 புதிய எலெக்ட்ரிக் கார்களை சர்வதேச மார்கெட்டில் களம் இறக்கவுள்ளன. குறைந்த விலை கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை பல செக்மெண்டில் கார்கள் வெளியாகவுள்ளன. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ஐரோப்பா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் இதனால் அந்நாட்டில் பலருக்கு வேலையிழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் ஜெர்மனியில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் கம்பஷன் இன்ஜின் சார்ந்த துறைகளில் வேலை செய்கின்றனர். அவர்கள் வேலையை இழந்தால் அவர்களுக்கான மாற்ற தொழிற் வாய்ப்பை யார் ஏற்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் அதற்கு 12 ஆண்டுகள் வரை நேரம் இருப்பதால் அதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு செய்யும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Wednesday, February 15, 2023, 18:30 [IST]
English summary
Parliment approves ban on petrol diesel car by 2035
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+