Petrol Pump Safety Tips: நம்ம கேர்லஸ்ல பண்ணுற இந்த சின்ன விஷயம் கூட உங்க வண்டியை தீப்பிடிக்க வச்சிடும்!
இன்று நாம் கார் பைக்குகளுக்கு எரிபொருள் நிரப்பி பெட்ரோல் பங்க்களுக்கு செல்கிறோம். பெட்ரோல் பங்க்களில் மிக அதிகமான பெட்ரோல் மற்றும் டீசல்கள் நிரப்பப்பட்டு இருக்கும். இதனால் அந்த இடம் அதிகமான பாதுகாப்பைப் பின்பற்ற வேண்டிய இடமாகும். சிறிய தவறு கூட பெரிய விபரீதங்களுக்கு வழி வகுத்துவிடும்.
அரசும் பெட்ரோல்/டீசல் பல்க்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறை குறித்து அறிவுறுத்தி அவ்வப்போது கண்காணித்தும் வருகிறது. சமீபத்தில் கூட வாகன ஒட்டிகளுக்கு முழு டேங்க் பெட்ரோலை பாதுகாப்பு காரணங்களுக்காக நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

முழு டேங்க் பெட்ரோலை நிரப்பினால் அது வெப்பம் காரணமாக விரிவடையலாம் மற்றும் கார் ஏற்ற இறக்கங்களில் நிற்கும் போது அதிக பிரஷர் காரணமாக லீக்கேஜ் ஏற்படலாம், இப்படியாகப் பல காரணங்களுக்காக முழு டேங்க் அளவை விட 10-15 சதவீதம் பெட்ரோலை குறைவாகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் பங்க்களில் நாம் சில பாதுகாப்பு விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் பெரும் விபத்துக்களைக் கூட நம்மால் தவிர்க்க முடியும். நாம் செய்யும் சிறு சிறு கவனக்குறைவுகள் கூட விபத்துக்களுக்கு காரணமாக இருக்கலாம். இப்படியாகப் பலர் பெட்ரோல் பங்க்களில் செய்யும் தவறுகளையும் எது சரியான வழிமுறை என்பதையும் காணலாம்.
இன்ஜின் ஆஃப்: பலர் பெட்ரோல் பங்க்களில் தங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பும் போது பலர் இன்ஜின்களை ஆஃப் செய்யாமல் ஆனில் இருக்கும் போது பெட்ரோல்/டீசலை நிரப்புகின்றனர். இது முற்றிலும் பாதுகாப்பற்ற முறை. இன்ஜின் இயக்கத்தில் இருந்தால் கம்பஷன் நடக்கிறது. இதனால் தீப்பொறி இன்ஜினிற்குள் ஏற்படுகிறது என்ற அர்த்தம்.
இதனால் காரே கூட தீ பிடித்து எரிந்து விட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பெட்ரோல்/டீசல் நிரப்பும் போது வாகனத்தின் இன்ஜினை ஆஃப் செய்து விடுவது நல்லது. இன்ஜின் ஓடிக்கொண்டிருக்கும்போதே பெட்ரோல் டீசலை போட முயற்சி செய்ய வேண்டாம். இது நிச்சயம் பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
தீயை விலக்கி வையுங்கள்: பெட்ரோல் பங்க்களில் நெருப்பு என்பது எந்த விதத்திலும் இருக்கவே கூடாது. இதனால் நெருப்பை பத்த வைக்கும் எந்த விஷயத்தையும் பெட்ரோல் பங்க்கில் செய்யாதீர்கள். சிலருக்கு பெட்ரோல் பங்கில் இருக்கும் போது சிகரெட் பிடிக்கத் தோன்றும் அவர்கள் அதை தவிர்க்க வேண்டும். அடுத்தாக குழந்தைகள் சிலர் லென்ஸை வைத்த தீப்பிடிக்க வைத்து விளையாடுவார்கள் இந்த ஆபத்தான விளையாட்டை எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் காருக்குள் இருக்கும் போது விளையாட அனுமதிக்காதீர்கள்.
செல்போனை சுவிட் ஆப் செய்யுங்கள்: செல்போன் குறிப்பிட்ட அளவு ரேடியேஷனை வெளியிடுவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் காலங்களில் செல்போன் வழக்கத்தை விட அதிகமாகச் சூடாகும். இதனால் செல்போன் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த பாதிப்பு சங்கிலித் தொடராக மாறி மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தக்கூட வாய்ப்புகள் உள்ளது.
இதனால் பெட்ரோல் பங்க்களில் செல்போனில் பேசிக்கொண்டிருப்பது பாதுகாப்பில்லாதது. இதனால் பெட்ரோல் பங்கிற்கு நுழையும் முன்னரே செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொள்வது சிறந்தது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications