இவ்வளவு கம்மி ரேட்ல, அதிக மைலேஜ் தரும் லோடு ஆட்டோவா? இப்பவே ஷோரூம்ல புக்கிங் பண்ணுங்க!
பியாஜியோ நிறுவனம் புதிய அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் என்ற சிஎன்ஜி லோடு ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக மைலேஜ் உடன் அறிமுகமாகியுள்ள இந்த 3 வீலர் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனம் பியாஜியோ, இந்நிறுவனம் தற்போது புதிய அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் என்ற சிஎன்ஜி லோடு ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது குறைந்த செலவில் நீடித்த உழைப்பை வழங்கும் லோடு ஆட்டோவாக தற்போது அறிமுகமாகியுள்ளது.

இந்த ஆட்டோவில் 230 சிசி ஏர் கூல்டு, நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3 வால்வு டெக்னாலஜி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது மற்ற லோடு ஆட்டோவை விட அதிகமான புல்லிங் பவர், அதிக செயல் திறன் ஆகியவற்றைக் குறைந்த பராமரிப்பு செலவில் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த 3 வீலர் ஆட்டோவின் வடிவமைப்பு மற்ற ஆட்டோக்களை விட 26 சதவீதம் அதிகமாக அதிக திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலங்களில் ஏறுவது, மலைப் பகுதிகளில் இந்த ஆட்டோவை பயன்படுத்துவது எல்லாம் சுலபமாக இருக்கும். இந்த ஆட்டோவின் இன்ஜின் 17.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் தான் இந்த செக்மெண்டிலேயே அதிக டார்க் திறன் கொண்ட இன்ஜினாகும்.
இந்த லோடு ஆட்டோவில் ட்யூப் லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் டிரைவர்கள் சிரமம் இல்லாமல் நீண்ட தூரம் வாகனத்தை ஓட்ட முடியும். இதில் முக்கியமான அம்சமே மைலேஜ் தான். அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் சிஎன்ஜி லோடு ஆட்டோவை பொருத்தவரை ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 40 கி.மீ வரைபயணிக்கலாம். இது செக்மெண்டிலேயே அதிக மைலேஜ் தரும் வாகனமாக இருக்கிறது.
இந்த அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் லோடு ஆட்டோ அதிகபட்சமாக 56 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஆட்டோவிற்கு பியாஜியோ நிறுவனம் 36 மாதங்கள் அல்லது 1 லட்சம் கி.மீ வரை வாரண்டியை வழங்கி வருகிறது. இந்த 3 வீலர் ரூ2.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த சிறிய ரக கமர்ஷியல் வாகனத்திற்கு மிகப்பெரிய மார்கெட் இருக்கிறது. இந்த ரக வாகன ஒட்டுநர்களுக்கு அதிக மைலேஜ் ஒரு முக்கியமான தேவையாக இருந்தது. தற்போது பியாஜியோ அதிக மைலேஜ் உடன் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








