புதுசா ஆட்டோ வாங்கும் பிளானில் இருக்கீங்களா? இந்த எலக்ட்ரிக் ஆட்டோ மார்க்கெட்டுக்கு வந்திருக்கு!!
பியாஜியோ நிறுவனம் அதன் புதிய ஏப் இ-சிட்டி எஃப்.எக்ஸ் என்.இ மேக்ஸ் (Piaggio Ape E-City FX NE Max) என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஆட்டோவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் வாகனங்கள் உற்பத்தியில் பல வருடங்களாக கொடிக்கட்டி பறக்கும் நிறுவனங்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் பியாஜியோ குழுமமும் ஒன்றாக இருக்கும். கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து 26,000க்கும் அதிகமான எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக சமீபத்தில்தான் பியாஜியோ அறிவித்தது.

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டுமே 12,000 எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்கள் இந்த நிறுவனத்தில் இருந்து சில்லறையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த எண்ணிக்கையை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் விதமாக மற்றொரு புதிய எலக்ட்ரிக் 3-வீலர் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஏப் இ-சிட்டி எஃப்.எக்ஸ் என்.இ மேக்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஆட்டோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.46 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஆட்டோவை இயக்க கிமீ-க்கு வெறும் 0.50 பைசா மட்டுமே செலவாகும் என பியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 145கிமீ தொலைவிற்கு பயணிக்கலாமாம்.
புதிய ஏப் இ-சிட்டி எஃப்.எக்ஸ் என்.இ மேக்ஸ் எலக்ட்ரிக் ஆட்டோவின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 3 மணிநேரங்கள் 45 நிமிடங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோவை மஹாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு அருகே உள்ள பாராமதி தொழிற்சாலையில் பியாஜியோ நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
புதிய ஏப் இ-சிட்டி எஃப்.எக்ஸ் என்.இ மேக்ஸ் எலக்ட்ரிக் ஆட்டோவின் அறிமுகம் குறித்து பியாஜியோ நிறுவனத்தின் கமர்ஷியல் வாகனங்கள் பிரிவின் துணை நிர்வாக தலைவர் அமித் சாகார், "இன்று தயாரிப்பை மட்டும் நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை, நாங்கள் மனநிலையை அறிமுகப்படுத்துகிறோம், நாங்கள் போக்குவரத்துக்கு புதிய வழியை அறிமுகப்படுத்துகிறோம்" என கருத்து தெரிவித்துள்ளார்.
பியாஜியோ நிறுவனத்தின் தலைவர் டிகோ கிராஃபி கருத்து தெரிவிக்கையில், "அதிகரித்துவரும் வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த எலக்ட்ரிக் வாகனம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்தை மட்டுமின்றி, இது ஒட்டு மொத்த பயண அனுபவத்தையும் மேம்படுத்தும்" என்றார்.
மேலும், "வித்தியாசமான 3-வீலரை நீங்கள் தமிழ்நாட்டில் காண போகிறீர்கள். மிகவும் வித்தியாசமான..." எனவும் டிகோ கிராஃபி தெரிவித்துள்ளார். இந்த ஆட்டோவின் உற்பத்தியில் ஹைலைட் என்னவென்றால், புதிய ஏப் இ-சிட்டி எஃப்.எக்ஸ் என்.இ மேக்ஸ் எலக்ட்ரிக் ஆட்டோவை பியாஜியோ நிறுவனத்தின் தொழிற்சாலையில் முழுக்க முழுக்க பெண் தொழிலாளர்கள் அசெம்பிள் செய்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புது புது எலக்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகப்படுத்துவதில் பியாஜியோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அதாவது, ஆட்டோமொபைல் துறையில் இந்திய அரசின் எலக்ட்ரிக்கை நோக்கிய முயற்சிகளில் தனது பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என பியாஜியோ நிறுவனம் விரும்புகிறது. இதனாலேயே, இந்த ஏப் எலக்ட்ரிக் ஆட்டோ போன்று குறைந்த விலையில் எலக்ட்ரிக் வாகனங்களை வழங்க முயற்சிக்கிறது.


Click it and Unblock the Notifications








