தந்தூரி, பன்னீர் டிக்கானு மனசுக்கு பிடிச்சத டிராவல் பண்ணும்போதே சமச்சி சாப்பிடலாம்! காருக்குள்ள ஓட்டல் வசதியா!

சீனாவைச் சேர்ந்த சேர்ந்த போலஸ்டோன்ஸ் ஆட்டோமொபைல்ஸ் (Polestones Automobiles) எனும் நிறுவனம் அதன் முதல் சொகுசு எஸ்யூவி ரக காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் ஸ்டார்ட்-அப் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். கவர்ச்சிகரமான மற்றும் லக்சூரி வாகனமாக இதனை போலஸ்டோன்ஸ் உருவாக்கி இருக்கின்றது.

இதற்கு போலஸ்டோன்ஸ் 01 எஸ்யூவி (Polestones 01 SUV) என பெயரிடப்பட்டு இருக்கின்றது. மேலும், மற்றும் ஒரு சுவாரஷ்யமான தகவல் என்ன என்றால் இந்த காரை இத்தாலியைச் சேர்ந்த பினின்ஃபரினாவே வடிவமைத்து இருக்கின்றது. இதுவே, இந்த காரை பலதரப்பட்ட அம்சங்கள் கொண்டதாக வடிவமைத்திருக்கின்றது.

Polestones 01

அதாவது, டிராவலின்போது சமைத்து சாப்பிடும் வகையில் இந்த காரை மினி கிட்சன் கொண்டதாக உருவாக்கி இருக்கின்றது. இதுதவிர, 4X4 வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் இந்த காரால் அசால்டு செய்துவிட முடியும் என தெரிகின்றது.

குறிப்பாக, கரடு-முரடான காட்டு பாதையாக இருந்தாலும் இந்த கார் மிக சிறப்பாக சமாளித்துவிடும். இந்த அம்சங்களுடன் சேர்த்து லெவல் 2 ரக தன்னாட்சி தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 469 எச்பி பவர் மற்றும் 740 என்எம் டார்க் ஆகியவற்றை வெளியேற்றும் திறன் கொண்டது.

Polestones 01 seat

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீட்டருக்கும் அதிகன் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. இத்துடன், வெறும் 5.5 செகண்டுகளிலேயே இந்த காரால் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்றும் தெரிவித்து இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மிகப் பெரிய பேட்டரி பேக்கையும் இந்த காரில் சீன நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

56 kWh பேட்டரி பேக்கையே அது வழங்கி இருக்கின்றது. இது ஓர் செல்ஃப் சார்ஜிங் வசதிக் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 235 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும்.

Polestones 01 inside

ஆகையால், இந்த காரை பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் ஓட்டிக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான திறன்களுடன் சேர்த்தே போலஸ்டோன்ஸ் நிறுவனம், இந்த காரில் கிச்சன் வசதியை வழங்கி இருக்கின்றது. குக்கர், தண்ணீரை விநியோகிப்பதற்கான சிறிய தொட்டி மற்றும் பாத்திரங்களை கழுவும் மற்றும் சேமித்து வைக்கும் இடம் என வீடுகளில் இருப்பதைப் போலவே தாராளமான வசதிக் கொண்ட கிச்சன் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதை வைத்து ஓர் ஹோட்டலைபோல சமைத்து சாப்பிட முடியும். இதுபோன்ற அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருப்பதால் இந்த காரை கேம்ப் மற்றும் அட்வென்சர் பயணங்களுக்கு மிக தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தெளிவாக தெரிகின்றது. இதற்கேற்ப சிறிய டென்ட்டை அமைக்கும் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த டென்ட்டை அமைக்க வெறும் ஐந்து நிமிடங்களே போதுமானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Polestones 01 back seat

இதுபோன்று இன்னும் ஏராளமான அம்சங்கள் போலஸ்டோன் 01 காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரில் ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். மேலும், நிறுவனம் இந்த காரை ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஆனால், இதன் விலை விபரம் அறிவிக்கப்படவில்லை.

குறிப்பாக, இதன் ஏழு இருக்கை வசதிக் கொண்ட காரை முன் வரிசை இருக்கையை தவிர மற்ற அனைத்து இருக்கைகளையும் மடித்து வைத்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாக ஓர் கிங் சைஸ் மெத்தையை காருக்குள் கொண்டு வந்தததைப் போன்ற படுக்கை வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.

Polestones 01 suv side design

இவற்றுடன் சேர்த்து இந்த காரில் பெரிய திரை ஒன்று பொழுதுபோக்கிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரில் பெட்ரோலை முழுமையாக நிரப்பி, பேட்டரியையும் முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 1,100 கிலோ மீட்டர் தூரம் வரை நம்மால் டிராவல் செய்துக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று பன்முக பயன்பாட்டு வசதிக் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக பிக்-அப் டிரக்கிற்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதை நாம் கூறலாம். இதுபோலவே இந்த காரும் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனில் நல்ல வரவேற்பையே பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 31, 2023, 15:56 [IST]
English summary
Pininfarina designed built in kitchen polestones 01 car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X