மோடி பயன்படுத்திய இந்த காரோட விலை என்ன தெரியுமா? உண்மை தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பிரதமர் மோடி பயன்படுத்திய ஆயுதம் தாங்கிய ரேஞ்ச் ரோவர் கார் பற்றி பலருக்கும் தெரியாத ரகசியத் தகவல்கள் இருக்கிறது. அதைப் பற்றித் தான் இங்கே விரிவாகக் காணப்போகிறோம்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. தற்போது அங்குப் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகப் பிரச்சாரம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி தும்கூர் பகுதியில் ரோடு ஷோ நடத்தினார். இதற்கு அவர் பயன்படுத்திய கார் தான் தற்போது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

PM Modi Range Rover

இந்திய நாட்டின் பிரதமர் என்றால் உலகின் முக்கியமான தலைவர்களில் ஒருவர் என்பதால் அதனால் அவர் பயணிக்கும் வாகனங்கள் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் நிறைந்த ஆயுதம் தாங்கிய கார்களாக தான் இருக்கும். இப்படியான ஒரு காரில் தான் அவர் இந்த ரோடு ஷோவையும் நடத்தியுள்ளார். இந்த கார் டாடா குழுமத்தின் நிறுவனமான லேண்ட் ரோவர் நிறுவனம் தயாரித்த கார்.

இந்த கார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் கார் தான். ஆனால் இது மற்ற ரேஞ்ச் ரோவர் காரை போல இல்லை. இதில் பல ரகசியமான ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் மற்ற காரை போன்ற தோற்றத்திலிருந்தாலும் முற்றிலும் மாறுபட்ட அம்சங்களைக் கொண்டது.

PM Modi Range Rover

இந்தா காரின் இன்ஜினைபொருத்தவரை 5.0 லிட்டர் வி8 இன்ஜினை கொண்டது. இது 400 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த காரின் பாடி கட்டமைப்பு செய்யும் போது எந்த விதமான தாக்குதல் நடந்தாலும் தாங்கும் அளவிற்கு பலமானதாக இருக்கும்படி வடிவமைத்துள்ளது. ஐஇடி பாம் வெடித்தாலும் வாகனத்திற்குள் இருப்பவருக்குச் சேதாரமாகாதபடி வடிவமைத்துள்ளனர்.

மேலும் இந்த கார் ஆயுதம் தாங்கிய கார் என்பது மட்டுமல்ல ஆயுத தாக்குதல் நடந்தாலும் தாங்கும் அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கண்ணாடிகள் குண்டு துளைக்காத அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காருக்குள் இருந்து பாதுகாப்பு அம்சங்களைப் பாதிக்காமல் வெளியில் கம்யூனிகேஷன் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

PM Modi Range Rover

இந்த காரின் உட்கட்டமைப்பு காரில் உள்ள ஆயுதங்களைச் சுலபமாகப் பயன்படுத்தும் படியும், உள்ள இருப்பவரின் பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதியை மனதில் வைத்து வடிவமைத்துள்ளனர். இந்த காரில் இரண்டு 10 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிக ரெசல்யூஷன் கொண்ட டச் ஸ்கிரீன் ஆகும்.

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் யூசர் ஃபிரென்ட்லியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நேவிகேஷன், என்டர்டெயின்மென்ட் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியன இருக்கும். இந்த கார் மழை, வெள்ளம், புயல், பனி, மணல், மலை என எல்லா விதமான இடங்களிலும் சுலபமாகப் பயணிக்கும் படி இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 10.4 நொடியில் பிக்கப் செய்யும். அதிகபட்சம் 193 கி.மீ வேகம் வரை பயணிக்கும். மேலும் இந்த காரில் 1000 கிலோ எடை கொண்ட ஆயுதம் தாங்கு
ம் கண்ணாடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இது இந்தியப் பிரதமருக்காகவே தனித்துவமாகத் தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளாகும்.

பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக அவரிடம் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடி ஆயுதங்கள் இருக்கும். பாதுகாப்பு காரணமாக இந்த ஆயுதங்கள் குறித்த ரகசியம் வெளியே சொல்ல மாட்டார்கள். இந்த காரில் அத்தனை ஆயுதங்களும் இருக்கும் வெளியிலிருந்து ஆயுத தாக்குதல் நடந்தது காருக்குள் உள்ள ரகசிய ஆயுதங்களைப் பயன்படுத்தித் திருப்பி தாக்க முடியும்.

இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த காரின் விலை எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள்? பாதுகாப்பு காரணமாகச் சரியான விலையை பொது வெளியில் வெளியிட மாட்டார்கள். ஆனால் இந்த காரின் விலை சுமார் ரூ10 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் மட்டுமல்ல உலகின் பல முக்கியமான தலைவர்கள் பயன்படுத்தும் கார்களில் ஆயுதங்களும், அதிகமான பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும். அவர்களுக்குச் சர்வதேச அளவில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இதைச் செய்துள்ளனர். தொடர்ந்து இதன் பாதுகாப்பு தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்தப்படும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 5, 2023, 21:00 [IST]
English summary
Pm modi used armored range rove sentinel suv in karnataka election campaign
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X