இந்த போர்ஷே காரை வாங்கணும்னா நீங்க கோடீஸ்வரரா இருந்தா மட்டும்தான் முடியும்.. விலையை கேட்டீங்க ஷாக்காயிருவீங்க!

போர்ஷே (Porsche) நிறுவனத்தின் மிக மிக விலையுயர்ந்த மற்றும் தரமான தயாரிப்புகளில் ஒன்றாக பனமேரா (Panamera) காட்சியளிக்கின்றது. இந்த காரின் மூன்றாம் தலைமுறை (3rd Gen) வெர்ஷனை சமீபத்தில் அந்நிறுவனம் உலகளவில் வெளியீடு செய்தது. அதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் அது அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தது.

இந்தநிலையிலேயே, இந்த சூப்பரான ஸ்போர்ட்ஸ் செடான் வகை காருக்கு இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. அடுத்த வாரமே இந்த காருக்கான புக்கிங் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருக்கின்றது. மேலும், இந்த பணிகள் விரைவில் தொடங்க இருப்பதை முன்னிட்டு போர்ஷே நிறுவனம் அதன் வழக்கமான பின் வீல் இயக்கம் கொண்ட பனமேராவின் விலைகளை மட்டும் அறிவித்து இருக்கின்றது.

Porsche panamera new gen revealed

1 கோடியே 68 லட்ச ரூபாக்கு ரியர் வீல் டிரைவ் வசதிக் கொண்ட வி6 பனமேரா விற்கப்பட இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இப்போது விற்பனையில் இருக்கும் 2 ஆம் தலைமுறை பனமேரா 1 கேடியே 57 லட்ச ரூபாக்கு விற்கப்படுகின்றது. புதிய தலைமுறையில் சிறப்பு வசதிகள் அதிகம் என்பதால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கின்றது.

ஆமாங்க, பழைய அம்சங்களுடன் சேர்த்து புதிய அம்சங்கள் பலவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 8 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய எலெக்ட்ரிக் இருக்கைகள், மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட், 6 ஏர் பேக்குகள், முழு எச்டி திறன் கொண்ட 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் நேவிகேஷன் உடன் கூடிய போர்ஷே கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Porsche panamera running shot

இது தவிர, செல்போன் இணைப்பு, ஆடியோ இன்டர்ஃபேஸ் மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினைப் பொருத் வரை இந்த காரில் 2.9 லிட்டர் ட்வின் டர்போ வி6 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டாருடன் 8 ஸ்பீடு பிடிகே ஆட்டோ கியர் மற்றும் டூ-வே அடாப்டீவ் ரியர் ஸ்பாய்ளர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. உலக நாடுகளில் இந்த காரில் வி8 மோட்டார் மற்றும் ஹைபிரிட் அம்சங்கள் கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த ஆப்ஷன் இந்தியர்களுக்கு வழங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Porsche panamera front view

அதேவேளையில், இதன் வரும் நாட்களில் அரங்கேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆகையால், இதன் அறிமுகத்தை அடுத்த ஆண்டின் இறுதிக்குள் எதிர்பார்க்கலாம். வி8 பனமேரா அதிக பவர்ஃபுல் வெர்ஷனாக இருக்கும். எனவே அது ஜிடிஎஸ் வெர்ஷனாக கருதப்படும். இந்த வெர்ஷனில் முழு ஆக்டீவ் சஸ்பென்ஷன் சிஸ்டமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த சூப்பர் காரின் வருகை இந்தியாவில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி63 எஸ் இ-பெர்ஃபார்மன்ஸ் 4 டோர் கூபே (Mercedes-AMG GT63 S e-Performance 4-door Coupe) மாடலுக்கு போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலின் விலை ரூ. 3.3 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Porsche panamera rear

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏற்கனவே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் கோடி ரூபாய் மதிப்புள்ள கார் மாடல்களில் விரைவில் புதிய தலைமுறை போர்ஷே பனமேரா வி6-ம் இணைய இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் பழைய தலைமுறைக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய தலைமுறையை களமிறக்கும் முயற்சியில் போர்ஷே களமிறங்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்களிடத்தில் நல்ல வரேவற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 26, 2023, 10:48 [IST]
English summary
Porsche announced starting price of new gen panamera
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X