இந்த காரை வாங்குற காசுல ஒரு அரண்மனையவே கட்டி ராஜா கணக்கா வாழ்ந்திடலாமே! இவ்ளோ விலை உள்ள கார் இந்தியால அறிமுகமா

பிரபல சொகுசு மற்றும் சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே (Porsche), 911 எஸ்/டி (911 S/T) எனும் புதுமுக கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த காரின் விலை, சிறப்பு வசதிகள் மற்றும் எஞ்ஜின் திறன் உள்ளிட்ட விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் போர்ஷே (Porsche), இந்தியாவில் தனது 911 எஸ்/டி (911 S/T) கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்து இருக்கின்றது. நிறுவனத்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வகை கார்களான ஜிடி ரக கார்களை தழுவி உருவாக்கப்பட்ட ஓர் சூப்பர் கார் மாடலே இது ஆகும்.

Porsche 911 s t front running shot

குறிப்பாக ஜிடி3 ஆர்எஸ் (GT3 RS) மற்றும் ஜிடி 3 டூரிங் (GT 3) மாடல்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் பல்வேறு அம்சங்களை இந்த தயாரிப்பில் நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த இரண்டும் 1960 மற்றும் 1970ஸ் கால கட்டங்களில் கொடிக்கட்டி பறந்த தயாரிப்புகள் ஆகும்.

911 எஸ்/டி சூப்பர் காரில் அதிக திறனை வெளியேற்றக் கூடிய 4.0 லிட்டர் ஃபிளாட் 6 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 518 பிஎச்பி பவர் மற்றும் 465 என்எம் டார்க் வரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Porsche 911 s t badge

ஜிடி3 ஆர்எஸ் மாடலிலும் இதே வகை எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால் கியர்பாக்ஸ் விஷயம் மட்டும் மாற்றப்பட்டு இருக்கின்றது. ஜிடி3 ஆர்எஸ் சூப்பர் காரில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் வசதிக் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே வழங்கப்பட்டது. ஆனால், 911 எஸ்/டி மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 3.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அசூர வேகத்தில் செல்லும் திறன் கொண்ட சூப்பர் காரையே போர்ஷே இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Porsche 911 s t centre console

இதன் திறன் மட்டுமே நம்மை வியக்க வைக்கும் இல்லைங்க, அந்த காரின் விலையுமே நமக்கு மயக்கத்தை வரவைக்கும் வகையில் உள்ளது. போர்ஷே இந்த ஆடம்பர வசதிகள் நிறைந்த சூப்பர் காருக்கு 4.26 கோடி ரூபாயை விலையாக நிர்ணயம் செய்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் இதைவிட அதிக விலைக் கொண்ட ஓர் போர்ஷே காரை காண முடியாது. ஆமாங்க, போர்ஷேவின் மிக உயரிய விலைக் கொண்ட காராகவே 911 எஸ்/டி இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது ஓர் லிமிடெட் எடிசன் பதிப்பாகும். அதாவது, குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இது விற்பனைக்குக் கிடைக்கும்.

Porsches most expensive car

911 மாடலின் 60ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டே இந்த சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஒட்டுமொத்த உலகிற்குமே அது வெறும் 1,963 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்காக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இதை வாங்க போர்ஷே கார் பிரியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவலாம் யூகிக்க முடிகின்றது.

இது ரேர் கலெக்ஷனாக இருக்கப் போவதால் கட்டாயம் இந்தியாவிலும் இந்த காரை வாங்க செல்வந்தர்கள் மத்தியில் போட்டி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் ஓர் சிறப்பு பதிப்பு என்பதால் சில சிறப்பு வசதிகளை கூடுதல் கவர்ச்சி தோற்றத்திற்காக போர்ஷே சேர்த்திருக்கின்றது.

Porsche 911 s t top view

தங்க நிறத்தாலான போர்ஷே லோகோ, இலகு ரக எடைக் கொண்ட அதேசமயம் அதிக உறுதியான கிளாஸ் மக்னீசியம் வீல்கள் மற்றும் பெரிய ஏர் இன்டேக்குகள் உள்ளிட்டவை இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன், சிறப்பு நிறமான ப்ளூ மெட்டாலிக் பெயிண்டிங் இந்த காருக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த நிறமே 1960ஸ் 911எஸ் கார் மாடலில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை டிராக்கில் வைத்துக்கூட பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், சாலையில் வைத்து பயன்படுத்தவும் லீகலான ஓர் காராக இது இருக்கின்றது. ஆனால், இதன் உச்சபட்ச வேகத்தை இந்தியாவின் எந்த பொது சாலையில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓர் பெரிய சொகுசு பங்களாவையே கட்டி எழுப்பும் மதிப்பில் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, இவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்டாலும் அதன் உச்சப்பட்ச வேகத்தை இந்தியாவின் பொது சாலையில் பயன்படுத்த முடியாது என்பது கூடுதல் வருத்தமளிக்கும் தகவலாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 26, 2023, 9:39 [IST]
English summary
Porsche s most expensive 911 s t car launched in india
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X