இந்த மாதிரி ஓர் காரை இதுவரை இந்தியால யாருமே தயாரிச்சது இல்ல... மிலிட்டரிக்காக இப்படி ஒரு வண்டியா!!
மிலிட்டரிக்காக இப்படி ஒரு வண்டியா என நினைக்கும் அளவிற்கு சூப்பரான ஓர் எலெக்ட்ரிக் காரை இந்திய நிறுவனம் ஒன்று உருவாக்கி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிரவைக். இது தனது மிலிட்டரி பயன்பாட்டு வசதிக் கொண்ட கார் மாடலை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வெகு விரைவில் இந்தியாவில் தொடங்க இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த காரை காட்சிப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் ஓர் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும்.

இதை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இது இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனம் மிக சமீபத்திலேயே பயணிகள் பயன்பாட்டு வசதிக் கொண்ட ஓர் புதுமுக எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்டிங்க்சன் எம்கே1 எலெக்ட்ரிக் காரையே இந்திய சந்தையில் அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. டெஃபி எனும் பெயரில் இந்த காரை அது அறிமுகப்படுத்தியது. இந்த காரின் வெளியீட்டின்போதே நிறுவனம் ஓர் மிலிட்டரி பயன்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தது.
இதையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இந்தியாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ ஜனவரி 13 தொடங்கி 18 வரையில் நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மற்றும் உலக நாடுகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட வாகன உற்பத்தியாளர்கள் பங்கு பெற இருக்கின்றனர். இந்த வாகன கண்காட்சியிலேயே பிரவைக் அதன் மிலிட்டரி பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய இருக்கின்றது.

இதுவே, இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மிலிட்டரி பயன்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த வாகனத்திற்கு வீர் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ஓர் மிலிட்டரி வாகனம் என்பதால் மிலிட்டரி வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் வண்ண தீம் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் பங்கு பெறுவர்கள் இந்த வாகனத்தை கண்டு ரசிக்க மட்டுமல்ல தொட்டு ரசிப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
6 ஆக்ஸில்கள் அடங்கிய ரோபோட்டிக் ஆர்ம்ஸ் மின்சார வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் எல்லைகள் அனைத்தும் கரடு-முரடான பாதையைக் கொண்டதாக இருக்கின்றது. இத்தகைய பாதையை சமாளிக்க இந்த 6 ஆக்ஸில்கள் ரோபோட்டிக் ஆர்ம் மிக சிறந்த உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் மிக சிறந்த அட்வான்ஸ்டு சஸ்பென்ஷன் சிஸ்டம் ஆகும். நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான வீர்-ஐ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி அன்றே இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை
இதன் டெலிவரி பணிகள் 2023 தீபாவளியின்போது தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மின்சார கார் அதிகபட்சமாக 500 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என குறிப்பிட்டிருந்தோம். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 90.2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். உதாரணமாக டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்யும்போது வெறும் 30 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இந்த அளவு சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திலேயே பிரவைக் டெஃபி சார்ஜாகும். ஆகையால் நீண்ட நேரம் காத்திருந்து இதை சார்ஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்காது. இந்த எலெக்ட்ரிக் காரின் அதிக வேகத்திற்காக 402 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் ஏற்கனவே கூறியதைப் போல் மணிக்கு 210 கிமீ வேகத்தில் பயணிக்கும். இதுதவிர, வெறும் 4.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.
இத்தகைய ஆச்சரியமிகு வசதிகளுடனேயே பிரவைக் டெஃபி விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் உடனேயே நிறுவனம் இரண்டாவது தயாரிப்பாக மிலிட்டரி பயன்பாட்டிற்கான வாகனத்தை உருவாக்கி இருக்கின்றது. இந்த மின்சார வாகனத்தின் சிறப்பு வசதிகள் பற்றிய விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








