இந்த வாகனத்த மட்டும் ராணுவத்துல சேர்த்தாங்க, எதிராளிங்கலாம் பயந்து ஓடிருவாங்க! தோற்றமே செம்ம மொரப்பா இருக்கு!

பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான பிரவைக் வீர் எனப்படும் மிலிட்டரி பயன்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரை ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிரவைக் (Pravaig). இந்த நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விரைவில் நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தனது அட்டகாசமான புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் தனது புத்தம் புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியீடு செய்திருக்கின்றது.

பிரவைக் வீர்

பிரவைக் வீர்

பிரவைக் வீர் (Pravaig Veer) எனும் எலெக்ட்ரிக் வாகனத்தையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் மிலிட்டரி பயன்பாட்டிற்கான வாகனம் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவைக் நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெஃபி எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகத்தின்போதே, அது ராணுவ பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தது.

எலெக்ட்ரிக் மோட்டார்

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீர் வாகனத்தை நாட்டில் அறிமுகப்படுத்தியது. இதையே தற்போது அதிகாரப்பூர்வமாக உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அது காட்சிப்படுத்தியும் இருக்கின்றது. இதில், டூயல் மோட்டார் செட்-அப்பே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் 408 எச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிரவைக் வீர்

இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை நிறுவனம் அதன் டெஃபி எலெக்ட்ரிக் காரை தழுவியே உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், சில அம்சங்கள் இரண்டிலும் ஒத்துப் போவதை நம்மால் காண முடிகின்றது. ஆனால், பயன்பாட்டைப் பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் வாகனம் பல மடங்கு டெஃபியைக் காட்டிலும் அதிக சிறப்பானதாக உள்ளது.

மிலிட்டர் வாகனம்

இது ஓர் மிலிட்டரி வாகனம் என்பதால் அனைத்து விதமான சூழலிலும் இயங்கும் திறன் மற்றும் எந்த விதமான சாலையையும் சமாளிக்கும் திறன் கொண்டதாக வீர் இருக்கின்றது. இந்த வாகனத்தில் எந்த விதமான கதவையும் நிறுவனம் சேர்க்கவில்லை. சுலபமாக வீரர்கள் ஏறி, இறங்குவதற்காக ஏதுவாக பிரவைக் வீர் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரவைக் வீர்

சிறப்பம்சங்கள்

இதுமட்டுமின்றி, தெர்மல் இமேஜிங் சென்சார், ஏர்லிஃப்ட் ஹூக்குகள், நான்கு டோன்கள் வின்ச், டூ-டோன் டோவ் ஹிட்ச், ஐபி65 ரேட்டட் ஸ்டோரேஜ் எக்யூப்மென்ட் போன்ற அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்டோரேஜில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். ஆயுதங்களைப் பாதிக்கச் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே ஐபி 65 ரேட்டிங் பெற்ற ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கின்றது.

கூடுதல் பிளஸ்கள்

அதேவேளையில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கேமிரா, அல்ட்ரா சோனிக் சென்சார்கள், அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட் மற்றும் 77 ஜிஎச்இசட் ரேடார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஹெபா ஏர் ஃபில்டர், மல்டிவிஏசி கம்ப்யூட்டர் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வாகனம் மணிக்கு 210 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ஜ் விபரம்

அதுமட்டுமின்றி, 4.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் மிலிட்டரி வாகனத்தில் 90.9 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பேட்டரி பேக்கின் ஆயுட்காலம் 10 லட்சம் கிமீ ஆகும். இதை வெறும் 30 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான வாகனமாகவே வீர் மிலிட்டரி எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 14, 2023, 19:52 [IST]
English summary
Pravaig veer ev auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+