தார் ரியர்-வீல்-டிரைவ் காரின் விலையில் சைலண்டா மஹிந்திரா செய்துள்ள சம்பவம் - இவ்வளவு உயர்த்திட்டாங்களா...
மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தார் ரியர்-வீல்-டிரைவ் காரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தார் 2ஆம் தலைமுறையில் கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் அப்போதில் இருந்து இந்த புதிய 2023ஆம் வருடம் வரையில் 4x4 ட்ரைவ் சிஸ்டத்துடன் மட்டுமே தார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த 4x4 ட்ரைவ் சிஸ்டம் ஆனது ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது.

ஆஃப்-ரோடு பயணங்களுக்கு தார் வாகனத்தை எடுத்து செல்ல தேவை இல்லாதவர்களுக்காக 4x2 ட்ரைவ் சிஸ்டத்துடன் தார் கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தார் வாகனத்தில் என்ஜினின் இயக்க ஆற்றல் ஆனது வாகனத்தின் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில் அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த சில மாதங்களிலேயே தார் 4x2 வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை அதிரடியாக ரூ.50,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மஹிந்திரா தார் ரியர்-வீல்-டிரைவ் மாடல் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஏ.எக்ஸ் (ஆப்ஷ்னல்) டீசல் மேனுவல், எல்.எக்ஸ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மற்றும் எல்.எக்ஸ் டீசல் மேனுவல் என்பவை அந்த 3 வேரியண்ட்களாகும். இதில் 3வது எல்.எக்ஸ் டீசல் மேனுவல் வேரியண்ட்டின் விலை தான் ரூ.50,000 அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இதன் விளைவாக இந்த குறிப்பிட்ட வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.11.49 லட்சமாக உயர்ந்துள்ளதாம்.

முன்பு இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.99 லட்சமாக இருந்தது. இந்த விலை அதிகரிப்பை உறுதிப்படுத்தும் வகையில் மஹிந்திரா சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆதலால் எல்.எக்ஸ் டீசல் மேனுவல் வேரியண்ட்டில் தார் ரியர்-வீல்-டிரைவ் காரை வாங்க விரும்புவோர் அருகில் உள்ள மஹிந்திரா டீலர்ஷிப் மையத்தினை அணுகவும். சந்தையில் புதியதாக அறிமுகம் செய்யப்படும் எந்தவொரு வாகனத்திற்கும் அறிமுக விலை சில காலத்திற்கு மட்டுமே இருக்கும்.
அதன்பின் அந்த வாகனத்தின் விலை அதிகரிக்கப்படுவது வழக்கமான ஒன்றே. அதேபோல் புதிய தார் ரியர்-வீல்-டிரைவ் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 மாதங்களாகி விட்டதால், அதன் குறிப்பிட்ட டீசல் வேரியண்ட்டின் விலை ரூ.50,000 அதிகரிக்கப்பட்டிருப்பது உண்மை என்றாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. மஹிந்திரா தார் ரியர்-வீல்-டிரைவ் வாகனத்திற்கான முன்பதிவுகள் இன்னும் 10,000ஐ கடக்கவில்லை. இதன் காரணமாக இந்த வாகனத்தின் மற்ற 2 வேரியண்ட்கள் இன்னமும் அறிமுக விலையில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதாவது, தார் ரியர்-வீல்-டிரைவ் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான ஏ.எக்ஸ் (ஆப்ஷ்னல்) டீசல் மேனுவல்-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாகவும், உயர் நிலை வேரியண்ட்டான எல்.எக்ஸ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக்-இன் விலை ரூ.13.49 லட்சமாகவும் மாற்றமின்றி உள்ளன. மஹிந்திரா தாரின் இந்த ரியர்-வீல்-டிரைவ் மாடலில் மொத்தம் 2 விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்று 1.5 லிட்டர் டீசல் என்ஜின்.
அதிகப்பட்சமாக 117 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதாவது, டீசல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுவதில்லை. அதேபோல் மற்றொரு என்ஜின் தேர்வான 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. மேனுவல் தேர்வு இல்லை.


Click it and Unblock the Notifications








