இது வேன் இல்ல சொகுசு கப்பல்... ஃபோர்ஸ் அர்பேனியா வேனை வாங்கி குவித்த உதய்பூர் இளவரசர்!
இந்தியாவின் பிற முன்னணி ஆளுமைகளைப் போலவே உதய்பூரின் இளவரசரும் மிகப் பெரிய வாகன காதலர் ஆவார். இதற்கு அவருடைய கோட்டைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அரிய வாகனங்களே சான்று. அவரிடத்தில் பல்வேறு சொகுசு மற்றும் ஆடம்பரமான வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்த நிலையில் ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா எனும் வேன் ரக வாகனத்தை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவருடைய கைகளில் ஃபோர்ஸ் அர்பேனியா வேன்கள் ஒப்படைப்பதைப் போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்த இரண்டு யூனிட் ஃபோர்ஸ் அர்பேனியா வேன்களையே உதய்பூர் இளவரசர் லக்ஸயராஜ் சிங் வாங்கி இருக்கின்றார்.

ஏற்கனவே பல்வேறு சொகுசு வாகனங்கள் இருக்கின்ற நிலையில் இந்த வாகனத்தை ஏன் இளவரசர் வாங்கினார் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. அர்பேனியா ஓர் ஃபோர்ஸ் நிறுவனத்தின் மிக அதிக ஆடம்பர வசதிகள் நிறைந்த சொகுசு வேன் ஆகும். பேலஸ்க்கு வரும் விருந்தாளிகளுக்கான வாகனமாக இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே வாங்கப்பட்டு இருக்கின்றன.
மிக சமீபத்திலேயே ஃபோர்ஸ் நிறுவனம் அர்பேனியா பிராண்டை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிக சொகுசு மற்றும் பிரீமியம் தரத்தில் உருவாக்கப்பட்ட வாகனம் இது ஆகும். ஒட்டுமொத்தமாக இந்த வாகனத்தில் 17 பேர் வரை பயணிக்க முடியும். மேலும், ஒவ்வொருக்கும் பிரத்யேக தனி தனி ஏசி வெண்டுகள் மற்றும் ரீடிங் லைட்டுகள் என பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த வேனில் வழங்கப்பட்டு உள்ளது.

இத்தகைய லக்சரி அம்சங்களே உதய்பூர் இளவரசரை தனது விருந்தாளிகளுக்காக அர்பேனியா வேனா வாங்க தூண்டியிருக்கின்றது. இதுமட்டும் இல்லைங்க இன்னும் பல்வேறு காரணங்கள் இந்த வாகனத்தை வாங்குவதற்கு உள்ளது. இதனை மிகவும் அழகான மற்றும் கவர்ச்சியான வாகனமாகவும் ஃபோர்ஸ் உருவாக்கி இருக்கின்றது. இதன் வெளிப்புற அழகிய தோற்றத்திற்காக எல்இடி டிஆர்எல்கள், எல்இடி இன்டிகேட்டர்கள், எல்இடி டெயில் லைட்டுகள், புரஜெக்டர் ஹெட்லேம்புகள், சீல்டு கிளாஸ் பேனல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இத்துடன், குயிக் கூலிங் சிஸ்டம், ரெக்லைனிங் சீட்டுகள், சார்ஜிங் போர்ட்டுகள் என பிரீமியம் அம்சங்களும் தாராளமாக வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. உதய்பூர் அரண்மனை சில நேரங்களில் முக்கிய நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக, பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் மற்றும் வணிகர்களின் முக்கிய மீட்டிங் போன்றவை பேலஸில் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.

அவ்வாறு நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் விருந்தினர்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருவது மற்றும் திரும்பி அழைத்து செல்வது போன்ற வேலைகளுக்காக இந்த வேன் பயன்படுத்தப்பட இருக்கின்றது. அர்பேனியாவில் கூடுதல் சிறப்பு தொழில்நுட்ப வசதியாக டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டியரிங் வீல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கும்.
இந்த திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது. இது தவிர டூயல் ஏர் பேக்குகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா போன்ற உயர் ரக தொழில்நுட்ப கருவிகளிலும் வழங்கப்பட்டு இருக்கும். இந்த அம்சங்களே அர்பேனியாவை வேன் என்பதற்கு பதிலாக சொகுசு கப்பல் என அழைக்கச் செய்கின்றது.

ஃபோர்ஸ் நிறுவனம் முதன் முதலில் இந்த வேனை கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. டி1என் எனும் குறிப் பெயரில் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே இரண்டு ஆண்டுகள் கால தாமதத்தை அடுத்து 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அர்பேனியா விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. உலகையே அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியதே இதன் கால தாமதான வருகைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
எஞ்ஜினை பொருத்தவரை மெர்சிடிஸ் நிறுவனத்தின் டிரைவ்டு 2.6 லிட்டர் டர்போ டீசல் மோட்டாரே பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஃபோர்ஸ் நிறுவனம் இந்த சொகுசு வேனை மொத்தம் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. ஷார்ட், மீடியம், மற்றும் லாங் ஆகியவையே அவை ஆகும். 10, 13 மற்றும் 17 ஆகிய சீட்டர்கள் முறையிலேயே இந்த தேர்வுகள் அமையும்.


Click it and Unblock the Notifications









