ரூ1.4 கோடி விலையுள்ள போர்ஷே காரை அனிருத்க்கு பரிசு வழங்கிய கலாநிதி மாறான்!ஜெயிலர் படம் இவ்வளவு வசூலாகிடுச்சா

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு இசையமைப்பதற்காக இசையமைப்பாளர் அனிரூத்திற்கு திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், ரூபாய் 1.4 கோடி மதிப்பிலான போர்ஷே காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த அளவிற்கு விலை கொண்ட இந்த காரில் அப்படி என்னதான் இருக்கிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ரஜினி படம் அதிகமான வசூலை அள்ளி உள்ளதாக தற்போது ரிப்போர்ட்கள் தெரிய தெரிவிக்கப்பட்டுள்ளன.

Anirudh Porsche

இந்நிலையில் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இந்த திரைப்படம் வெற்றி பெற காரணமான முக்கியமான மூன்று நபர்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். அதன்படி ரஜினிகாந்துக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரையும், இயக்குனர் நெல்சனுக்கு போர்ஷே மசான் கரையும் பரிசாக வழங்கியிருந்தார். இது குறித்த செய்திகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் இயக்குனர் நெல்சனை நேரில் சந்தித்து அவருக்கும் ஒரு போர்ஷே காரை பரிசாக வழங்கியுள்ளார். இயக்குனர் நெல்சனுக்கு வழங்கப்பட்ட அதே போர்ஷே மக்கான் கார்தான் இவருக்கும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் மார்க்கெட் விலை ரூபாய் 1.4 கோடி என கூறப்படுகிறது.

Anirudh Porsche

இந்த கார் குறித்த புகைப்படம் வெளியான நிலையில் இந்த காரின் முகப்பு பக்கத்தை பார்க்கும்போது தான் இதன் மாடல் தெளிவாக தெரிகிறது. இந்த காரின் அடிப்படை விலை ரூபாய் 88 லட்சம் முதல் விற்பனையாகி வருகிறது. வேரியன்ட் என்று மற்றும் கஸ்டமைசேஷனை பொறுத்து இந்த காரின் விலை மாறுபடும். இவர்கள் வாங்கிய கார் ரூபாய் 1.4 கோடி என பேசப்படுகிறது.

இந்த கார் போக கலாநிதி மாறன் நடிகர் ரஜினி இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோருக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக போனஸையும் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போனஸ் செக்கையும் அவர் நேரடியாக காரை வழங்கும்போதே அவர்கள் கையில் வழங்கியதாக கூறப்படுகிறது.

Anirudh Porsche

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 265 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் இன்ஜின் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது இது அதிகபட்சமாக 232 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. மசான் காரிலேயே அதிக பவர் கொண்ட காராக மசான் எஸ் என்ற வேரியண்ட் கார் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் உள்ள இன்ஜின் 380 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது அதிகபட்சமாக 259 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் எனவும் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.8 நொடிகளிலேயே எட்டிப் பிடித்து விடும்.

இந்த மசான் காரிலேயே ஜிடிஎஸ் என்ற வேரியண்ட் தான் டாப் வேரியண்டாக இருக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 272 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் வகையிலும் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடியில் பிக்கப் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் மொத்தம் 14 வகையான கலர் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்திய தொழில் அதிபர்கள் மத்தியில் இந்த கார் பெரும் பிரபலமான காராகவும் அதிக நபர்கள் விரும்பும் காராகவும் இருக்கிறது. இந்த காரில் கருப்பு நிற காரை இயக்குனர் நெல்சன் இருக்கும் நீல நிற காரை இசையமைப்பாளர் அனிரூத்தும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

டிரைவ்பார்க் கருத்து: இசையமைப்பாளர் அனிருத்திற்கு மற்றும் இயக்குனர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு கலாநிதி மாறன் காரை பரிசாக வழங்கியது தற்போது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னால் பெரும் அளவிற்கு பணம் இருப்பதை இதன் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது தமிழ் திரை உலகில் படம் வெற்றி பெற்றால் அதில் உள்ள மக்களுக்கு காரை பரிசளிப்பது என்பது ஒரு டிரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, September 5, 2023, 15:30 [IST]
English summary
Producer rewards jailer composer anirudh with a porsche as the rajinikanth film hits big success
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X