அதிகம் மைலேஜ் தரும் டாடா காருக்கு புக்கிங் தொடங்கியாச்சு... இது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்!

டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பிரபலமான கார் மாடல்களில் பஞ்ச்-ம் ஒன்றாகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதன் அதிகம் மைலேஜ் தரும் வெர்ஷனுக்கு புக்கிங் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் பஞ்ச்-ம் ஒன்றாகும். இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இந்த கார் தற்போது பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் உடன் சேர்த்து விரைவில் சிஎன்ஜி தேர்வையும் டாடா, பஞ்ச் காரில் வழங்க இருக்கின்றது.

Tata punch icng boot space

இந்த வெர்ஷனுக்கான புக்கிங் பணிகளே தற்போது இந்தியாவில் தொடங்கி இருக்கின்றன. இது அதிகாரப்பூர்வ புக்கிங் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, டீலர்கள் தரப்பில் இருந்து மட்டுமே இந்த புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில டாடா கார் விற்பனையாளர்கள் மட்டுமே இந்த புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா மோட்டார்ஸ் இந்த காரை (பஞ்ச் சிஎன்ஜி வெர்ஷனை) முதன் முதலில் 2023 ஜனவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. பஞ்ச் சிஎன்ஜி உடன் சேர்த்து அன்றைய தினத்தில் இன்னும் சில கார் மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அதில், அல்ட்ராஸ் சிஎன்ஜி-யும் ஒன்றாகும்.

Tata punch icng

தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல் பஞ்ச்-ஐக் காட்டிலும் அதிக மைலேஜ் தரக் கூடியதாக சிஎன்ஜி பஞ்ச் இருக்கும் என கூறப்படுகின்றது. பெட்ரோலில் ஓடும் பஞ்ச் ஒரு லிட்டருக்கு 19 கிமீ தொடங்கி 20 கிமீ வரையில் மட்டுமே மைலேஜ் தரும் திறனைக் கொண்டிருக்கின்றது.

அதேவேளையில், இதன் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 25 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இது அதிக மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஏற்கனவே, பஞ்ச் காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே இதற்கு கிடைத்துக் கொண்டு இருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த கார் ஏற்கனவே அதிக பாதுகாப்பு திறன் கொண்டது என புகழப்பட்டு வருகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனமாகவும் பஞ்ச் மாற உள்ளது. பஞ்ச் சிஎன்ஜி வருகைக்கு பின்னர் இது நடைபெற்றுவிடும். ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் பஞ்ச் சிஎன்ஜி-யில் எதிர்பார்க்கப்படுகின்றன. அத்துடன் சில சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் இதில் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆறு ஏர் பேக்குகள், புரஜெக்டர் ஹெட்லேம்ப், 16 அங்குல அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் பஞ்ச் சிஎன்ஜியில் எதிர்பார்க்கப்படுகின்றது. பஞ்சின் உயர்நிலை தேர்வுகளிலேயே சன்ரூஃப் வசதி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வே பஞ்ச் சிஎன்ஜி-யில் எதிர்பார்க்கப்படுகின்றது. சிஎன்ஜியில் ஓடும் வகையில் அதில் ட்யூன்-அப் செய்யப்பட்டு இருக்கும். இந்த அதிகம் மைலேஜ் தரும் வெர்ஷனுக்கே தற்போது நாட்டில் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. டாடா மற்றும் மாருதி சுஸுகி, இவர்கள் இருவர்தான் இந்தியாவின் சிஎன்ஜி மார்க்கெட்டில் முக்கிய புள்ளிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த பிரிவில் இவர்கள் இருவருக்கு இடையிலேயே மிகப் பெரிய போட்டியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 2, 2023, 14:10 [IST]
English summary
Punch cng unofficial bookings started in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+