இந்த குட்டி பையன் முட்டினதுக்கே விண்ட் ஷீல்டு கிராக் ஆகிடுச்சா! எந்த நிறுவனத்தோடு காருங்க அது? வைரல் வீடியோ!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல்களில் டாடா பஞ்ச்-ம் ஒன்றாகும். குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில்கூட இந்த கார் மிக சிறந்த பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருக்கின்றது. ஐந்திற்கு 5 ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே அது பெற்றிருக்கின்றது.

இத்தகைய பாதுகாப்பான கார் மாடலே தற்போது மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கின்றது. இதற்கு ஓர் வீடியோவே காரணமாக அமைந்துள்ளது. சிறுவன் ஒருவன் தவறுதலாக விண்ட்ஷீல்டில் முட்டியதற்கே அதில் விரிசல் ஏற்பட்டிருக்கின்றன. இதுகுறித்த வீடியோ காட்சிகளே யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி, தற்போது வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

Punch windshield cracked

இதுவே டாடா பஞ்ச் கார் சர்ச்சையில் சிக்கவும் காரணமாக அமைந்திருக்கின்றது. பலர் இந்த காரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடத் தொடங்கி இருக்கின்றனர். மாதம் ஒன்றிற்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகும் அளவிற்கு இந்த கார் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே சர்ச்சையான வீடியோ இணையத்தில் உலா வரத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, ஒரு குட்டி பையன் தலையால் முட்டியதற்கே இப்படி ஒரு நிலைமையா என்கிற கேள்வியையும், அப்படி என்றால் அந்த காரின் பாதுகாப்பு திறன் எப்படி இருக்கும் சந்தேகத்தையும் எழுப்பி இருக்கின்றது.

ஆனால், இந்த விஷயத்தில் நாம் அறிவு சார்ந்து யோசிக்க வேண்டி இருக்கின்றது. விண்ட்ஷீல்டுகள் எளிமையாக நொருங்கக் கூடிய கண்ணாடி மூலகூறுகளால் உருவாக்கப்படக் கூடியவை ஆகும். இவை எளிதில் நொறுங்கக் கூடியவையும்கூட. குறிப்பாக, அவற்றால் சிறிய தாக்கத்தைக்கூட தாக்குப் பிடிக்காது. சிறுவன் என்ன மிக சிறிய கல் வந்து சற்று ஃபோர்ஷாக மோதினாலும்கூட இந்த விண்ட்ஷீல்டுகள் நொருங்கிவிடும்.

டாடா பஞ்ச் காரில் மட்டுமல்ல நாட்டில் உள்ள பெரும்பாலான கார்களில் இத்தகைய தரம் கொண்ட விண்ட்ஷீல்டுகளே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதை வைத்து காரின் தரத்தை எடைபோட்டுவிட முடியாது. ஏனெனில் காரின் தரம் அதன் கட்டமைப்பு குவாலிட்டியை வைத்தே போடப்படுகின்றது.

இந்த விஷயத்தில் டாடா பஞ்ச் ஓர் கிங் ஆகும். ஏற்கனவே கூறியதைப் போல் இது ஓர் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற் கார் மாடலாகும். ஆனால், அதோடைய விலையோ மிக குறைவானது. ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலைக்கே பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த விலைக்கே அதிக பாதுகாப்பு அம்சங்களையும், நவீன கால தொழில்நுட்ப வசதிகளையும் டாடா மிக தாரளமாக பஞ்ச் காரில் வழங்குகின்றது. 17 புள்ளிகளுக்கு 16.49 புள்ளிகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் எப்போதும் பின் தங்கி இருக்காது என்பது கவனிக்கத்தகுந்தது. டாடா மோட்டார்ஸ் இந்த கார் மாடலில் சமீபத்திலேயே ஐசிஎன்ஜி மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்தது.

இது ஓர் சிஎன்ஜி வாகனமாகும். வாய்ஸ் அசிஸ்ட் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் சன்ரூஃப், யுஎஸ்பி டைப்-சி சார்ஜர், ஃப்ரண்ட் சீட்டுகளுக்கான ஆர்ம் ரெஸ்ட், சுறாவின் துடுப்பு போன்ற அமைப்பு கொண்ட ஆன்டென்னா, ஆட்டோமேட்டிக் புரஜெக்டர் ஹெட்லேம்ப், 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மழை வந்தால் தானாக ஸ்வைப் செய்யும் சிஸ்டம், மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறுவன் ஆரம்பத்தில் நின்றுக் கொண்டிருக்கின்றார். பின்னர், அவனுடைய அப்பா நல்ல பையன் இல்லையா, அமைதியா இரு என்கின்றார். இந்த நிலையிலேயே, இருக்கையில் அமர்ந்துக் கொண்டே அந்த சிறுவன் குதிக்க தொடங்கினான். இந்த நிலையிலேயே தெரியாமல் தலையில் விண்ட்ஷீல்டில் மோதி அதில் கிராக் ஏற்பட்டது. இந்த வீடியோவினாலே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 14, 2023, 14:14 [IST]
English summary
Punch windshield cracked due to kid hit
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+