வந்தே பாரத்தை இழுத்து செல்லும் சாதா ரயில் இன்ஜின்; பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம்!

வந்தே பாரத் ரயிலை சாதாரண ரயில் இன்ஜின் இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வந்தே பாரத் ரயில் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் தான் வந்தே பாரத். சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் சர்வதேச அளவில் புல்லட் ரயிலுக்கு இணையாக பேசப்பட்டது. இந்த ரயிலின் வெளிப்புறத் தோற்றமும் உட்புறத்தில் உள்ள வசதிகளும் மற்ற எந்த ரயிலிலும் இல்லாத அளவுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.

vande bharat video

இந்நிலையில் இந்திய ரயில்வே இந்த ரயிலை ஒவ்வொரு ரூட்டிலும் வரிசையாக செயல்படுத்திக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் மட்டும் சென்னை- மைசூர் மற்றும் சென்னை - கோவை என இரு வழித்தடங்களில் இந்த ரயில் பயன்பாட்டில் இருக்கிறது. இதுபோக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரிசையாக இந்த ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் ரயிலின் ஸ்பெஷாலிட்டியை அதன் வேகம் தான் அந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அளவுக்கு திறன் கொண்டது. இப்படியாக பல அம்சங்களை கொண்ட இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இது செயல்பாட்டுக்கு வரும் போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த ரயிலின் குறுக்கே மாடுகள் வந்து மோதியதில் ரயிலின் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.இந்த விபத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் ஓடிய வந்தே பாரத் ரயிலின் உள்ளே லீக்கேஜ் இருந்தது. இந்த வீடியோக்கள் எல்லாம் வைரல் ஆகின.

இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 25 நொடி மட்டும் ஓடும் இந்த வீடியோவில் வந்தே பாரத் ரயிலை சாதாரண ரயில் இன்ஜின் இழுத்து செல்வது போல காட்சி இருக்கிறது. இதைக் கண்டதும் நெட்டிசன்கள் பலர் வந்தே பாரத் ரயிலை ட்ரோல் செய்ய துவங்கி விட்டனர்.

மாடு மீது மோதுவதில் இருந்து ரயிலை பாதுகாக்க இப்படியான ஏற்பாடை ரயில்வே துறை செய்துள்ளதாக சிலரும், சிலர் வந்தே பாரத் ரயிலின் மற்றும் ஒரு சாதனை எனவும் கிண்டல் பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இப்படி ஒரு காட்சியை பார்த்ததும் பலருக்கு சிரிப்புதான் வந்தது.

அதிக வேகமாக செல்லும் ரயிலை குறைவான வேகமாக செல்லும் ஒரு ரயில் இன்ஜின் இழுத்து செல்வதை பார்த்தால் யாருக்கு தான் சிரிப்பு வராது. அதனால் இதை பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இது ஒரு பொய்யான தகவல் என ரயில்வே நிர்வாகம் இதை மறுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட வீடியோவில் வந்தே பாரத் ரயிலை மற்றொரு இன்ஜின் இழுத்துச் செல்வது போல இருக்கிறது. இந்த வீடியோ வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என தெரிவித்துள்ளது. பழைய வீடியோவை தற்போது மீண்டும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இது சோதனை ஓட்டத்திற்காக ரயில்வே நிர்வாகம் செய்த ஏற்பாடு தான் எனவும், இந்த ரயில் ஓடும் போது ரயிலுக்குள் பயணிகள் யாரும் இல்லை எனவும், ரயில் தண்டவாளத்தில் ஓடும் போது ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை சோதனை செய்யவே இதை ரயில்வே நிர்வாகம் செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயிலில் அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்தாலும் இந்தியாவின் மிக உன்னதமான தயாரிப்பாக பார்க்கப்படுகிறது. சர்வதேச தரத்திற்கு ரயில் தயாரிப்பை செய்யும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக இது போன்ற போலியான தகவல்களை பரப்புவதை நெட்டிசன்கள் தவிர்க்க வேண்டும்

More from DriveSpark

Article Published On: Friday, June 30, 2023, 20:30 [IST]
English summary
Railway clarifies viral video of general train engine pulling vande bharat express
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+