இந்த காரை ஏலத்துல வாங்க பயங்கர போட்டி! விலைய கேட்டா தலையே சுத்தும்!
ஃபெராரி நிறுவனத்தின் கார் ஒன்று ரூபாய் 328 கோடிக்கு ஏலம் போக உள்ளது. உலகிலேயேமிகப்பெரிய அளவிலாக இந்த கார் ஏலம் நடைபெற உள்ளது. இவ்வளவு பணம் கொடுத்து இந்த காரை வாங்கும் அளவிற்கு இந்த கார் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது? இந்த காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? விரிவாக காணலாம் வாருங்கள்.
ஃபெராரி நிறுவனம் கார் ரேஸிங் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஃபெராரியின் ரேஸ் கார்களிலேயே மிகவும் பிரபலமான கார் என்றால் 412பி கார் தான். இந்த கார் 1960 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச அளவிலான கார் ரேஸ் போட்டியில் ஃபெராரி நிறுவனத்திற்கு பெயர் வாங்கி கொடுத்த கார் இது.

ஃபெராரி போர் 412பி என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் ரேஸிங் பயன்பாட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை ஃபெராரிக்கு இந்த கார் உறுதுணையாக இருந்தது. இந்த கார் தற்போது பொது ஏலத்திற்கு வரவுள்ளது.
அமெரிக்காவில் உள்ள குயில் ஆக்ஷன் என்ற ஏல நிறுவனம் இந்த காரை ஏலத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் எலத்திற்கு வரும்போது 40 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்திற்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணத்தின் அதன் இந்திய மதிப்பு ரூபாய் 328 கோடியாகும்.

இந்த ஃபெராரி 412பி காரை வடிவமைத்தது பின் இன்ஃபாரினா என்ற நிறுவனம் தான். இத்தாலி நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் தனித்துவமான டிசைன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தை தற்போது இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் தான் வாங்கியுள்ளது. மஹிந்திராவின் தலைமையில் தான் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த ஃபெராரி 412 பி காரைப் பொறுத்தவரை வி10 இன்ஜினை கொண்ட காராக இருக்கிறது. இது மிக அதிகமான ஹார்ஸ் பவரையும் டிராக்கில் சிறப்பான பெர்பார்மன்ஸையு் வெளிப்படுத்தக்கூடிய காராக இருக்கும். 1967 ஆம் ஆண்டு நடந்த எப்ஐஏ வேல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த 412பி பெர்லைனிட்டா தான் வெற்றி பெற்றது.

அப்பொழுது முதல் இந்த கார் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. பல கார் சேகரிப்பாளர்கள் இந்த காரை வாங்கினர் பல கைகளுக்கு இந்த கார் மாறியது. அதன் பின்பு இந்த காரை ரீஸ்டோர் செய்யும் பணி நடந்தது. சுமார் 9 ஆண்டுகள் வரை இந்த பணிகள் நடந்தது. இதில் 412 பி காரின் பாடி ஒர்க் உள்ளிட்ட அனைத்தும் புதுப்பிக்கப்பட்டது.
இந்த ஃபெராரி 412பி கார் ஃபெராரி 330 ரேஸ் காரை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஃபோர்டுVs ஃபெராரி திரைப்படத்தில் இடம் பிடித்திருந்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் ரசிகர்களை இந்த கார் கவர்ந்தது.
இந்த கார் தற்போது ஏலத்துக்கு வரவுள்ள நிலையில் யார் இந்த காரை வாங்கப் போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது. பெரும்பாலும் இந்த காரை ஏதாவது மற்றொரு ஏல நிறுவனம்தான் வாங்கும் எனவும் வாங்கி சில ஆண்டுகள் வைத்திருந்து பின்பு மீண்டும் அது ஏலத்திற்கு விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகளில் இப்படியான கார்களுக்கு ஒரு மவுசு இருப்பது ரசிகர்களை ஈர்த்துள்ளது.. குறிப்பாக ரேஸ் கார்கள் மற்றும் பழைய ஐகானிக் கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல விலை இருப்பது ஆட்டோமொபைல் ரசிகர்களை தொடர்ந்து பழைய கார்கள் பேச வைத்துள்ளது. இந்த காரை நீங்கள் வாங்கும் வாய்ப்பு கிடைத்தால் வாங்கியதும் என்ன செய்வீர்கள்?


Click it and Unblock the Notifications









