ஏர்போர்ட்டில் சாதாரண கவர் போர்த்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை கார்கள்! குப்ப மாதிரி கெடக்குது!

ஒரு சூப்பர் காரை வாங்கவே நாக்கை தள்ளிவிடும். இங்கு ஓர் குறிப்பிட்ட விமான நிலையத்தில் ஒரு டசனுக்கும் அதிகமான ஹைப்பர் வகை கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த கார்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதற்கான காரணம் என்ன? அவை எங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஒரே ஒரு யூனிட் ஹைப்பர் காரை மட்டும் வாங்க வேண்டும் என்றாலே பல கோடி ரூபாய்களை நாம் வாரி இறைக்க வேண்டி இருக்கும். இந்த மாதிரியான சூழலில் டசனுக்கும் அதிகமான ஹைப்பர் கார்கள் விமான நிலையத்தில் அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Hypercars

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகர விமான நிலையத்திலேயே ஹைப்பர் கார்கள் வரிசையாக அடுத்தடுத்து என கவர் போட்டு போர்த்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பவை அனைத்தும் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய கார்கள் ஆகும். இதில் மூன்று கோனிக்செக் ஹைப்பர் கார்களும் அடங்கும்.

இதுதவிர, புகாட்டி சிரோன் மற்றும் ஃபெர்ராரி லாஃபெர்ராரி உள்ளிட்ட ஹைப்பர் வகை கார்களும் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த கார்களின் மதிப்பு 50 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் இருக்கும் என கூறப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக 13 ஹைப்பர்கள் கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

LA airport

ஹைப்பர் கார்கள் மட்டுமில்லைங்க இன்னும் பல அரிய மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த கார்களும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் கேட்பாரற்று அனாதையா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உள்ளூர் ஊடகம் ஒன்று இந்த கார்கள் அனைத்தம் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்ய நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அதேவேளையில், இன்னும் சில ஊடகங்கள் இந்த அரிய வகை கார்கள் அனைத்தும் பந்தயம் அல்லது வாகனம் சார்ந்த கண்காட்சி ஏதேனும் ஓர் நிகழ்ச்சிக்காக லாஸ் ஏஞ்ஜல்ஸ்க்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றன. ஆனால், இந்த கார்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Rare cars found in airport

விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து கார்களும் புத்தம் புதியவை ஆகும். இதை வைத்தே இது வெளியூர்கள் அல்லது வாகன நிகழ்ச்சிக்காக லாஸ் ஏஞ்ஜல்ஸ்க்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் என உறுதியாக நம்பப்படுகின்றது. விமான நிலையத்தில் மெக்லாரன் ஸ்பீடு டெயில், பிளாக் போர்ஷே 918 ஸ்பைடர் ஆகிய கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பகானி ஹூவாரே பிசி, லம்போர்கனி சென்டனரியோ, ஃபோர்டு ஜிடி, அஸ்டன் மார்டின் ஒன்77 மற்றும் மெக்லாரன் சேப்ரே ஆகிய கார் மாடல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. உலக பணக்காரர்களின் புகளிடமாக லாஸ் ஏஞ்ஜல்ஸ் இருக்கின்றது. ஆகையால், ஹைப்பர் கார்களின் ஹாட் ஸ்பாட்டாக அது காட்சியளிக்கின்றது.

இந்த நிலையிலேயே ஒரே இடத்தில் ஒரு டசனுக்கும் அதிகமான ஹைப்பர் கார்கள் மற்றும் சூப்பர் கார்கள் லாஸ் ஏஞ்ஜல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கின்றது. ஆகையால், இந்த கார்கள் உலக பணக் காரர்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கலாம். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சங்கமிக்கலாம் என்பதையும் இப்போது வெளியாகி இருக்கும் வீடியோ நமக்கு தெரியப்படுத்துகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த ஹைப்பர்கள் டெலிவரிக்காக அங்கு இருக்கின்றதா அல்லது வாகன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும், துபாய் போன்ற அரபு நாடுகள் சிலவற்றில் இதுபோன்று மிக மிக விலை உயர்ந்த கார்கள் கேட்பாரற்று அனாதையாக விடப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 20, 2023, 13:25 [IST]
English summary
Rare cars found under normal cover in la airport
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X