ரொம்ப பேருக்கு இந்த படம் இனிமையான நினைவை தரலாம்! 25 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படத்தை பகிர்ந்த ரத்தன்!

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கடந்த 25 வருடங்களுக்கு முன்னாள் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, அனைவரையும் பழைய நினைவிற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா இன்டிகா, இந்த கார் மாடலை தெரியாதவர்களே இருக்க முடியாது. ஒரு காலத்தில் இந்திய சாலைகளை முழுமையாக ஆக்கிரமித்து, ஆளுகைச் செய்துக் கொண்டிருந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். டாடா மோட்டார்ஸ் உருவாக்கிய முதல் பயணிகள் ஹேட்ச்பேக் கார் மாடலும் இதுவே ஆகும். இதுமட்டுமில்லைங்க, டாடா இன்டிகாவே உள்நாட்டிலேயே வைத்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் டீசல் எஞ்ஜின் கார் மாடல் ஆகும்.

இன்டிகா

25 ஆண்டுகள் நிறைந்துவிட்டன

இந்த காரை டாடா நாட்டிற்காக அர்பணித்து 25 ஆண்டுகளைக் கடந்து விட்டன. இதனை நினைவுகூறும் விதமாக டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, அந்த காரின் அறிமுகத்தின்போது, அதனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தற்போது பகிர்ந்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கின் வாயிலாகவே இந்த படத்தை அவர் பகிர்ந்திருக்கின்றார். இந்த படம் பலரை உணர்ச்சி வசப்பட வைத்து விட்டது என்றே கூறலாம்.

பலரின் கனவு வாகனம்

ஏனெனில், பலரின் முதல் கார் மாடலாக இன்டிகாவே இருக்கின்றது. இந்த காரையே அந்த காலக்கட்டத்தில் தங்களின் கனவு வாகனமாகவும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய ஓர் சூப்பரான கார் மாடலின் புகைப்படத்தையே ரத்தன் டாடா தற்போது பகிர்ந்திருக்கின்றார். இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனம் இந்திய வாகன உலகிற்கு பல விஷயங்களில் முன்னாடியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது என்றும் கூறலாம்.

இன்டிகா

குறிப்பாக, பாதுகாப்பான கார்களைக் களமிறக்குவதில் நிறுவனம் தற்போது புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடல்கள்கூட நான்கு முதல் ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றவையாக இருக்கின்றன. உதாரணமாக, நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலாக இருக்கும் டாடா பஞ்ச் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

முதல் டீசல் எஞ்ஜின் கார்

இதுபோன்ற வாகங்களின் வாயிலாகவே டாடா மோட்டார்ஸ் தன்னை இந்தியாவில் முன்னோடியாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், 1994 ஆம் ஆண்டில் நிறுவனம் இந்தியா வாகன உலகையே அதிர வைக்கும்வகையில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து நாட்டின் முதல் டீசல் எஞ்ஜின் ஹேட்ச்பேக் காராக இன்டிகாவே அறிமுகப்படுத்தியது. "இந்த கார் மாடலைஅறிமுகப்படுத்தியது, இந்தியாவின் உள்நாட்டு பயணிகள் வாகன துறையின் பிறப்பு என ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.

இன்டிகா

இத்துடன், இந்த படம் இனிய நினைவுகளை தனக்கு மீண்டும் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்திருக்கின்றார். கடந்த காலங்களில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மற்றும் பவர் ஜன்னல்கள் போன்ற அம்சங்கள் எல்லாம் விலையுயர்ந்த சொகுசு கார்களில் மட்டுமே இடம் பெறக் கூடிய அம்சமாக இருந்தன. ஆனால், இதனை டாடா மோட்டார்ஸ் அதன் இன்டிகா எனும் மலிவு விலை காரிலேயே வழங்கியது.

தனித்து காட்சியளித்த வாகனம்

இதுவே இக்கார் மாடல் இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்த மிக முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. குறிப்பாக, இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்ட வெளிநாட்டு கார் மாடல்களில் இருந்து முற்றிலுமாக இண்டிகா தனித்துக் காட்சியளித்தது. இதுமட்டுமில்லைங்க டாடா மோட்டார்ஸ் இந்த கார் மாடலை இந்தியாவிற்கென பிரத்யேகமாக வடிவமைத்திருந்ததும் அனைவரையும் அக்காரின் பக்கம் கவர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில், அந்த கால கட்டத்தில் விற்பனையில் இருந்த பெரும்பாலான கார் மாடல்கள் உலக அளவிலான அனைத்து சந்தைகளுக்கும் பொருந்தக் கூடிய காராக இருந்தது.

ரத்தன் டாடாவின் ஐடியா

இந்த நிலையில், நாட்டிற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட காராக இன்டிகா வந்தது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது. 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே டாடா இன்டிகா முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த வடிவமைப்பு ஸ்டுடியோவான ஐ.டி.ஏ (I.DE.A) இன்ஸ்டியூட்டே இந்த காரின் உடல் பகுதியை வடிவமைத்தது. அதேவளையில், இந்த காருக்கான எஞ்ஜின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அதேநேரத்தில் காரின் வடிவமைப்புத் தொடங்கி, எஞ்ஜின் வரை என அனைத்தும் ரத்தன் டாடாவின் யோசனையிலேயே உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இன்டிகாவின் போட்டியாளர்கள்

இந்தியர்கள் என்ன மாதிரியான மன நிலையைக் கொண்டிருக்கின்றனர்?, அவர்களுக்கு எத்தகைய வாகனம் தேவைப்படுகின்றது?, என்பதை உணர்ந்தே இந்த இன்டிகா தயாரிப்பில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா இன்டிகா காரை களமிறக்கிய நேரத்தில், ஃபியட் யூனோ, மாருதியின் 800 மற்றும் ஜென் ஆகிய கார் மாடல்களே அதற்கு போட்டியாக இருந்தது. ஆனால், இந்த கார் மாடல்களைக் காட்டிலும் இன்டிகா பல வகைகளில் முன்னோடியாக இருந்தது.

Most Read Articles
English summary
Ratan tata shares pic of indica taken 25 years ago
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X