இந்த குதிரைக்கு பின்னால் உள்ள உண்மையான அர்த்தம் இது தானா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

போர்ஷே மற்றும் ஃபெராரி கார் நிறுவனங்களின் லோகோவில் குதிரை படம் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஏன் என உங்களுக்கு தெரியுமா? இந்த இரு நிறுவனங்களின் லோகோவின் உள்ள குதிரை படம் ஒரே காரணத்திற்காக பொறிக்கப்பட்டதா? இதன் பின்னணி என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.

போர்ஷே மற்றும் ஃபெராரி ஆகிய இரு நிறுவனங்களில் லோகோக்களிலும் குதிரைப்படம் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த இரு குதிரைகளுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருக்கிறது. பார்ப்பதற்கு இரு குதிரைகளும் முன்பக்கம் உள்ள இரண்டு கால்களையும் தூக்கி‌ கனைப்பது போல இருக்கும். ஆனால் இந்த இரண்டுக்கும் வேறு வேறு பின்னணி இருக்கிறது.

horse in porsche ferrari logo

ஃபெராரி லோகோ: ஃபெராரி நிறுவனத்தின் லோகோவில் உள்ள குதிரை படம் முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு விமானத்தில் பொறிக்கப்பட்ட குதிரை படமாகும். ஃபிரான்சிஸ்கோ பராகா என்ற வீரர் முதல் உலகப்போரில் விமானம் மூலம் சண்டைக்கு சென்று 34 பேரை கொன்றார். இவர் கடந்த 1918 ஆம் ஆண்டு போரில் உயிரிழந்தார். இவர் ஒரு தேசிய ஹீரோவாக பார்க்கப்பட்டார்.

இவர் தனது விமானத்தில் இப்படியாக குதிரை கணக்கும் படி ஒரு படத்தை அச்சிட்டு இருந்தார். இந்தக் குதிரையின் படத்தை தான் தன் காரில் பொறிக்க வேண்டும் என என்ஸோ ஃபெராரி நினைத்து அந்தக் குதிரை படத்தை தனது நிறுவனத்தின் லோகோவாக வடிவமைத்தார். அதற்கு பின்னணியில் மஞ்சள் நிறம் கொடுக்கப்பட்டது. இந்த நிறம் மடோனா என்ற அவர் பிறந்த ஊருக்கான நிறமாக கருதப்படுகிறது.

மஞ்சள் நிறத்தில் கருப்பு நிற குதிரை வடிவம் தான் வழங்கப்பட்டிருக்கும். ஃபெராரி கார் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் இருக்கும் நிலையில் இந்த குதிரை மட்டும் கருப்பு நிறத்தில் இருப்பதற்கான முக்கியமான காரணம் இது இறந்த பைலட்டின் நினைவாக இருப்பது என்பதால் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இன்று இந்த கணக்கும் குதிரை லோகோ, ஃபெராரி கார்கள் மட்டுமில்லாமல் ஃபெராரி கொடி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இடம்பெற்றுள்ளது. பலர் இந்த கணக்கும் குதிரையை ஒரு பவர்ஃபுல் அடையாளமாக பார்க்கின்றனர். ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார் வேகத்தை மையமாகக் கொண்டது என்பதால் இந்த குதிரை அச்சு இருப்பதாக கருதுகின்றனர்.

போர்ஷே லோகோ: போர்ஷே ஒரு ஜெர்மன் நிறுவனம் ஆகும். ஜெர்மனியில் உள்ள வெய்மர் என்ற மாகாணத்தில் தான் இந்த போர்ஷே என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. தற்போது வெடன்வட்டம்பர்க் என்ற பெயரில் தான் இந்த நகரம் அழைக்கப்பட்டு வருகிறது. இது ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு எல்லைகளைப் பகிரும் நகரமாக இருக்கிறது.

இந்த வெய்மர் நகரத்தில் உள்ள குதிரை வளர்ப்பு பண்ணையில் இந்த கணைக்கும் குதிரையின் படம் பயன்படுத்தப்பட்டது. இந்த வெய்மர் ஊருக்கான லோகோவிலும் இதே குதிரைப்படம் தான் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டில் இருந்து இன்ஸ்பயராகி எடுக்கப்பட்டது தான் போர்ஷனை நிறுவனத்தின் குதிரை படம்.

போர்ஷே நிறுவனத்தின் தலைமையிடமான ஸ்டர்ட்கார்ட் என்ற பகுதியின் நினைவாக தான் இந்த குதிரைப்படம் அதன் லோகோவில் பயன்படுத்தப்பட்டது. இது தான் போர்ஷே நிறுவனத்தில் குதிரை படம் இருப்பதற்கான முக்கியமான காரணம். போர்ஷே மற்றும் ஃபெராரி லோகோவில் உள்ள குதிரைக்கான வேறு வேறு காரணங்கள் இருக்கிறது.

இந்த குதிரை படம் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்து பலர் இந்த இரு நிறுவனங்களும் ஒர குழுமத்தால் நிர்வாகம் செய்யப்படுவதாக கருதுவார்கள்.ஆனால் போர்ஷே நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் குழுமத்துடன் இணைந்தது. ஃபெராரி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ஃபியட் நிறுவனத்திடம் இருக்கிறது. இருந்தாலும் என்ஸோ ஃபெராரியின் மகன் பைரோ ஃபெராரிக்கும் இதில் பெரும் பங்கு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு நிறுவனங்களும் தனித்தனியாக வேறு வேறு காரணங்களுக்காக குதிரை படத்தை தங்கள் கார்களில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குதிரைக்களுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் இது தான். பலர் சொல்லும் மற்ற கதைகள் எல்லாம் வெறும் கதைகள் தான் அதில் உண்மை இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 14, 2023, 10:23 [IST]
English summary
Reason behind horse in porsche ferrari logo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+