என்ன வசிய மருந்த கலந்து கொடுத்திருக்கோ! தகர டப்பானு சொல்றாங்க இருந்தாலும் மாருதியோட காரையே அதிகம் வாங்குறாங்க!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பற்றது மற்றும் தரமற்றது என பலரால் கூறப்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இருப்பினும் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளே இந்தியாவில் மிக அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் இந்தியர்களின் ஃபேவரிட் நிறுவனமாக மாருதி சுஸுகி இருக்கின்றது. இத்தகைய அமோக வரவேற்பை மாருதி கார்கள் பெற்றுக் கொண்டிருப்பதற்கான 3 முக்கியமான காரணங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) இருக்கின்றது. இந்த நிறுவனம் எந்த கார் மாடலை விற்பனைக்குக் களமிறக்கினாலும், அது வெற்றிகரமான கார் மாடலாக மாறிவிடுகின்றது. இதற்கு சான்றாக ஆல்டோ, வேகன் ஆர் உள்ளிட்ட கார் மாடல்கள் இருக்கின்றன.

Maruti car sale

இவை விற்பனைக்கு விற்பனைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகின்ற போதிலும் இப்போதும் மிக சூப்பரான டிமாண்டை பெற்று வகின்றது. அதேவேளையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எதிராக பேசுபவர்களும் நம் நாட்டில் இருக்கதான் செய்கின்றனர். மாருதி சுஸுகி எதிர்ப்பாளர்களை நாம் இணையத்தில் அதிகளவில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி எந்த புதுமுக கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்தாலும், "அதுவாச்சும் நல்ல பாதுகாப்பை வழங்குமா" என்கிற கேள்வியை பலர் முன் வைப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இதற்கேற்ப மாருதி சுஸுகியின் தயாரிப்புகள் பல பாதுகாப்பில் மிக மிக தர குறைவான ரேட்டிங்கைப் பெற்றவையாக இருக்கின்றன.

Maruti car showroom

இதுபோன்று மாருதி சுஸுகியை சுற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் சுற்றி வந்த வண்ணம் இருக்கின்றது. இருந்த போதிலும் அதுவே இந்தியாவின் நம்பர் 1 கார் உற்பத்தி நிறுவனமாக இருக்கின்றது. இது எப்படி சாத்தியம் என்பதும் பலரின் மற்றுமொரு முதன்மையான கேள்வியாக இருக்கின்றது. இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பரந்த விற்பனையாளர்கள் நெட்வொர்க்: நாட்டில் மிகப் பெரிய விற்பனையாளர் வலையமைப்பைக் கொண்ட நிறுவனமாக மாருதி சுஸுகி காட்சியளிக்கின்றது. பெரும்பாலான நிறுவனங்கள் நாட்டின் முதன்மை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை மையமாகக் கொண்டே தங்களின் ஷோரூம்களை அமைத்து வருகின்றன. ஆனால், மாருதி சுஸுகி நாட்டின் கடைநிலை கிராமங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது.

Maruti car service centre

குறிப்பிட்ட சில மாநிலங்களின் கடைநிலை கிராமங்களில்கூட மாருதி சுஸுகியின் ஷோரூமை நம்மால் காண முடியும். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகிய புள்ளி விபரங்களின்படி, நிறுவனத்திற்கு 3500 டீலர்கள் செயல்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. இந்த எண்ணிக்கையை மேலும் விரிவாக்கும் செய்யும் பணியில் மாருதி சுஸுகி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனத்தின் இத்தகைய ஓர் நடவடிக்கையின் காரணத்தினாலேயே இப்போதும் மக்கள் ஈ போல் மாருதி சுஸுகியின் பக்கம் குவிந்துக் கொண்டிருக்கின்றனர். அதிகம் மற்றும் அருகாமையிலேயே மாருதி சுஸுகி கார் விற்பனையாளர்கள் இருப்பதால் மக்களின் நம்பிக்கையையில் பெரியளவில் பெறுகின்றது. இதுவும் மாருதி சுஸுகி கார்கள் மிக அதிகளவில் விற்பனையாக காரணமாக இருக்கின்றது.

பன்முக தேர்வுகள்: மாருதி சுஸுகி தன்னுடைய தயாரிப்புகளை பரந்த அளவு தேர்வில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனம் தன்னுடைய கார்களை அரேனா மற்றும் நெக்ஸா என இரு விதமான டீலர்ஷிப்புகள் வாயிலாக விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. அரேனா என்பது மலிவு விலை கார்களுக்கான ஷோரூம் ஆகும். நெக்ஸா, நிறுவனத்தின் பிரீமியம் தயாரிப்புகளுக்கான விற்பனையகம் ஆகும்.

அரேனா வாயிலாக, செலிரியோ, ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-பிரஸ்ஸோ, ஆல்டோ கே10 மற்றும் வேகன்ஆர் ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நெக்ஸா வாயிலாக இக்னிஸ், பலேனோ, சியாஸ், எக்ஸ்எல்6, கிராண்ட் விட்டாரா மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், விரைவில் ஜிம்னியையும் மாருதி சுஸுகி இணைக்க இருக்கின்றது.

சர்வீஸ் மையங்கள் மிக அதிகம்: பல பகுதிகளுக்கு லேண்ட் மார்க்காக மாருதி சுஸுகியின் சர்வீஸ் மையங்களே கூறப்படுகின்றன. அந்தளவிற்கு அதிகம் நாட்டில் நிறுவனத்தின் சேவை மையங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. விற்பனையகத்தைப் போலவே சேவை மையங்களும் அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்ற காரணத்தினாலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த காரணங்கள் மட்டுமில்லைங்க இன்னும் பல காரணங்கள் மாருதி சுஸுகி கார்கள் அதிகம் விற்பனையாக இருக்கின்றன. மலிவு விலை, குறைவான பராமரிப்பு செலவு மற்றும் அதிக மைலேஜ் திறன் இந்த காரணங்களுக்காகவும் மாருதி சுஸுகி கார்கள் அதிகம் நாட்டில் வாங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, April 28, 2023, 20:20 [IST]
English summary
Reasons behind maruti suzuki high sale number
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X