அடக்கி வைத்திருந்த ரேஸ் ஆசையை எல்லாம் கொட்டி தீர்த்த இளைஞர்கள்!! ரெட் ராபிட் ரேசர்ஸின் கோ-கார்ட் பந்தயங்கள்!

இந்தியாவின் முன்னணி கோ கார்ட் ரேசிங் குழுக்களுள் ஒன்று ரெட் ராபிட் ரேசர்ஸ் ஆகும். நாடு முழுவதும் ஒவ்வொரு நகரங்களாக கோ கார்ட் கார் பந்தயங்களை நடத்திவரும் இந்த குழு சமீபத்தில், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பெங்களூரில் டேலண்ட் ஸ்கௌட்டிங் புரோகிராம் என்ற கோ கார்ட் கார் பந்தயத்தை நடத்தியது. இந்த போட்டிக்கு நமது டிரைவ்ஸ்பார்க் அதிகாரப்பூர்வ மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது என ஏற்கனவே கூறியிருந்தோம்.

பெங்களூரின் அருணி கிரிட் என்ற பகுதியில் ரெட் ராபிட் ரேசர்ஸ் சார்பில் நடத்தப்பட்ட இந்த கார்ட் ரேசிங்கை நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் முழுமையாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். அத்துடன், இந்த கார்ட் ரேசிங்கில் ஆர்வமுடன் கலந்துக் கொண்ட தமிழ் மக்கள் உடனும் கலந்துரையாடி அவர்களது அனுபவங்களை கேட்டறிந்து உள்ளனர். இதுகுறித்த வீடியோவை கீழே காணலாம்.

இந்த கார்ட் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு உதவித்தொகை மற்றும் ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்டவை ரெட் ராபிட் ரேசர்ஸ் குழு சார்பில் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, திறமையான சில ரேசர்களுக்கு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள எஃப்1 கிராண்ட் ஃபிரிக்ஸ் போட்டியை நேரில் கண்டுக்களிப்பதற்கான வாய்ப்பையும் ரெட் ராபிட் ரேசர்ஸ் குழு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

red rabbit racers go-kart racing

மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ரெட் ராபிட் ரேசர்ஸ் குழு மூலமாக பல்வேறு ரேசர்கள் சர்வதேச அளவிற்கு முன்னேறியுள்ளனர். குறிப்பாக, 2020இல் துபாயில் நடைபெற்ற கார்ட் ட்ரோம் எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஓவர் ஆல் நேஷன் கோப்பைக்கான போட்டியில் ரெட் ராபிட் ரேசர்ஸ் குழு சார்பில் பங்கேற்ற ரேசர் வெற்றி கோப்பையை வென்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, September 4, 2023, 11:37 [IST]
English summary
Red rabbit racers talent scouting championship bengaluru
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+