ரத்த ஓட்டத்தையே சூடாக்கிட்டாங்க... பெங்களூருல இவ்ளோ சூப்பரான போட்டி நடந்துச்சா! அடச்சே மிஸ் பண்ணிட்டோமே!

ரெட் ரேபிட் ரேசர்ஸ் (Red Rabbit Racers)இன், டேலண்ட் ஸ்கவுட்டிங் நிகழ்வு பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற அருவாணி கிரிட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து 75க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பந்த வீரர்கள் கலந்துக் கொண்டனர். இதில், நமது டிரைவ்ஸ்பார்க்கும் கலந்துக் கொண்டது.

ஓர் பங்கேற்பாளராக மட்டுமல்ல, அதிகாரப்பூர்வ ஊடக பார்ட்னராகவும் நாங்கள் இந்த நிகழ்வில் பங்களிப்பை வழங்கினோம். நான்கு சுற்றுகளாக இந்த போட்டி நடைபெற்றது. பயிற்சி மற்றும் தகுதி சுற்று, நாக்கவுட் சுற்றுகள், செமி-ஃபைனல்ஸ் மற்றும் ஃபனல்ஸ் ஆகிய சுற்றுகளின் அடிப்படையிலேயே இந்த போட்டி நடைபெற்றது.

Red rabbit racer talent scout game

பயிற்சி மற்றும் தகுதி சுற்று (Practice and Qualifying): உண்மையில் முதல் சுற்று விழியை பிதுங்க செய்யும் வகையில் இருந்தது. சுமார் பத்து பயிற்சு சுற்றுகளை வீரர்கள் மேற்கொண்டனர். இது அவர்களுக்கு அந்த டிராக்கை பற்றியும், கார்ட்களை பற்றியும் நன்கு அறிந்துக் கொள்ள உதவியாக அமைந்தது.

இது வெறும் ஃபன்னான அனுபவத்திற்காக மட்டுமே செய்யப்படவில்லை. தங்களின் தகுதியை சுட்டிக் காட்டவும் இந்த சுற்றுகள் மிகுந்த உதவியாக இருந்தன. பங்கேற்பாளர்கள் நேரத்திற்குள் இலக்கை அடைய கடினமாக முயற்சித்தனர். ஆனால், செமி-ஃபைனல்ஸ் மற்றும் ஃபைனல்ஸ்களைப் போலவே இதுவும் விறு விறுப்பகாக காணப்பட்டது.

cart

நாக்கவுட் சுற்றுகள்: முந்தைய ரவுண்டைக் காட்டிலும் சுவாரஷ்யமானதாக இந்த ரவுண்டு இருந்தது. போட்டியாளர்கள் தாங்கள் கடைசி இருப்பதை விரும்பாமல் கடும் வேகத்தில் தங்களை முன்னேற்றிக் கொள்ள முயற்சித்தனர். எட்டெட்டு வீரர்களாக பங்கு கொள்ளப்பட்டு அவர்களில் மூன்று பேர் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆகையால், முதல் மூன்று இடத்தை பிடிக்க போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நடைபெற்றது.

செமி ஃபைனல்ஸ்: இந்த சுற்று மூன்றில் பத்து பேர் கொண்ட குழுவாக போட்டியாக நடைபெற்றது. இந்த ரவுண்டில் போட்டியாளர்கள் அதிகப்படுத்தப்பட்டு அடுத்தகட்டத்திற்கு முன்னேறுபவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதாவது, இறுதி சுற்றுக்கு இந்த பத்து பேரில் இருந்து இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

Red rabbit racer

ஆகையால், கடந்த சுற்றுகளைக் காட்டிலும் மிகக் கடுமையான போட்டி இந்த சுற்றில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு சிலருக்கு இறுதிச் சுற்றில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக வைல்டு கார்டு சுற்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் இருந்தும் சிலர் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதி சுற்று: வைல்டு கார்டை என்ட்ரியைத் தொடர்ந்தே இறுதி சுற்று எட்டு போட்டியாளர்களுக்கு இடையில் நடத்தப்பட்டது. இந்த சுற்றின் போது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல நம்மிடையும் பதற்றமான சூழலே தென்பட்டது. யார் இதில் வெற்றி பெறுவார்கள் என்கிற பதற்றமே தென்பட்டது. அதைவிட களத்தை சூடாக்கும் வகையில் கார்ட் வாகனங்கள் களத்தை அனல் பறக்கவிட்டன.

Red rabbit racer talent scout event

குறிப்பாக, கொடி அசைக்கப்பட்ட உடன் அனைத்து போட்டியாளர்களும் தரையில் இருக்கும் கற்களை தெறிக்கவிடும் வகையில் சக்கரை இயக்கவிட்டு கார்ட் வாகனங்களை பந்தய களத்தில் தெறிக்க விட்டனர். இதில், பி1, பி2, பி3 மற்றும் பி4 ஆகியவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் முன்னணி இடத்தை பி1 தக்க வைத்துக் கொண்டது.

பந்தையம் பற்றிய சுவாரஷ்ய தகவல்: ரெட் ரேபிட் ரேசர்ஸ் மற்றும் அருவாணி கிரிட் உறுப்பினர்களால் இந்த போட்டி மிகுந்த சுவாரஷ்யமாகவும், எந்த கோளாறும் இன்றி வெற்றிகரமாக நிறைவுற்றது. ஆர்3 குழுவினர் பங்கேற்பாளர்களுக்கு மிக சிறப்பான சப்போர்ட்டினை வழங்கி பிரம்மிப்பில் ஆழ்த்தினர். பரிசு வழங்கும் நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல பங்கேற்றவர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிறப்பித்தனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: த்ரில் நிறைந்த ஒரு மறக்க முடியாத நாள் என்றே இதனை கூறலாம். பங்கேற்பாளர்கள் தங்களின் தனி திறமையை வெளிக்காட்ட இந்த போட்டி பெரும் உதவியாக இருந்தது. மேலும், இந்த நிகழ்விற்கு பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது எங்களால் காண முடிந்தது. இதுபோன்று சுவாரஷ்யமான நிகழ்வுகள் இன்னும் அதிகளவில் இந்தியாவில் நடைபெற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது.

Article Published On: Wednesday, August 30, 2023, 17:44 [IST]
English summary
Red rabbit racers talent scouting event details are here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X