ரிலையன்ஸ் - அசோக் லேலண்ட் கூட்டணியில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் ஓடும் வாகனம்!

ரிலையன்ஸ் (Reliance), அசோக் லேலண்ட் (Ashok Leyland) இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் கனரக வாகனத்தை உருவாக்கி அசத்தி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஓர் புதுவிதமான டிரக்கை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹைட்ரஜன் - ஐசிஇ (Internal combustion engine) பவர்டு டிரக்கையே இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. அதாவது, ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் உள் எரிப்பு எந்திரம் கொண்ட வாகனத்தையே இரு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கி உள்ளன.

அசோக் லேலண்ட்

தூய்மை இயக்கம் திட்டத்தின்கீழே இந்த கனரக வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. கனரக வாகனங்களை டீசல் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கும் விதமாகவும் இவ்வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி பிற பசுமை எரிபொருள் உற்பத்தியைவிட சற்று காஸ்ட்லியானதாகக் காட்சியளிக்கின்றது. இருப்பினும், இது எதிர்காலத்தின் தேவையாக இருக்கின்றது. ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றனர்.

ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்கும் செலவுகளை குறைக்க நடவடிக்கை

அதேவேளையில் வெகு விரைவில் இந்த நிலை போக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, ஹைட்ரஜன் உற்பத்தி செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையிலேயே சில முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே அசோக் லேலண்டும் ரிலையன்ஸ் உடன் இணைந்து எச்2-ஐசிஇ பவர்டு ஹெவி ட்யூட்டி டிரக்கை உருவாக்கி இருக்கின்றது.

அசோக் லேலண்ட்

முழு விபரம் வெளியிடப்படவில்லை

இந்த வாகனத்தை வழக்கமான டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களைப் போலவே அசோக் லேலண்ட் உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், வழக்கமான டிரக்குகளைப் போலவே இதுவும் காட்சியளிப்பதை நம்மால் காண முடிகின்றது. தற்போது முன் மாதிரி மாடலாக மட்டுமே ஹைட்ரஜனில் இயங்கும் ஐசிஇ மோட்டார் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் வெகுஜன பயன்பாட்டிற்கான உற்பத்தியைத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மைலேஜ், எஞ்ஜின் திறன் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மிக தீவிரமாக ஈடுபட்டுட்டு வராங்க

விரைவில் இதுகுறித்த அனைத்து முக்கிய தகவல்களும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு சார்பில் தூய்மையான இயக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக வாகன உற்பத்தியாளர்கள் மின்சாரம் போன்ற பசுமை இயக்கம் வசதிக் கொண்ட வாகனங்களை உருவாக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், அசோக் லேலண்டும் மின்சாரத்தால் இயங்கும் டிரக், கன ரக வாகனங்கள் மற்றும் மினி பயணிகள் வேன்கள் போன்றவற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றையே சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் நிறுவனம் காட்சிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஹைட்ரஜனில் இயங்கும் வாகனத்தை உற்பத்தி செய்யும் பணியிலும் தங்கள் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது என்பதை வெளிக்காட்டும் விதமாக ஹைட்பஜன் - ஐசிஇ பவர்டு ட்ரக்கை அது காட்சிப்படுத்தி இருக்கின்றது.

மிக பெரிய உதவியை செய்யபோகுது

ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் அதிகம் மைலேஜ் தரக் கூடியவை ஆகும். அதேவேளையில், அவை மாசையும் வெளியேற்றாது. இதுவே இந்த வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு தீவிரமாக ஈடுபட்டுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதுதவிர, கச்சா எண்ணெய்க்கா பிற நாடுகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் சூழல் நம் நாட்டிற்கு உள்ளது. இதைத் தவிர்க்கவும் ஹைட்ரஜன் வாகனங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள்

அரசு கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்கும் விதமாக தற்போது எத்தனால் பவர்டு வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் ஹைட்ரஜன் வாகனங்களைப் போலவே ஃப்ளெக்ஸி ஃப்யூவல் (குறைவான பெட்ரோல், அதிக எத்தனால் கலக்கப்பட்ட) எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே மாருதி சுஸுகி அதன் வேகன்ஆர் ஃப்ளெக்ஸி ஃப்யூவல் வாகனத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 8, 2023, 20:13 [IST]
English summary
Reliance ashok leyland hydrogen ice powered heavy duty truck
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+