சென்னை துறைமுகத்திற்கு மிகப்பெரிய ஆர்டரை கொடுத்த வெளிநாட்டு நிறுவனம்! இனி ஒன்னொன்ன பேக் பண்ண வேண்டியது தான்!

இந்தியா சமீப நாட்களாக ஆட்டோமொபைல் மார்கெட்டிற்கு ஒரு மையமாக மாறி வருகிறது. இந்தியாவில் கார்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு மையமாகவும் இருக்கிறது. இந்தியாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள் போக வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் பங்கு கொள்கின்றன.

இந்தியாவில் ஏகப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டில் கார் தயாரிப்பு ஆலைகளை இந்தியாவில் வைத்திருக்கின்றனர். அவர்கள் அங்கு வைத்து கார்களை தயாரித்து உள்ளூரில் விற்பனை செய்வதையும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர்.

சென்னை துறைமுகத்திற்கு மிகப்பெரிய ஆர்டரை கொடுத்த வெளிநாட்டு நிறுவனம்! இனி ஒன்னொன்ன பேக் பண்ண வேண்டியது தான்!

இப்படி இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து கார்களை தயாரித்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்து வரும் நிறுவனம் ரெனால்ட் நிஸான். இந்த இரு நிறுவனமும் சர்வதேச அளவில் கூட்டணி அமைத்து அந்த கூட்டணி மூலம் இந்தியாவில் ஆலைகளை அமைத்து உற்பத்திகளைச் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளனர்.

இதற்காக இந்நிறுவனம் சென்னை காமராஜர் துறைமுகத்துடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளனர். அதன்படி இவர்கள் அந்த துறைமுகம் மூலம் ஆண்டிற்குக் குறிப்பிட்ட கார்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அந்நிய செலாவணி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கலாம்.

சென்னை துறை முகம் கடந்த 13 ஆண்டுகளில் மொத்தம் 1.15 மில்லியன் கார்களை உலகம் முழுவதும் உள்ள 108 இடங்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த துறை முகத்தில் 108 இடங்களுக்கு ஏற்றுமதி செய்யக் கப்பல் போக்குவரத்து வசதி இருக்கிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரெனால்ட் நிஸான் நிறுவனத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ஃபிராங்க் டொரஸ் அதன் பின் கூறும் போது : "இந்தியாவில் நீண்ட கால திட்டத்திற்காக ரெனால்ட் நிஸான் நிறுவனம் உழைத்து வருகிறது. தயாரிப்பை அதிகரிப்பது ஆய்வு மற்றும் மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்துவது.

எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்துவது. கார்பன் நியூட்டராலிட்டியை கடைப்பிடிப்பது எனப் பல திட்டங்களை வைத்துள்ளோம். தற்போது செய்யப்பட்டுள்ள இந் ஒப்பந்தம் இந்தியாவில் இந்த செயல்பாடுகளுக்கு நிச்சயம் பெரும் ஊக்கமாக இருக்கும். இந்தியாவில் ஏற்றுமதி அதிகரிக்கப் பயனுள்ளதாக இருக்கும். " எனக் கூறினார். இது குறித்த உங்கள் கருத்துக்களைக் காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 21, 2023, 16:00 [IST]
English summary
Renaul nissan joint venture signed an agreement with Chennai port for car export
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+