ரெனால்ட் கார்களை இந்த சலுகைகளுக்காகவே புதியதாக வாங்கலாம் போலயே!! ரூ.77,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்!

விற்பனையை அதிகரிக்கவும்/ ஊக்கப்படுத்தவும் பல்வேறு கார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக சலுகைகளை இந்த ஜூலை மாதத்திற்காக அறிவித்து வருகின்றன. இந்த வகையில், இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களாக விளங்கும் மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் அதன் குறிப்பிட்ட சில கார்களுக்கு ஜூலை மாதத்திற்கான சலுகைகளை அறிவித்ததை சமீபத்தில் பார்த்திருந்தோம்.

ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்த வரிசையில் இந்தியாவில் அதன் அனைத்து கார்களுக்கும் ஜூலை மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் தற்சமயம் க்விட், டிரைபர் மற்றும் கைகர் என மூன்றே மூன்று கார்களை மட்டுமே ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவை மூன்றிற்கும் ஜூலை மாதத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் வருமாறு...

renault cars discounts upto rs.77000

ரெனால்ட் க்விட்: ரெனால்ட்டின் காம்பெக்ட் ஹேட்ச்பேக் காரான க்விட்டிற்கு இந்த ஜூலை மாதத்திற்காக ரூ.57,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.15,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.12,000 வரையிலான கார்ப்பிரேட் போனஸ் மற்றும் ரூ.10,000 வரையிலான லாயலிட்டி போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

தற்போதைக்கு, க்விட் ஹேட்ச்பேக் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என்ற ஒரேயொரு என்ஜின் தேர்வை மட்டுமே ரெனால்ட் நிறுவனம் வழங்குகிறது. அதிகப்பட்சமாக 68 எச்பி மற்றும் 91 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜினை க்விட் காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பெறலாம்.

renault cars discounts upto rs.77000

ரெனால்ட் டிரைபர்: இந்தியாவில் தற்போதைக்கு நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஒரே ரெனால்ட் காரான இது (மற்றவை இரண்டும் அறிமுகமாகி சில வருடங்கள் மட்டும் ஆகுகின்றன) இந்த ஜூலை மாதத்தில் ரூ.52,000 வரையிலான சலுகைகள் உடன் விற்பனைக்கு கிடைக்கும். இதில் அதிகப்பட்சமாக எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.25,000 வரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணம் தள்ளுபடி ரூ.15,000 ஆகவும், கார்ப்பிரேட் தள்ளுபடி ரூ.12,000 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 7 இருக்கைகளை கொண்ட சப்-4 மீட்டர் எம்பிவி காரான டிரைபரிலும் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மட்டுமே ஒரே என்ஜின் தேர்வாக வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 72 எச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

renault cars discounts upto rs.77000

ரெனால்ட் கைகர்: ரெனால்ட்டின் அளவில்-சிறிய காம்பெக்ட் கிராஸ்ஓவர் எஸ்யூவி காரான கைகரை இந்த ஜூலை மாதத்தில் சுமார் ரூ.77,000 வரையிலான சலுகைகள் உடன் வாங்கலாம். இதில் ரூ.25,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.12,000 கார்ப்பிரேட் போனஸ் மற்றும் ரூ.20,000 வரையிலான லாயலிட்டி போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இந்தியாவில் இரு என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கும் ஒரே ரெனால்ட் கார் கைகர் ஆகும். இதில் 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 72 எச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், மற்றொரு என்ஜின் தேர்வான டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 எச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், வாகன விற்பனையை ஊக்கப்படுத்த அவ்வப்போது சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியமாகும். அதிலிலும் குறிப்பாக, ரெனால்ட் போன்ற சந்தையில் நிலையான இடத்தை பிடிக்க பல வருடங்களாக போராடிவரும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சலுகைகள் முக்கியமானது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 13, 2023, 7:30 [IST]
English summary
Renault cars discounts up to rs 77000
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X