இன்னும் ஒரே வாரம் தான்! ரெனால்ட் டஸ்டர் கார் மீண்டும் வரப்போகுது!
ரெனால்ட் நிறுவனம் வரும் 29ஆம் தேதி தனது டஸ்டர் காரின் புதிய அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதில் ஏகப்பட்ட அப்டேட்கள் வர உள்ளன. தற்போது விற்பனையில் இல்லாத கார் மீண்டும் புதிதாக அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளதால் இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. இந்த கார் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான ஒரு டிரெண்டையே துவக்கி வைத்த கார் என்று சொல்லலாம். தற்போது இந்தியாவில் எஸ்யூவி காரர்கள் தான் அதிகம் விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இதற்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டது டஸ்டர் கார் தான். அந்த கார் அறிமுகமான போதே மக்களின் கவனத்தை ஈர்த்தது. மக்கள் பலர் இந்த ரக காரை விரும்பி வாங்க ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் ரெனால்ட் நிறுவனம் இந்த காரின் விற்பனையை நிறுத்தியது. என்னதான் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டாலும் அதன் கார் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. குறிப்பாக செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் டஸ்டர் கார் என ஒரு மதிப்பு இருந்தது.
இன்றும் டஸ்டர் காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி தான் வருகின்றனர். இந்நிலையில் இந்த டஸ்டர் காரை மீண்டும் புதுப்பித்து தற்போது உள்ள ட்ரெண்டுக்கு ஏற்ற காராக மாற்றி அதை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது.

இதற்கு செவி சாய்க்கும் வகையில் ரெனால் நிறுவனம் தனது டஸ்டர் காரை மாற்றியமைத்து வந்தது. அதற்கு குறித்த புகைப்படங்கள் எல்லாம் ஏற்கனவே வெளியான நிலையில், வரும் 29ம் தேதி போர்ச்சுகலில் இந்த ரெனால்ட் டஸ்டர் காரை மையப்படுத்திய டாசிக்கா நிறுவனத்தின் கார் அறிமுகமாக போகிறது. அதே கார் தான் இந்தியாவில் டஸ்டர் காராக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய டஸ்டர் காரில் டிசைன் கிட்டத்தட்ட பழைய காரை டிசைனை போலவே இருந்தாலும், அதில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக இதில் நீளவாக்கிலான எல்இடி லைட்டுகள் புதிய ரேடியேட்டர் கிரில் மாற்றி அமைக்கப்பட்ட பம்பர் உள்ளிட்டவை, இதில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பொருத்தவரை ஒய் வடிவ லைட் கிளஸ்டர்கள்.

புதிய டஸ்டர் காரின் உட்புறத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்ட உள்ளன. முக்கியமான புதிய அப்ஹோல்சரி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டு இதில் பொருத்தப்பட உள்ளது மேலும் பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8 இன்ச்க்கு குறையாத அளவில் இடம்பெறவுள்ளது. இதுபோக டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, பேனரோமிக் சன் ரூஃப், ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், வைஃபை, உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் இடம் பெற உள்ளன.
இந்த காரை நிறுவனம் சிஎம்எஃப் பி பிளாட்பார்மில் தான் தயாரிக்கிறது. இந்த பிளாட்பார்மில் தான் அடுத்த தலைமுறை டஸ்டர் காரும் இந்தியாவில் வெளியாகும் போது தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே தான் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் புதிதாக வரப்போகும் டஸ்டர் கார் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களை கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்த காரில் இடம் பெறும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் நமக்கு இல்லை.
இந்த புதிய ரெனால்ட் டஸ்டர் காரின் இன்ஜினை பொறுத்தவரை பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதில் 1.2 லிட்டர் மைல்டு இன்ஜின் 130 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். அதே நேரம் 1.6 லிட்டர் ஹைபிரிட் இன்ஜினும் பொருத்தப்படும் இது 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் வரும் நவம்பர் 29ம் தேதி போர்ச்சுக்கல் நாட்டில் மட்டுமே அறிமுகம் உள்ளது. இதே கார் தான் இந்தியாவிற்கும் அடுத்தடுத்த சில ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2025ம் ஆண்டு தான் இந்த கார் இந்தியாவிற்கு வர உள்ளது. அப்பொழுது ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் என்னென்ன தொழில்நுட்பங்கள் எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் அப்டேட் செய்யப்பட்டு இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாக இந்தியாவிற்கு ரெனால்ட் டஸ்டர் கார் வந்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிற்கும் ஏற்கனவே இந்த காருக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த காரின் வருகைக்காக மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த கார் களமிறங்கும் போது இதன் விற்பனை நிச்சயம் அபரிவிதமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









