தலைவனை வெளியீடு செஞ்சுட்டாங்க.. புதிய அவதாரம் செம ஸ்டைலா இருக்கா! டஸ்டர் இப்படி ரெடியாகும்னு எதிர்பார்க்கல!

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) கார் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. புதிய தலைமுறையின்கீழ் இந்த காரில் என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன?, மேலும், என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன? இந்தியாவில் இந்த கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றிய அனைத்து விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கார் ஆர்வலர்கள் பலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) இருக்கின்றது. இந்தியாவில் ரெனால்ட் பிராண்ட் விற்பனைச் செய்த சூப்பரான கார் மாடல்களில் ஒன்றாக டஸ்டர் இருக்கின்றது. இந்த கார் மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக விற்பனையில் இருந்து வெளியேற்றியது, ரெனால்ட்.

Renault duster front style

ஆனால், இது தற்காலிக வெளியேற்றம் என்று தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் புதிய தலைமுறை டஸ்டர் உற்பத்தியில் களமிறங்கியது. இந்த காரையே அது தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. ரெனால்ட் பிராண்டின் சகோதர பிராண்டான டாசியா (Dacia)-வே அதனை வெளியீடு செய்திருக்கின்றது.

போர்ச்சுகல் நாட்டிலேயே இந்த காரின் வெளியீட்டு நிகழ்வு தற்போது அரங்கேறி இருக்கின்றது. அடுத்த ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில், ஐரோப்பிய சந்தையிலேயே இந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.

Renault duster seat

இதற்கு பின்னரே தன்னுடைய உலக நாடுகளுக்கான பயணத்தை புதிய டஸ்டர் தொடங்க இருக்கின்றது. இந்த நிலையிலேயே, அதாவது, விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு புதிய தலைமுறை டஸ்டரை, டாசியா வெளியீடு செய்துள்ளது. பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த டஸ்டர் காட்சியளிக்கின்றது.

மிக முக்கியமாக இதன் வெளிப்புற தோற்றம் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இதனை சாலையில் பார்க்கும் போது, டஸ்டர் தானா என்கிற சந்தேகம் கட்டாயம் நம்மில் பலருக்கு ஏற்படக் கூடும். அந்த அளவிற்கு வெளிப்புறத்தில் மிகப் பெரிய மாற்றத்தை டாசியா கொண்டு வந்திருக்கிறது.

Renault duster dashboard

ரெனால்ட் நிறுவனத்தின் பிரபல கான்செப்ட் மாடலான பிக்ஸ்டர் (Bigster)-ஐ தழுவியே இந்த புதிய தலைமுறை டஸ்டர் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், கவர்ச்சியிலும், நவீன தொழில்நுட்பத்திலும் தலைசிறந்த தயாரிப்பாக டஸ்டர் காட்சியளிக்கின்றது. இதற்கு காரின் முகப்பு பகுதி சான்றாக உள்ளது. மிகவும் தனித்துவமான தோற்றத்தை வழங்கக் கூடிய அம்சங்களையே டஸ்டரின் முன் பக்கத்தில் டாசியா சேர்த்து இருக்கின்றது.

மிகவும் முரட்டுத் தனமான லுக்கையே டஸ்டரின் முன் பக்கம் கொண்டிருக்கின்றது. இதற்காக, பான்னெட் தொடங்கி பம்பர் வரை அனைத்தும் அதிக கட்டுமஸ்தான தோற்றத்தில் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், ஆங்கில எழுத்து ஒய் வடிவ எல்இடி டிஆர்எல் போன்ற அதன் அழகிற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

Renault duster interior

பனி மின் விளக்கு மற்றும் ஏர் வெண்டுகள் போன்றவை காரின் பம்பரிலேயே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. முன் பக்கத்தை போலவே பக்கவாட்டு பகுதியையும் இந்த கார் பார்த்து பார்த்து வடிவமைத்து இருக்கின்றது. கருப்பு நிற பேனல் இந்த காரின் முன்பக்கத்தில் தொடங்கி பக்கவாட்டின் அடிப் பகுதி வழியாக பின் பக்கம் வரை நீண்டுக் காணப்படுகின்றது.

மேலும், காரின் முன் பக்க டோரிலும் ஓர் பட்டையான அமைப்புடைய கருப்பு நிற பேனல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், பின்னால் வரும் வாகனத்தை பார்க்க உதவும் கண்ணாடிகளிலும் கருப்பு நிற பேனல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காருக்கு அழகு சேர்க்கும் விதமாக காரின் பின்பக்க டோர்களில் கை பிடி சற்று உயரமாக, பில்லர்களுக்கு அருகில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Renault duster rear

வீலை பொருத்த வரை 18 அங்குல வீல்கள் உயர் நிலை தேர்விலும், 17 அங்குல வீல் ஆரம்ப நிலை தேர்விலும் ஆப்ஷன்களாக வழங்கப்பட இருக்கின்றது. இவற்றுடன், காருக்கு கூடுதல் ஸ்டைலான லுக்கை வழங்கும் விதமாக ரூஃப் ரெயிலும், பக்கவாட்டு பகுதியின் முனையையும் பின்பக்கத்தையும் இணைக்கும் வகையில் ஸ்டாப் லைட் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும் போது இதே அம்சங்களுடன் டஸ்டர் வரும் என கூறிவிட முடியாது. இதில் லேசாக சில மாற்றங்களைச் செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது பற்றிய விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

டஸ்டர் காரில் சிறப்பம்சங்களையும் டாசியா வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 7 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஒய் வடிவ ஏசி வெண்ட்கள், தட்டையான அடிப் பகுதி கொண்ட ஸ்டியரிங் வீல் - பன்முக கன்ட்ரோல்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, புதிய டஸ்டரில் அடாஸ் போன்ற நவீன கால தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஆகையால், இந்த எஸ்யூவிக்கு பிரீமியம் கார் விரும்பிகள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடாஸ் அம்சத்தின் வாயிலாக லேன் சேஞ்ச் வார்னிங் அசிஸ்ட், டிராஃபிக் சமிக்ஞைகளைக் கண்டறிந்து அதன்படி வழி நடத்தும் வசதி உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த அம்சங்களுடன் சேர்த்து அதிக மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புதிய டஸ்டரில் 48 வோல்ட் மைலைடு ஹைபிரிட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்துடன் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வே புதிய டஸ்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், 1.6 லிட்டர் மோட்டார் மற்றும் ஹைபிரிட் பெட்ரோல் ஆப்ஷன், 1.0 லிட்டர் மோட்டார் ஆப்ஷன் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது இந்த காரில் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சில அதிரடி நடவடிக்கைகளை ரெனால்ட் கடந்த காலங்களில் மேற்கொண்டது. இதன் அடிப்படையிலேயே பிரபல எஸ்யூவி கார் மாடலான டஸ்டரை அது விற்பனையில் இருந்து வெளியேற்றியது. தற்போது அது புதிய தலைமுறையாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 29, 2023, 20:29 [IST]
English summary
Renault duster suv new gen officially revealed here is more deatils
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X