இனி தெருக்கு தெரு ஷோரும் வரும்! ரெனால்ட் நிறுவனம் என்ன பண்ண போறாங்க தெரியுமா? கேட்டா அசந்து போயிடுவீங்க!
ரெனால்ட் நிறுவனம் நகரும் ஷோரூம் மற்றும் நகரும் ஒர்க் ஷாக் ஆகிய இரண்டு புதிய முன்னெடுப்புகளை துவங்கியுள்ளது. இனி யாரும் கார் வாங்க ஷோரூம் தேடி அலைய வேண்டியதில்லை, நீங்கள் இருக்கும் இடத்திற்கே ஷோரூம் வரப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவின் முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் டஸ்டர் கார் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து இந்நிறுவனம் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. இந்நிறுவனத்திலும் தற்போது பெரிய அளவில் கார்கள் இல்லை என்றாலும் இந்தியாவில் இந்நிறுவனம் புதிய முதலீடுகளை கொண்டு வந்து கார்களை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் ரெனால்ட் நிறுவனத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட அந்நிறுவனம் இரண்டு புதிய முன்னெடுப்புகளை துவங்கி உள்ளது. "ஷோரூம் ஆன் வீல்ஸ்" மற்றும் "ஒர்க் ஷாப் ஆன் வீல்ஸ்" ஆகிய இந்த இரண்டு முன்னெடுப்புகள் தற்போது தேசிய அளவில் துவங்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இது செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள 26 மாநிலங்கள் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள 625 இடங்களில் இந்த "ஷோரூம் ஆன் வீல்ஸ்" மற்றும் "ஒர்க் ஷாப் ஆன் வீல்ஸ்" நேரடியாக செல்ல இருக்கிறது. இப்படியான முன்னெடுப்பு ஆட்டோமொபைல் துறையிலேயே முதன்முறையாக ரெனால்ட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஷோரூம் ஆன் வீல்ஸ் முன்னெடுப்பில் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஷோரூமுக்கு சென்று காரை எப்படி தேர்வு செய்வாரோ அதே அனுபவத்தை வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே சென்று வழங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கார்களை நேரடியாக சென்று பார்த்து வாங்க முடியும்.
இந்த ஷோரூம் ஆன் வீல்ஸ் திட்டத்தில் அந்த இடத்திலேயே டெஸ்ட் டிரைவ் புக்கிங் மற்றும் கார் பைனான்ஸ் ஆப்ஷன் தேர்வு செய்து காரை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும். இந்த ஷோரூமில் ரெனால்ட் நிறுவன கார்களின் டிஸ்ப்ளேகள் வைக்கப்பட்டிருக்கும். இதில் வாகனம் குறித்த தகவல்கள் எல்லாம் இருக்கும்.
இங்கு வாடிக்கையாளர்கள் முழுமையாக ஒரு கார் வாங்கும் அனுபவம், காரில் உள்ள தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் அனுபவம், காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், புதிய தொழிற்நுட்பங்கள் டெஸ்ட் டிரைவ்கள் ஆகிய ஷோரூம் சென்று ஒருவர் கார் வாங்கும் போது பெரும் அனுபவம் எல்லாம் கிடைக்கும்.
அடுத்ததாக "ஒர்க் ஷாப் ஆன் வீல்ஸ்" திட்டத்தின் படி வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று அவர்களது ரெனால்ட் வாகனத்தை சர்வீஸ் மற்றும் பராமரிப்பு செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த "ஒர்க் ஷாப் ஆன் வீல்ஸில்" நவீன டூல்ஸ் திறமையான டெக்னீஷியன்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.
இதன் மூலம் ரெனால்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 530 டச் பாய்ண்ட்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. ரெனால்ட் நிறுவனத்திலும் தற்போது , டிரைபர், டைகர், க்விட் ஆகிய மூன்று கார்கள் மட்டுமே விற்பனையாகி வருகிறது. ஆனால் விரைவில் புதிதாக இரண்டு இன்டர்னல் கம்பேஷன் இன்ஜின் கார்களும் ஒரு எலெக்ட்ரிக் கார்களும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் நிஸான் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டை உள்ளே கொண்டுவர இருக்கிறது. அதன்படி ரெனால்ட் பிராண்டில் மூன்று கார்கள் விற்பனைக்கு வர உள்ளன. அந்த கார்கள் விற்பனைக்கு வரும் முன் தனது விற்பனை நெட்வொர்க்கை பெரிதாக்கும் முயற்சியில் இதை கையில் எடுத்துள்ளது. இது ரெனால்ட் நிறுவனத்திற்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Click it and Unblock the Notifications








