இவ்வளவு நாளா ரெனால்ட் பதுங்குனதுக்கு காரணம் இப்படி பாய்வதற்கு தானா? மத்தவங்க எல்லாம் வெட வெடத்து போயிட்டாங்க!

ரெனால்ட் நிறுவனம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் களம் இறக்க உள்ள புதிய டஸ்டர் காரில் பல புத்தம் புதிய அம்சங்கள் எல்லாம் இடம்பெறும் என தெரியவந்துள்ளது. இந்த காரை ரெனால்ட் நிறுவனம் போட்டி நிறுவன கார்களில் இல்லாத வசதிகள் நிறைந்த காராக உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து கார் தயாரிப்பாளையை உருவாக்கி ஒரே ஆலையில் நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய இரண்டு தனித்தனி பிராண்ட் கார்களை தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் தான் மிட் சைஸ்மெண்டில் அறிமுகமாகி அந்த செக்மெண்டையே பிரபலப்படுத்தியது.

renault duster update

தற்போது இந்தியாவில் அதிகமான கார்கள் விற்பனையாகும் செக்மென்ட் ஆகவும் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக லாபம் தரும் செக்மெண்டாகவும் இந்த மிட்-சைஸ் செக்மெண்ட் தான் உள்ளது. ஆனால் டஸ்டர் கார் தற்போது விற்பனையில் இல்லை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் இந்த கார் மீண்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவில் ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனத்திற்கு தங்கள் நிறுவனத்தை வளர்க்க இந்திய மதிப்பில் சுமார் ரூ. 5300 கோடி முதலீடு கிடைத்துள்ளது.

renault duster update

இந்த பணத்தை வைத்து நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனம் தங்கள் கார்களின் அணிவகுப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் ஆறு புதிய கார்கள் விற்பனைக்கு வரவுள்ளது. அதில் மூன்று கார்கள் ரெனால்ட் நிறுவனத்தின் பிராண்டிலும் மூன்று கார்கள் நிஸான் நிறுவனத்தின் பிராண்டிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

பிராண்டுக்கு தலா மூன்று கார்கள் என பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இரண்டு கார்கள் கம்பேஷன் இன்ஜின் காராகவும் ஒரு கார் எலெக்ட்ரிக் கார் ஆகவும் களமிறங்க உள்ளது. நிஸான்- ரெனால்ட் நிறுவனம் சேர்ந்து வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் கார் அணிவகுப்புகளை முழுவதும் ஜீரோ எமிஷன் கார்களாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளது.

renault duster update

அந்தக் கொள்கைக்கு வித்திடும் வகையில் தான் எலெக்ட்ரிக் கார்களை களம் இறங்குகிறது. ரெனால்ட் நிறுவனத்தை பொருத்தவரை கடந்த நிதியாண்டு விற்பனை 9 சதவீதம் வரை குறைந்திருந்தது. மொத்தம் 87, 118 கார்கள் விற்பனையாகி இருந்தன. இந்நிலையில் இந்த நிதியாண்டிலும் இதே அளவிலான விற்பனை தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் வரும் 2024 ஆம் ஆண்டு புதிய கார்களின் அறிமுகத்தால் விற்பனை பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்கள் கணித்து வருகிறது. இதற்காக தான் இந்த நிறுவனம் தற்போது மிட்-சைஸ் செக்மென்டை குறி வைத்துள்ளது. தற்போது இந்த செக்மெண்டில் கிரெக்டா, செல்டோஸ்கிராண்ட் விட்டாரா, அர்பன் க்ரூஸர் ஹைரைடர், குஷாக், டைகுன், அஸ்டர் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது.

விரைவில் இந்த செக்மெண்டில் ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்கள் களமிறங்க உள்ளன. தற்போது ரெனால்ட் நிறுவனத்திடம் க்விட் என்ற என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார், கைகர் என்ற காம்பேக்ட் எஸ்யூவி கார் டிரைபர் என்ற பட்ஜெட் எம்பிவி கார் ஆகியன இந்தியாவில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிக எஸ்யூபி செக்மென்ட் மிக சிறப்பாக விற்பனையாகி வரும் செக்மென்ட் ஆகும். இதனாலே இந்த செக்மெண்டில் மிகப்பெரிய அளவில் போட்டி இருக்கிறது. ரெனால்ட் டஸ்டர் போன்ற ஒரு காரை மீண்டும் கொண்டுவரும் பட்சத்தில் இந்த செக்மெண்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படும். பலர் இந்த காரை வாங்க ஆர்வமாக இருப்பார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More from DriveSpark

Article Published On: Monday, July 17, 2023, 13:09 [IST]
English summary
Renault india launching innovative duster rival to creta
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X